search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    டென்சார் சிப்செட் கொண்ட பிக்சல் டேப்லெட் - அசத்தல் டீசர் வெளியீடு
    X

    டென்சார் சிப்செட் கொண்ட பிக்சல் டேப்லெட் - அசத்தல் டீசர் வெளியீடு

    • கூகுள் நிறுவனம் தனது மேட் பை கூகுள் 22 நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
    • டென்சார் சிப்செட் கொண்ட புதிய கூகுள் பிக்சல் டேப்லெட் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மே மாத வாக்கில் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், மேட் பை கூகுள் 22 நிகழ்வில் புதிய பிக்சல் 7 சீரிஸ் வெளியீட்டின் போது பிக்சல் டேப்லெட் மாடல் சார்ஜிங் டாக் உடன் விற்பனை செய்யப்படும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது.

    சார்ஜிங் டாக்-இல் ஸ்பீக்கர் இடம்பெற்று இருக்கிறது. இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. பிக்சல் டேப்லெட்-ஐ டாக் செய்ததும் அது ஹேண்ட்ஸ்-ஃபிரீ அசிஸ்டண்ட் அல்லசு போட்டோ ஃபிரேம் போன்று செயல்படும். மேலும் இது ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்கவும் வழி செய்கிறது. இந்த சார்ஜிங் டாக்-இல் உள்ள காந்தம் பிக்சல் டேப்லெட்டை எளிதில் டாக் மற்றும் அன்டாக் செய்ய உதவுகிறது.

    பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டென்சார் ஜி2 பிராசஸர் தான் பிக்சல் டேப்லெட் மாடலிலும் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் தலைசிறந்த இமேஜ் பிராசஸிங் மற்றும் மெஷின் லெர்னிங் வசதிகளை வழங்குகிறது. இத்துடன் பிக்சல் போன் அம்சங்களான வீடியோ காலிங், போட்டோ எடிட்டிங், ஹேண்ட்ஸ் ஃபிரீ கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை பிக்சல் டேப்லெட் கொண்டிருக்கிறது.

    இந்த டேப்லெட் பிரீமியம் நானோ செராமிக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதில் பெரிய ஸ்கிரீன் வழங்கப்படுவது மட்டும் தெரியவந்துள்ளது. ஸ்கிரீன் அளவு, ரெசல்யூஷன் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    Next Story
    ×