search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் - முதல் முறையாக வெளியான சூசக தகவல்!
    X

    சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் - முதல் முறையாக வெளியான சூசக தகவல்!

    • சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
    • முதல் முறையாக சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் கேலக்ஸி S23 வெளியீடு பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார்.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டை 2023 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டின் முதல் அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வு கொரோனா பெருந்தொற்றுக்கு பின் முதல் முறையாக பொது மக்கள் முன்னிலையில் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் இதன் வெளியீடு நடைபெறும்.

    முன்னதாக இதே போன்று வெளியான மற்ற தகவல்களில் சாம்சங் தனது கேலக்ஸி S23 சீரிஸ் பற்றிய அறிவிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் நடைபெற இருக்கும் 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன (CES) நிகழ்வில் வெளியிடலாம் என்றும் கூறப்பட்டது. எனினும், சாம்சங் தனது S சீரிஸ் மாடல்களை இவ்வாறு அறிமுகம் செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அம்சங்களை பொருத்தவரை சர்வதேச சந்தையில் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய கேலக்ஸி S23 பிளாக்‌ஷிப் சீரிஸ் மாடல்களின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் ஏற்கனவே இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    அதன்படி கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் முந்தைய கேலக்ஸி S22 சீரிசில் வழங்கப்பட்டதை விட பெரிய பேட்டரி வழங்கப்படலாம். கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பெசல்கள், 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP கேமரா, 10MP கேமரா மற்றும் 10MP செல்பி கேமரா வழங்கப்படலாம்.

    Photo Courtesy: Onleaks X Digit.in

    Next Story
    ×