search icon
என் மலர்tooltip icon

    குஜராத்

    • பெட்டியில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி உள்ளது.
    • பதிவு வைரலாகி 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதொடு, பயனர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    நாடு முழுவதும் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பாபு பையா என்ற பயனர் சமீபத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அவர் குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் இருந்து சாலிமர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளார். ரெயிலில் முன்பதிவு பெட்டியான எஸ்-5 கோச்சில் பயணம் செய்த போது அங்கு டிக்கெட் இல்லாமலேயே பலர் ஏறி பயணம் செய்துள்ளனர்.

    இது அந்த பெட்டியில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்களுடன் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். அவரது இந்த பதிவு வைரலாகி 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதொடு, பயனர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து அவரது பதிவுக்கு ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
    • குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

    கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • குஜராத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கும் விடுதியில் நமாஸ் செய்து வந்துள்ளனர்.
    • பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    குஜராத் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வடநாட்டு மாநிலங்களில் முஸ்லீம் மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகை வரவிருப்பதை ஒட்டி, இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களால் நோன்பு நோற்கப்படுகிறது.

    அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கும் விடுதியில் நமாஸ் செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் பல்கலைக்கழக தங்கும் விடுதி அருகில் மசூதி எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மசூதி எதுவும் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே நமாஸ் செய்து வந்துள்ளனர்.

    அப்படி நமாஸ் செய்யும் போது, அங்கு வந்த கும்பல் மாணவர்களை சரமாரியாக தாக்கியது. மேலும், அவர்கள் நமாஸ் செய்த அறையில் இருந்த லேப்டாப், மொபைல் போன் மற்றும் இதர பொருட்களை உடைத்துள்ளனர். இதோடு அவர்களது இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஆப்பிரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர் ஒருவர், "அவர்கள் எங்களை தாக்கினர். அறையில் வைக்கப்பட்டு இருந்த லேப்டாப்கள், மொபைல் போன்களை உடைத்து, இருசக்கர வாகனங்களையும் உடைத்தனர்.

    தாக்குதலில் ஆப்கானிஸ்தான், இலங்கை, தர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் காயமுற்றனர். காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து கிளம்பிவிட்டது. தாக்குதலில் காயமுற்ற மாணவர்கள் குறித்து அவர்களது தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, அவர்கள் புதிய விடுதிக்கு மாற்றம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக துணைவேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "குஜராத் பல்கலைக் கழக அதிகாரிகள், வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் என்ஆர்ஐ விடுதி காப்பாளர் ஆகியோரை உடனடியாக மாற்றியமைத்துள்ளோம்.

    மூன்று நாள்களுக்குள் வெளிநாட்டு மாணவர்களை வெவ்வேறு விடுதிக்கு மாற்ற பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    குஜராத் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர் ஆலோசனைக் குழுவையும் அமைத்துள்ளது. இதில் வெளிநாட்டுப் படிப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், சட்டப் பிரிவின் உதவிப் பதிவாளர் மற்றும் பல்கலைக்கழக லோக்பால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். என்று அவர் கூறினார்.

    • குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுதொடர்பாக பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், குஜராத் எல்லையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    போர்பந்தர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்களை கைதுசெய்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு முன்பு செய்ததை விட 6 மடங்கு அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.
    • தனி ரெயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்து ரெயில்வே மேம்பாட்டுக்காக அரசின் பணம் பயன்படுத்தப்பட்டது.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சபர்மதி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 வந்தே பாரத் ரெயில் தொடங்குதல் உள்ளிட்ட ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    நான் எனது வாழ்க்கையை ரெயில்வே தண்டவாளத்தில் தொடங்கினேன். எனவே முன்பு நமது ரெயில்வே எவ்வளவு மோசமாக இருந்தது என்பது எனக்கு தெரியும். இந்த ஆண்டில் 2 மாதத்தில் ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை நாங்கள் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளோம்.

    கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு முன்பு செய்ததை விட 6 மடங்கு அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. தனி ரெயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்து ரெயில்வே மேம்பாட்டுக்காக அரசின் பணம் பயன்படுத்தப்பட்டது. இதுவரை 350 ஆஸ்கர் ரெயில்களில் 4.5 லட்சம் பேர் அயோத்திக்கு செல்ல வசதி செய்யப்பட்டது.

    கடந்த தலைமுறையினர் அனுபவித்த துன்பங்களை இளைஞர்கள் அனுபவிக்கவில்லை. இது மோடியின் உத்தரவாதம். நாட்டின் முன்னேற்ற பாதைக்காகவே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகிறோம். இதுவே எங்களது குறிக்கோளாக இருக்கிறது.

    சிலர் எங்கள் முயற்சிகளை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்க முயல்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • தெருவோர ஓட்டலில் பணியில் ஈடுபட்டுள்ள ரோபோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் கோலாக்களை வழங்கும் காட்சிகள் உள்ளன.
    • உணவு பிரியரான கார்த்திக் மகேஸ்வரி என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    விஞ்ஞான வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது பல துறைகளிலும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. நகரங்களில் உள்ள பெரிய ஓட்டல்கள் சிலவற்றில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் காட்சிகள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

    ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில் அகமதாபாத்தில் உள்ள தெருவோர ஓட்டல் ஒன்றில் ரோபோ வெயிட்டர் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் காட்சிகள் பயனர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் தெருவோர ஓட்டலில் பணியில் ஈடுபட்டுள்ள ரோபோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் கோலாக்களை வழங்கும் காட்சிகள் உள்ளன. அகமதாபாத்தை சேர்ந்த உணவு பிரியரான கார்த்திக் மகேஸ்வரி என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 அடி உயர கணேஷ் பரையா டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சிகள் எடுத்து வந்தார்.
    • கணேஷ் தற்போது படிப்பை முடித்து பயிற்சி டாக்டராக பவ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் பவ் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் பரையா (23). இவரது உயரம் 3 அடி. ஆனாலும், டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சிகள் எடுத்து வந்தார்.

    பிளஸ் 2 முடித்ததும் மருத்துவப் படிப்புக்கு கணேஷ் விண்ணப்பித்தார். அவரது உயரத்தை காரணம் காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் சோர்ந்து போகாத அவர், கல்லூரி முதல்வர் உதவியுடன் குஜராத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    குஜராத் நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் மனதை தளரவிடாத அவர், 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

    அதன்படி 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த கணேஷ், தற்போது படிப்பை முடித்து பயிற்சி டாக்டராக பவ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

    தனது இந்த பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட கணேஷ் பாரையா,

    மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, எனது உயரத்தை காரணம் காட்டி மருத்துவ கவுன்சில் நிராகரித்துவிட்டது. இதனால் பள்ளி முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றேன். டாக்டராகப் போகிறேன் என பெற்றோரிடம் கூறுகையில் அவர்களே சந்தேகத்துடன் பார்த்தனர். போகப் போக என்னைப் புரிந்து கொண்டனர் என தெரிவித்தார்.

    குள்ளமான இளைஞர் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு டாக்டர் பணிக்கு சேர்ந்த சம்பவம் குஜராத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • குஜராத் மாநிலத்தில் நாளை முதல் மார்ச் 10-ந்தேதி வரை நடைபயணம்.
    • 14 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் 467 கி.மீ. தூரம் நடை பயணம்.

    ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் முதல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அவரது நடைபயணம் பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டம் ஜலோத் என்ற இடத்தில் நாளை நுழைகிறது. நாளை முதல் 10-ந்தேதி வரை 467 கி.மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஆம் ஆத்மி கட்சி ஏற்றுக் கொண்டது.

    குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடை பயணத்தில் அதிக அளவிலான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், தலைவர்கள் பங்கேற்பார்கள் என ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில அமைப்பு தெரிவித்துள்ளது.

    ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 6700 கி.மீட்டர் தூரம் கொண்ட நடை பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி தொடங்கினார். குஜராத் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 14 மக்களவை தொகுதிகளை உள்ளிடக்கிய பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழைவதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தில் தாஹோத், பஞ்ச்மஹால், சோட்டா உதேப்பூர், பரூச், தபி, சூரத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் நடை பயணம் செல்ல இருக்கிறது.

    • ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றன
    • எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை என்றார் அர்ஜுன் மோத்வாடியா

    வரும் ஏப்ரல்-மே மாத காலகட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    2014லிருந்து 2 முறை மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க., 3-ஆம் முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

    பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சியினருடன் கூட்டணி அமைத்து, வெல்வதற்கு வியூகம் அமைத்து வருகிறது.

    இந்நிலையில், இன்று, குஜராத் மாநில போர்பந்தர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அர்ஜுன் மோத்வாடியா (Arjun Modhwadia), குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சிஆர் பாட்டில் (CR Paatil) முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.


    தனது முடிவு குறித்து அர்ஜுன் மோத்வாடியா தெரிவித்ததாவது:

    காந்திஜி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற நல்ல தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வடிவில் நாட்டிற்கு கிடைத்துள்ளனர்.

    வளர்ச்சியை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல பிரதமர் மோடியின் கனவை நனவாக்க பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.

    எனக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை.

    மக்களுடன் காங்கிரசிற்கு இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து விட்டது. உ.பி. மாநில அயோத்யாவில் நடைபெற்ற பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை புறக்கணித்ததன் மூலம், காங்கிரஸ், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள தவறி விட்டது.

    இவ்வாறு மோத்வாடியா தெரிவித்தார்.

    முன்னதாக, "கனத்த இதயத்துடன்" காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், தான் விலகுவதாக அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கடிதம் எழுதினார்.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் அர்ஜுன் மோத்வாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
    • விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஜாம்நகர்:

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது. இது முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னின் சொந்த ஊர் ஆகும். இங்கிருந்துதான் அம்பானி குடும்பத்தினர் தங்கள் தொழிலை தொடங்கினர்.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.

    கடந்த 1-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. 2-ம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    3-ம் நாளான நேற்று வந்தாரா வனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் பங்கேற்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கத்ரீனா கயூப், ஜெனிலியா, ராணி முகர்ஜி, சோனா முகர்ஜி, நடாஷா பூனவல்லா, இயக்குநர் அட்லி உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா உள்பட வெளிநாட்டு பிரபலங்களும், இந்திய தொழிலதிபர்கள் என மொத்தம் 1,000 சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


    நேற்று நடந்த நிகழ்ச்சியில் விருந்தினர்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதையடுத்து விருந்தினர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பெண் விருந்தினர்கள் காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அணிந்து வந்திருந்தனர். குறிப்பாக நீடா அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்து பெண்களும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்திருந்தனர்.


    காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. உணவுக்காக மட்டும் ரூ.130 கோடி வாரி இறைக்கப்பட்டது. விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் ஒரே மேடையில் நடனமாடி அசத்தினார்கள். முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் அழகாக நடனமாடினார்கள். மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். தோனி, இவாங்கா டிரம்ப் தாண்டியா நடனமாடினார்கள். ரிஹானாவின் பாடல்களை கட்டியது. சமூக வலைதளங்கள் முழுவதும் அம்பானி இல்ல திருமண முன்வைபவ நிகழ்ச்சிகளே டிரெண்டிங் ஆனது. உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் அம்பானி இல்ல திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் முக்கிய இடத்தை பிடித்தன.

    ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளது. திருமண முன் வைபவமே இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை மாதம் 12-ந்தேதி மும்பையில் திருமண விழா நடைபெற உள்ளது. திருமண விழா இதைவிட இன்னும் பலமடங்கு பிரமாண்டமாக நடத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.

    • திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் இன்று வரை நடைபெறுகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

    அகமதாபாத்:

    தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சாண்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. ஜாம் நகரில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களை செய்துள்ளனர். என்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல, முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன். சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் தன்னை விடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள் என உருக்கமாக கூறினார்.

    ஆனந்த் அம்பானியின் பேச்சை கேட்டதும் முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். முகேஷ் அம்பானி தேம்பி அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    • மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.

    அகமதாபாத்:

    மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் நேற்று பார்வையிட்டு, அஞ்சலி செலுத்தினார்.

    இதுதொடர்பாக பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈர்க்கக்கூடிய ஒற்றுமை சிலையைப் பார்வையிட அழைத்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி. இது ஒரு பொறியியல் அதிசயம் மற்றும் சர்தார் பட்டேலுக்கு ஒரு பெரிய அஞ்சலி. இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி! ஒற்றுமை சிலையில் உங்கள் அனுபவத்தை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×