search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கேலக்ஸி S23 அல்ட்ரா மெட்டீரியல் விலை - ஆய்வு நிறுவனம் தகவல்!
    X

    கேலக்ஸி S23 அல்ட்ரா மெட்டீரியல் விலை - ஆய்வு நிறுவனம் தகவல்!

    • சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் உள்ளது.
    • கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் மற்றும் சோனி நிறுவன கேமரா சென்சார்கள் உள்ளன.

    கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டின் ஒரு யூனிட் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் விலை தெரியவந்துள்ளது.

    ஆய்வு நிறுவன தகவல்களின் படி கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் உபகரணங்கள் விலை 469 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரத்து 650 வரை செலவாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் அதிக தொகை பிராசஸர், டிஸ்ப்ளே மற்றும் கேமரா சப்-சிஸ்டம் உள்ளிட்டவைகளுக்கு செலவாகிறது. ஒட்டுமொத்த செலவீனங்களில் 34 சதவீத தொகையை பிராசஸர் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

    சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் TSMC-யின் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுகிறது. குவால்காம் நிறுவனம் கைரேகை சென்சார் ஐசி, பவர் மேனேஜ்மெண்ட் ஐசி, ஆடியோ கோடெக், ஆர்.எஃப். பவர் ஆம்ப்லிஃபயர்கள், வைபை+ ப்ளூடூத், ஜிபிஎஸ், சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் டிரான்ஸ்-ரிசீவர் உள்ளிட்டவைகளை டிசைன் செய்துள்ளது.

    கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கான 256 ஜிபி NAND ஃபிளாஷ், 6.8 இன்ச் குவாட் HD+ 120Hz டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, LTPO தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை சாம்சங் நிறுவனமே வழங்குகிறது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் மற்றும் சோனி நிறுவன கேமரா சென்சார்கள் உள்ளன.

    இதில் சோனி 12MP அல்ட்ரா வைடு (IMX564), 10MP டெலிபோட்டோ மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோ IMX574, சாம்சங் 200MP வைடு ஆங்கில் S5KHP2 மற்றும் 12MP செல்ஃபி கேமரா உள்ளிட்ட சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் உபகரணங்கள் கட்டணம் இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைத்து விடுகிறது.

    எனினும், இந்த கட்டணம் அதன் விற்பனை விலையை விட பலமடங்கு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி பரவலாக எழும். ஸ்மார்ட்போனின் உபகரண கட்டணங்கள் தவிர அசெம்பில், விளம்பரம், டிசைனிங், வாடிக்கையாளர் சேவை என பல்வேறு விஷயங்களுக்கான செலவீனங்கள் உள்ளன. இவற்றை பெரும்பாலும் நிறுவன அதிகாரிகள் தவிர பொது மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்புகள் குறைவு தான்.

    இதுவே ஸ்மார்ட்போனின் உபகரணங்கள் விலை மற்றும் விற்பனை விலை இடையே பெருமளவு வித்தியாசம் இருப்பதற்கான காரணம் ஆகும்.

    Next Story
    ×