search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமணத் தடை போக்கும் சரபேஸ்வரர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருமணத் தடை போக்கும் சரபேஸ்வரர்

    • இதில் திருமணம் தடை படுபவர்கள் பங்கேற்றால் நிச்சயம் திருமணம் கை கூடும்.
    • இந்த பூஜை திருமணஞ்சேரியில் மட்டுமே நடைபெறும். அதற்கு அடுத்து இங்குதான் நடைபெறுகிறது.

    கோவையில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் வெள்ளிமலை தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில்.

    சித்தர் பெருமான் ஸ்ரீ பிரமானந்த சாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்ட உலகில் முதல் நவபாஷான சிவலிங்கம் இங்குள்ளது.

    உலகிலேயே நவபாஷான சிவலிங்க கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஸ்ரீ சித்தர் பீடம் பிரம்மானந்த மடம் அறக்கட்டளையினர் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.

    தினமும் சாமிக்கு மூலிகை தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஞாயிறு மாலை வேள்வி பூஜையும், இரவு சிவசக்தி யாக பூஜையும் நடைபெறுகிறது.

    இந்த பூஜையில் பங்கேற்போருக்கு திருமண தடை நீங்கும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும்.

    இங்குள்ள அம்மன் சன்னதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது.

    கோவிலில் கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.

    மேலும் இந்த கோவிலில் நவகோள்களும் ஒரே நேர் கோட்டில் உள்ளது தனிச்சிறப்பு என்று கூறுகிறார்கள்.

    சித்தலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சபூத தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அகிலம் போற்றும் சரபேஸ்வரருக்கும் இங்கு தனி சன்னதி உள்ளது.

    இங்கு சரபேஸ்வரர் ஐம்பொன் சிலையில் அழகு மிளிர காட்சி தருகிறார்.

    சன்னதியின் மேற்கூரை பிரமிடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    சரபேஸ்வரர் சன்னதி மற்றும் சித்தலிங்கேஸ்வரர் கோவிலை வலம் வந்தால் அண்ணாமலையில் கிரிவலம் வந்த பலன் கிடைக்கும் என்று ஆன்மீக பெரியவர்கள் கூறுகிறார்கள்.

    சரபேஸ்வரர் சன்னதியில் ஜாதக ரீதியான தோஷங்களுக்கு அதற்குரிய பரிகார பூஜைகள் நடைபெறுகிறது.

    ராகு, கேது, செவ்வாய், தோஷம் உள்ளவர்கள் மற்றும் திருமணம் தடைபடுகிறதே என்று மனவேதனையில் உள்ளவர்கள் வாயு திசையில் அமைந்திருக்கும் காளத்தி நாதருக்கு அவர்கள் கைகளாலே ருத்ராபிஷேகம் செய்து பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.

    பரிகார பூஜை முடித்து சரபேஸ்வரரை வழிபட்டால் திருமண தடை நீங்குவதோடு, அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

    சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை தோஷ நிவர்த்தி பூஜை நடைபெறும்.

    இதில் திருமணம் தடை படுபவர்கள் பங்கேற்றால் நிச்சயம் திருமணம் கை கூடும்.

    இந்த பூஜை திருமணஞ்சேரியில் மட்டுமே நடைபெறும். அதற்கு அடுத்து இங்குதான் நடைபெறுகிறது.

    தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் மனதில் நினைத்தது நடக்கும்.

    இந்த கோவிலுக்கு சென்று வர கோவை காந்திபுரத்திலிருந்து 74,74ஏ மற்றும் சிங்காநல்லூரிலிருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

    Next Story
    ×