search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மியாமி ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் மெத்வதேவுடன் மோதுகிறார் சின்னர்
    X

    ஜானிக் சின்னர்

    மியாமி ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் மெத்வதேவுடன் மோதுகிறார் சின்னர்

    • மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடந்தது.
    • இதில் இத்தாலியின் சின்னர் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை சந்தித்தார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டை 7-6 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டை சின்னர் 6-4 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-2 என கைப்பற்றிய சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் மெத்வதேவை ஜானிக் சின்னர் எதிர்கொள்கிறார்.

    Next Story
    ×