search icon
என் மலர்tooltip icon
    < Back
    Conjuring Kannappan
    Conjuring Kannappan

    கான்ஜுரிங் கண்ணப்பன்

    இயக்குனர்: செல்வின் ராஜ் சேவியர்
    எடிட்டர்:பிரதீப் ஏ ராகவா
    இசை:யுவன் ஷங்கர் ராஜா
    வெளியீட்டு தேதி:2023-12-08
    Points:11710

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை1614211444
    Point3013486615087251019579
    கரு

    ஒரு டிரீம் கேட்சரால் ஏற்படும் பிரச்சனை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் சதீஸ் வீடியோ கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்த துறையிலேயே வேலை தேடி வரும் சதீஸ், ஒரு நாள் தன் வீட்டிற்கு பின்னால் இருக்கும் கிணற்றில் இருந்து டிரீம் கேட்சர் என்னும் சூனியம் வைக்கப்பட்ட பொருளில் ஒரு இறகை பறித்து விடுகிறார். இதிலிருந்து அவர் எப்போ தூங்கினாலும் கனவு உலகத்திற்கு சென்று விடுகிறார்.

    அங்கு பெரிய பங்களாவில் ஒரு பேய் அவரை மிரட்டுகிறது. சில நாட்களில் இவருடன் தந்தை விடிவி கணேஷ், தாய் சரண்யா, மாமா நமோ நாராயணன், டாக்டர் ரெடின் கிங்ஸ்லி, தாதா ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் கனவு உலகத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இறுதியில் சதீஸ் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கனவு உலகத்தில் இருந்து தப்பித்தார்களா? கனவு உலகத்தில் மிரட்டும் பேய் யார்? எதற்காக மிரட்டுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஸ், வழக்கமான காமெடி நடிப்பை தாண்டி சீரியசாக நடித்து இருக்கிறார். பங்களாவில் பேய்க்கு பயப்படும் காட்சிகளில் கவர்ந்து இருக்கிறார். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரெஜினா. இவரது உடை, நடை அனைத்தும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

    விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், நாசர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் ராஜ் காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். அழகான பேயாக மனதில் பதிந்திருக்கிறார் எல்லி.

    இயக்கம்

    வழக்கமான பேய் படங்களுக்கு உண்டான பங்களா, பிளாஷ்பேக் என அதே டெம்ப்ளேட்டில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் செல்வின் ராஜ். காமெடி காட்சிகள் ஒரு சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகவில்லை. முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யம் இல்லாமலும் திரைக்கதை நகர்கிறது. தூங்காமல் இருக்க அனைவரும் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது.

    இசை

    படத்திற்கு பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. பேய் படத்திற்கு ஏற்ப பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    யுவாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    படத்தொகுப்பு

    பிரதீப் ஏ ராகவ் படத்தொகுப்பு ரசிக்க வைத்துள்ளது.

    காஸ்டியூம்

    பிரசாத் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-12-18 05:15:51.0
    Malar

    Nice

    ×