என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  கேலக்ஸி S23 ஃபிளாக்ஷிப் சீரிஸ் இந்திய விலை மற்றும் சலுகை விவரங்கள் வெளியீடு
  X

  கேலக்ஸி S23 ஃபிளாக்ஷிப் சீரிஸ் இந்திய விலை மற்றும் சலுகை விவரங்கள் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன.
  • சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புது ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டன.

  சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 சீரிசில்- கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில் கேலக்ஸி S23 சீரிஸ் இந்திய விலை விவரங்களை சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

  அதன்படி கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 74 ஆயிரத்து 999, ரூ. 94 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இவை சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி S22 சீரிஸ் விலையை விட அதிகம் ஆகும். அமெரிக்காவில் புது சாம்சங் ஃபிளாக்ஷிப் போன்களின் விலை இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 445 என துவங்குகிறது.

  விலை விவரங்கள்:

  சாம்சங் கேலக்ஸி S23 (8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி) ரூ. 74 ஆயிரத்து 999

  சாம்சங் கேலக்ஸி S23 (8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) ரூ. 79 ஆயிரத்து 999

  சாம்சங் கேலக்ஸி S23 பிளஸ் (8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) ரூ. 94 ஆயிரத்து 999

  சாம்சங் கேலக்ஸி S23 பிளஸ் (8ஜிபி ரேம், 512ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999

  சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999

  சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (12ஜிபி ரேம், 512ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999

  சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (12ஜிபி ரேம், 1டிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999

  அறிமுக சலுகை விவரங்கள்:

  புதிய சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  1. கேலக்ஸி S23 (256ஜிபி) மெமரி மாடலை 128 ஜிபி விலையில் வாங்கிட முடியும்.

  2.கேலக்ஸி வாட்ச் 4 ப்ளூடூத் மாடலை கேலக்ஸி S23 பிளஸ் உடன் வாங்கும் போது ரூ. 2 ஆயிரத்து 999 செலுத்தினால் போதும்.

  3.ரூ. 47 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 4ஜி, கேலக்ஸி பட்ஸ் 2 உள்ளிட்டவைகளை கேலக்ஸி S23 அல்ட்ரா உடன் வாங்கும் போது ரூ. 4 ஆயிரத்து 999 செலுத்தினால் போதும்.

  4. வங்கி சார்ந்த கேஷ்பேக் அல்லது அப்கிரேடு பலன்கள் ரூ. 8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

  5. சாம்சங் ஷாப் ஆப் மூலம் செய்யும் முதல் பர்சேஸ்-க்கு ரூ. 2 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி

  6. இன்று (பிப்ரவரி 2) நேரலையின் போது முன்பதிவு செய்தவர்களுக்கு வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 25 வாட் டிராவல் அடாப்டர் பரிசாக வழங்கப்படும்.

  இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் முன்பதிவு பிப்ரவரி 2 நேரலையில் துவங்கி பிப்ரவரி 3 ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெறும். கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களை சாம்சங் வலைதளம் மட்டுமின்றி அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் வாங்கிடலாம்.

  நிற ஆப்ஷன்கள்:

  சாம்சங் கேலக்ஸி S23 மாடல் ஃபேண்டம் பிளாக், கிரீன், லாவண்டர் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S23 பிளஸ் மாடல் ஃபேண்டம் பிளாக் மற்றும் கிரீம் கிரீன் நிறங்களிலும், கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஃபேண்டம் பிளாக், கிரீம் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஆன்லைனில் பிரத்யேகமாக - ரெட், கிராஃபைட், லைம் மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் சாம்சங் வலைதளத்தில் கிடைக்கிறது.

  Next Story
  ×