search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    கடலூர் சாலை முதலியார் பேட்டையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

    புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
    • இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    இதனால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் சி.ஐ.டி.யூ. தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், சாலையோர சங்க நிர்வாகிகள் வடிவேலு, துரியன், வீரமணி, அழகுராஜ் உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அப்போது அவர்கள் பண்டிகை காலங்களில் இதுபோல நடைபாதை கடைகளை அகற்றினால் அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றமாறு வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் புதுவையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடலூர் சாலை முதலியார் பேட்டை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்க்கு சிறு குறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மற்றும் தொடர் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து புதுவை அரசு பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரப்பாலத்தில் இருந்து முள்ளோடை வரை புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    முதல் கட்டமாக இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பக்கத்திலும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இயந்திர உதவியோடு செய்து வந்தனர்.

    ஆனால் பெயரில் மட்டுமே இந்த ஆக்கிரமிப்பு ஆகற்றும் பணி நடைபெற்றது. விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர் மட்டுமே தற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு அதே நிலையில் காணப்படுகிறது.

    சாலை நடுவே தடுப்புகள் அமைத்ததால் இருவழி சாலையாக உள்ளது. சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்கும் இடங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

    எனவே புதிய தார் சாலை போடுவதற்கு முன்பாக சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×