search icon
என் மலர்tooltip icon

    கணினி

    AMOLED ஸ்கிரீன், எல்டிஇ ஆப்ஷனுடன் கூகுள் பிக்சல் வாட்ச் அறிமுகம்
    X

    AMOLED ஸ்கிரீன், எல்டிஇ ஆப்ஷனுடன் கூகுள் பிக்சல் வாட்ச் அறிமுகம்

    • கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பிக்சல் வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய பிக்சல் வாட்ச் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    கூகுள் நிறுவனத்தின் மேட் பை கூகுள் 22 நிகழ்வில் பிக்சல் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் பிக்சல் வாட்ச் வியர் ஒஎஸ் 3.5 மற்றும் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இத்துடன் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை வழங்க பிட்பிட் இண்டகிரேஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய பிக்சல் வாட்ச் மாடலில் வட்வ வடிவில் 3டி டோம்டு கிளாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி கொண்டிருக்கிறது. பிக்சல் வாட்ச் ஸ்கிராட்ச் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இது வலதுபுறம் கிரவுனிற்கு மேல் பட்டன் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இது சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட செயலிகளை காண்பிக்கும். இத்துடன் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு விவரங்களை கச்சிதமாக டிராக் செய்வதோடு, ஜிபிஎஸ் வசதி, இசிஜி ஆப் சப்போர்ட், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிட்பிட் செயலியுடன் இணைந்து செயல்படும் வசதியை பிக்சல் வாட்ச் கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் வாட்ச் 32 ஜிபி மெமரி, மூன்று மாதங்களுக்கு இலவச யூடியூப் பிரீமியம் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் வாட்ச் மாடல் ஷேம்பெயின் கோல்டு கேஸ் மற்றும் ஹசெல் ஆக்டிவ் பேண்ட், மேட் பிளாக் கேஸ் மற்றும் அப்சிடியன் ஆக்டிவ் பேண்ட், பாலிஷ்டு சில்வர் கேஸ் மற்றும் சார்கோல் ஆக்டிவ் பேண்ட் மற்றும் சாக் ஆக்டிவ் பேண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 20-க்கும் மேற்பட்ட பேண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய பிக்சல் வாட்ச் ப்ளூடூத் வெர்ஷன் விலை 349.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் எல்டிஇ வெர்ஷன் விலை 399.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரத்து 870 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி துங்குகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    Next Story
    ×