என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  யுஎஸ்பி டைப் சி போர்ட் உடன் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 - வெளியீடு எப்போ தெரியுமா?
  X

  யுஎஸ்பி டைப் சி போர்ட் உடன் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 - வெளியீடு எப்போ தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிள் நிறுவனம் யுஎஸ்பி சி போர்ட் கொண்ட ஏர்பாட்ஸ் ப்ரோ 2 உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலின் உற்பத்தி குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.


  ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 பற்றிய தகவல்களை பிரபல வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டுள்ளார்.

  முன்னதாக ஐஒஎஸ் 16.4 பீட்டா வெர்ஷனில் இதுபற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக வல்லுனர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த இயர்பட்ஸ்-இன் உற்பத்தி இந்த ஆண்டின் இரண்டு அல்லது மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.

  ஏர்பாட்ஸ் 2 மற்றும் ஏர்பாட்ஸ் 3 மாடல்களில் யுஎஸ்பி டைப் சி வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்படாது. லைட்னிங் போர்ட்-இல் இருந்து யுஎஸ்பி சி போர்ட்-க்கு மாறும் ஆப்பிள் நிறுவனத்தின் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த புதிய விதிமுறைகள் காரணமாக அமைந்துள்ளன.

  சர்வதேச சந்தையில் அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட் மற்றும் இதர மின்சாதனங்களில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

  அதன்படி ஆப்பிள் நிறுவனம் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட மேக் மற்றும் ஐபேட் சாதனங்களை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் ஏர்பாட்ஸ் மற்றும் ஐபோன் மாடல்களில் லைட்னிங் கனெக்டரே வழங்கப்பட்டு இருக்கிறது.

  சமீபத்தில் வெளியான ஐஒஎஸ் 16.4 பீட்டா வெர்ஷனில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

  Next Story
  ×