search icon
என் மலர்tooltip icon
    < Back
    Godzilla x Kong: The New Empire
    Godzilla x Kong: The New Empire

    காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம்

    இயக்குனர்: ஆடம் வின்கார்ட்
    ஒளிப்பதிவாளர்:பென் சேரேசின்
    இசை:ஜுங்கி எக்ஸ் எல்
    வெளியீட்டு தேதி:2024-03-29
    Points:14956

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை2112642
    Point25835325355721881303
    கரு

    பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு புது எதிரியை எப்படி காட்ஸில்லா மற்றும் காங்க் கூட்டணி சேர்ந்து எதிர்கின்றனர் என்பதே கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    மான்ஸ்டர்ஸ்வர்ஸ் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் எனில் இப்படமானது உங்களுக்கே. ஏகப்பட்ட மான்ஸ்டர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. முக்கியமாக மனதில் நிற்கும் காட்சிகள் என்றால் அது காங்கின் சண்டை காட்சிகள் தான்.

    காங்கின் பாயிட் ஆஃப் வியூவில் தான் படம் நகர்கிறது. காங்கிற்கு என உள்ள  ஹாலோ எர்த்தில் அதின் தலைமையில் ஒரு ராஜியத்தை நடத்தி வருகிறது. பூமிக்கு மேற்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் காட்ஸில்லா இயற்கைக்கு மாறாக செயல்படும் மற்ற பிரமாண்ட மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஹாலோ எர்த்தில் இருந்து பூமிக்கு ஒரு அடையாளாம் தெரியாத சிக்னல் ஒன்று வெளிப்படுகிறது.

    படத்தின் முக்கிய வில்லனான ஸ்கார் கிங், ஷீமோ எனும் உலகையே உறைய வைக்கும் சக்தி கொண்ட பிரமாண்ட மிருகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மொத்த பூமியையும் தனது காலடியில் கொண்டு வர முயல்கிறது. இதனை காட்ஸில்லாவும் காங்கும் சேர்ந்து எப்படி வீழ்த்தின, காங்கிற்கு அதன் புதிய குடும்பம் கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ரெபெக்கா ஹால், டேன் ஸ்டீவன்ஸ் , பிரயன் டிரீ ஹென்ரி, ரேச்சல் ஆகியோர் அவர்களின் கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர்.

    கிராபிக்ஸ்

    படத்தின் சிஜி துறையே படத்தின் நாயகர்கள். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிரட்டி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தில் நிறைய எமோஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங் எந்த ஒரு வார்த்தையும் பேசாவிட்டாலும் அதன் முக பாவனையும் உடல் பாவனையும் வைத்து நமக்கு உணர்வுளை கடத்தி இருக்கிறார்கள். இதற்கு முதுகெலும்பாக இருப்பது கிராபிக் துறை மட்டுமே. 

    இயக்கம்

    படத்தின் ஒன்லைன் கதை நன்றாக இருந்தாலும். திரைக்கதையில் இயக்குனர் ஆடாம் நிங்கார்ட் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தில் டிவிஸ்ட் என்று எதுவுமே இல்லை. எல்லாமே எதிர்ப்பார்க்கபட்ட கதையாகதான் வலம் வருகிறது. சென்ற பாகத்தை ஒப்பிடும்போது இப்பாகத்தில் காங்கிற்கு ஒரு நல்ல கேரக்டர் ஆர்க் இருக்கிறது. எமோஷனல் காட்சிகளை மிக அற்புதமாக எழுதியுள்ளார். ஆங்காங்கே நமக்கு கே ஜி எஃப் படத்தின் காட்சிகளைப் பார்ப்பது போலவும். தமிழ் சினிமா கதாநாயகர்கள் சண்டையிடுவது போல் தோன்றுகிறது.

    இசை

    படத்திற்கு ஜுங்கி இசையமைத்துள்ளார். பின்னணி இசை கேட்கும் ரகத்தில் இருக்கிறது. காட்ஸில்லா மற்றும் காங் சண்டை காட்சிகளில் சிறப்பாக இசையமைத்துதிருந்தார்.

    தயாரிப்பு

    வார்னர் புரோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-04-16 10:41:13.0
    vigneshwari kumar

    good

    ×