search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார்.
    • மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய சென்னை அணிக்கு அஜிங்க்யா ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    போட்டி முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்களையும், துபே 27 பந்துகளில் 66 ரன்களை குவித்தனர். லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • 28 பந்தில் ஏழு பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் சதத்தில் 11 பவுண்டரி, 3 சிக்ஸ் அடங்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் சென்னை அணி ரன்கள் குவிக்க திணறியது. நேரம் செல்ல செல்ல ரன்வேகத்தை அதிகரித்தது. ருதுராஜ் கெய்க்வாட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    28 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 18-வது ஓவரில் பவுண்டரி அடித்து சதம் விளாசினார். அவர் 56 பந்தில் சதம் அடித்தார். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஒரு வீரர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். ருதுராஜ் கெய்க்வாட் சதத்தில் 11 பவுண்டரி, 3 சிக்ஸ் அடங்கும்.

    இந்த சீசனில் பட்லர் 2 சதம், டிராவிட் ஹெட், சுனில் நரைன், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு சதம் விளாசியுள்ளனர்.

    • சென்னை அணி கடைசி போட்டியில் தோல்வியடைந்தது.
    • லக்னோ அணி இதுவரை மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதுவரை சென்னை அணி விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. லக்னோ அணியும் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது.

    சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    லக்னோ அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பாதையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறது. 

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
    • இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தேதி அறிவிகப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இடத்தில் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3, 4, 5-வது இடங்கள் முறையே சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிஎஸ்கே, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி காலை 10:40 மணிக்கு தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விராட் கோலி 40 பந்தில் 100 ரன்கள் அடிக்கும் திறனை பெற்றுள்ளார்.
    • தங்களுடைய திறமையுடன் அவர்கள் இருவரும் செல்ல வேண்டும். அதிரடி காட்ட வேண்டும். அதுதான் மனநிலையாக இருக்க வேண்டும்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. மற்ற வீரர்களை தேர்வு செய்ய வேண்டியதுதான் வேலை.

    அவரை எடுக்க வேண்டும், இவரை எடுக்க வேண்டும், அவரை எடுக்கக்கூடாது, இவரை எடுக்கக்கூடாது என கருத்துகள் உலா வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சீனியர் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இன்னும் 10 நாட்களுக்குள் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அணியை அறிவிக்கப்போகிறது. விராட் கோலிக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்பதுதான் மில்லியன் கேள்வி. ஆனால் ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் முடிவில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். அதேவேளையில் அவரது ஸ்டிரைக் ரேட் கேள்வி எழுப்பும் விதமாக உள்ளது. குறிப்பாக 67 பந்தில் 100 ரன்கள் அடித்தது விமர்சனத்தை எழுப்பியது.

    எப்படி இருந்தாலும் ரோகித் சர்மாவுடன் விராட் கோலிதான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சவுரவ் கங்குலி கூறுகையில் "ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் இருவரும் இருக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட முறையில், இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட பேலன்ஸ்தான் சிறந்த அணி. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அபாரமானவர்கள், ஆட்டங்களின் எண்ணிக்கையால் மட்டும் நான் சொல்லவில்லை. நீண்ட காலமாக அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் கூறுகிறேன்.

    டி20 கிரிக்கெட்டை பொருத்தவரைக்கும் பயம் இல்லாமல் விளையாட வேண்டும். இதை ஏற்கனவே நான் ராகுல் டிராவிட்டிடம் தெரிவித்திருக்கிறேன். ஆடுகளத்திற்கு செல்ல வேண்டும். பந்துகளை எதிர்கொண்டு அதிரடி காட்ட வேண்டும். நீண்ட பேட்டிங் லைன்-அப் உள்ளது. விக்கெட்டுகள் வீழ்ந்தால் கூட, கட்டுப்படுத்த முடியும்.

    ரேகித் சர்மா, விராட் கோலியால் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியுமா?. இது மிகப்பெரிய மாற்றம் இல்லை. இதை செய்யக்கூடிய திறமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். 50 ஓவர் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா பேட்டிங் செய்ததை பார்த்தீர்கள்.

    தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி மிகவும் சிறந்த அணி. முதல் ஏழு முதல் 10 ஓவர் வரை எதிரணி மீது நெருக்கடியை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தினார். அது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிம்மதி பெருமூச்சுடன் சற்று நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக விளையாட வாய்ப்பு கொடுத்தது.

    விராட் கோலியும், ரோகித் சர்மா ஆகியோரால் அதே பாணியில் செயல்பட முடியும் என நினைக்கிறேன். அவர்கள் சிறந்த வீரர்கள். விராட் கோலி 40 பந்தில் 100 ரன்கள் அடிக்கும் திறனை பெற்றுள்ளார். தங்களுடைய திறமையுடன் அவர்கள் இருவரும் செல்ல வேண்டும். அதிரடி காட்ட வேண்டும். அதுதான் மனநிலையாக இருக்க வேண்டும். பவர்பிளேயான 6 ஓவருக்குப்பின் என்ன நிகழ்கிறது என்பதை பார்ப்போம்.

    இந்திய அணியில் ரோகித் சர்மா உடன் ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    • கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது.
    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கபட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

     இது குறித்து அவர் கூறியதாவது:-

    யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் நிரந்தரமானது என்பதற்கு சான்றாகும். ஃபார்ம் தற்காலிகமானது. மேலும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பெற வேண்டும். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார். 

    • யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது.
    • இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் சந்தித்து புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம், யாக்கர் பந்துகளை தங்களால் வீச முடியாது என நினைத்து, தங்களை ஏமாற்றிக் கொள்வதால்தான். அதனால்தான் சிஎஸ்கேவில் பயிற்சி எடுக்கும்போது ஒவ்வொரு பவுலர்களையும் 12 - 14 யாக்கர் பந்துகளை வீசச் சொல்லுவேன்.

    யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது. டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களான லசித் மலிங்கா, பும்ரா அல்லது பத்திரனா, நான் விளையாடியபோது நானே, இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம். முடிந்தவரை அதிக யார்க்கர்களை வீச முயற்சி செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
    • இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு  உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

    • ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
    • ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புரோமோ இன்று வெளியிடப்பட்டது. இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
    • இதில் விளையாடக் கோரி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன்.

    இதற்கிடையே, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடக் கோரி அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து, சுனில் நரைன் ஓய்விலிருந்து வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன. நான் ஓய்விலிருந்து திரும்ப வந்து டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன். அவர்கள் கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
    • ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.

    இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    • ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

    ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ரன்னிலும் சாம்சன் 38 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×