search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    15 நிமிடத்தில் செய்யலாம் சிக்கன் சீஸ் பைட்ஸ்
    X

    15 நிமிடத்தில் செய்யலாம் சிக்கன் சீஸ் பைட்ஸ்

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • 15 நிமிடத்தில் சூப்பரான சுவையான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

    சீஸ் துருவல் - 1 கப்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

    ஓரிகானோ - அரை டீஸ்பூன்

    சோள மாவு - 3 டீஸ்பூன்

    பிரெட் தூள் - 2 டீஸ்பூன் + தேவையான அளவு

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    மிக்சியில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், தனி மிளகாய் தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ, பிரெட் தூள் 2 டீஸ்பூன், வெண்ணெய், சோயா சாஸ் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.

    சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி மெல்லிய பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவில் அதில் உருண்டையை வைத்து மெலிதாக பூரி போல் தட்டவும். பின்னர் அதன் நடுவில் சிறிதளவு சீஸை வைத்து நன்றாக மூடி சதுரமான வடிவில் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த பைட்ஸை சோள மாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் சீஸ் பைட்ஸ் ரெடி.

    Next Story
    ×