search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    மூன்றாக மடிக்கலாம் - புதிய ஃபோல்டபில் போன் உருவாக்கும் சாம்சங்
    X

    மூன்றாக மடிக்கலாம் - புதிய ஃபோல்டபில் போன் உருவாக்கும் சாம்சங்

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • 2022 ஆண்டு சாம்சங் நிறுவனம் இரண்டு வழிகளில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை காட்சிப்படுத்தி இருந்தது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபேன் எடிஷன் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனினை உருவாக்கவில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனிற்கு மாறாக சாம்சங் நிறுவனம் டிரை-ஃபோல்டு டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஒற்றை ஹிஞ்ச் வழங்கப்ப்ட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் நறுவனம் மூன்று மடிக்கும் பாகங்களை கொண்ட கான்செப்ட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது.

    டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 FE மாடலை உருவாக்கவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சாம்சங் தனது கேலக்ஸி S21 FE மாடலின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்யவில்லை. கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி S23 FE வெளியீடு பற்றி சாம்சங் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் கவனம் செலுத்துவதற்கு மாற்றாக சாம்சங் நிறுவனம் மேம்பட்ட Z சீரிஸ் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இவை கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் டிரை-ஃபோல்டு டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×