search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாற இதுதான் காரணம்- பிராவோ விளக்கம்
    X

    டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாற இதுதான் காரணம்- பிராவோ விளக்கம்

    • யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது.
    • இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் சந்தித்து புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம், யாக்கர் பந்துகளை தங்களால் வீச முடியாது என நினைத்து, தங்களை ஏமாற்றிக் கொள்வதால்தான். அதனால்தான் சிஎஸ்கேவில் பயிற்சி எடுக்கும்போது ஒவ்வொரு பவுலர்களையும் 12 - 14 யாக்கர் பந்துகளை வீசச் சொல்லுவேன்.

    யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது. டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களான லசித் மலிங்கா, பும்ரா அல்லது பத்திரனா, நான் விளையாடியபோது நானே, இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம். முடிந்தவரை அதிக யார்க்கர்களை வீச முயற்சி செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×