search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மட்டன் கோலா உருண்டை
    X

    மட்டன் கோலா உருண்டை

    • அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன்.
    • மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.

    அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம். அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும். அதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    மட்டன் (வெள்ளாட்டு இறைச்சி) -1கிலோ

    மிளகாய்த் தூள் 12 கிராம்

    மஞ்சள் தூள் - 4 கிராம்

    உப்பு -தேவைக்கு ஏற்ப

    நறுக்கிய பச்சை மிளகாய்- 10 கிராம்

    நறுக்கிய பூண்டு - 20 கிராம்

    நறுக்கிய கொத்தமல்லி - 30 கிராம்

    எலுமிச்சைச் சாறு- 5மி.லி.

    எண்ணெய் - கால் லிட்டர்

    அரைக்க

    துருவிய தேங்காய் 25 கிராம்

    லவங்கப்பட்டை 2 கிராம்

    கிராம்பு, கசகசா - 10 கிராம்

    வறுத்த உளுந்தம்பருப்பு - 15 கிராம்

    செய்முறை:

    முதலில் மிக்சியில், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை அரைத்து எடுக்கவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலவையை கலந்துகொள்ளவும்.

    பின்னர் மிக்சியில் தேங்காய்த் துருவல், லவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை அரைத்த இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுத்தால் சுவையான கோலா உருண்டை, உங்களை ருசிக்க கூப்பிடும்.

    Next Story
    ×