என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்
முன்பதிவில் அசத்திய ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் - விலை, விற்பனை எப்போ?
- ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.
- ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது.
ரியல்மி (Realme) இந்தியாவில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்றது.
அந்த வகையில் புதிய ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்களை வாங்க 6 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்டர் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது நம்பர் சீரிஸ் வரலாற்றில் ரியல்மிக்கு ஒரு புதிய சாதனை ஆகும்.
ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G 6.7-இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7s Gen 2 பிராசஸர், 12 GB வரை ரேம் மற்றும் 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இத்துடன் 50MP Sony LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ 8GB + 12GB மாடலின் விலை ரூ.26,999 என்றும், 8GB + 256GB விலை ரூ.28,999 என்றும் 12GB + 512GB மாடலின் விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 8GB + 256GB மாடலின் விலை ரூ.32,999 என்றும், 12GB + 256GB மாடலின் விலை ரூ.34,999 என்றும் 12GB + 512GB மாடல் விலை ரூ.36,999 என நிர்ணிக்கப்பட்டு இருக்கிறது.