search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இந்தியாவில் வெளியானது பிக்சல் 7 சீரிஸ் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவில் வெளியானது பிக்சல் 7 சீரிஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
    • பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 120Hz வரையிலான வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்- பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிக்சல் 7 மாடலில் 6.32 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், சிறிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளே, 10-120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் டென்சார் ஜி2 பிராசஸர், 5ஜி சப்போர்ட், டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 6 சீரிஸ் மாடல்களை போன்றே புதிய ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கின்றன. புது பிக்சல் போன்களுக்கு மூன்று ஆண்டுகள் ஒஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும்.

    புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 7 ப்ரோ மாடலில் மட்டும் ஆட்டோபோக்கஸ் அல்ட்ராவைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 48MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் 4335 எம்ஏஹெச் பேட்டரியும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிக்சல் 7 அம்சங்கள்:

    6.32 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    கூகுள் டென்சார் பிராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப்

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    10.8MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4335 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    வயர்லெஸ் சார்ஜிங்

    பிக்சல் 7 ப்ரோ அம்சங்கள்:

    6.7 இன்ச் 3120x1440 பிக்சல் LTPO+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    கூகுள் டென்சார் ஜி2 பிராசஸர் மற்றும் டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப்

    12 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு ஆட்டோபோக்கஸ் கேமரா

    48MP டெலிபோட்டோ கேமரா

    10.8MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    வயர்லெஸ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய பிக்சல் 7 ஸ்மார்ட்போன் அப்சிடியன், லெமன்கிராஸ் மற்றும் ஸ்னோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசெல் மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 84 ஆயிரத்து 999 ஆகும். இவற்றின் விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    அறிமுக சலுகைகள்:

    அக்டோபர் 6 முதல் 9 ஆம் தேதிக்குள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.

    அக்டோபர் 6 முதல் 13 ஆம் தேதிக்குள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ஆறு மாதத்திற்கு ஸ்கிரீன் டேமேஜ் ப்ரோடக்‌ஷன் சலுகை வழங்கப்படுகிறது.

    பிட்பிட் இன்ஸ்பயர் 2 மாடலை ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    Next Story
    ×