search icon
என் மலர்tooltip icon
    < Back
    HanuMan
    HanuMan

    ஹனுமான்

    இயக்குனர்: பிரசாந்த் வர்மா
    எடிட்டர்:சாய் பாபு தாலாரி
    ஒளிப்பதிவாளர்:தசரதி சிவேந்திரன்
    இசை:ஹரி கவுரா & கிருஷ்ணா செளரப்
    வெளியீட்டு தேதி:2024-01-12
    Points:1426

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை15394483725
    Point161504402237122
    கரு

    ஹனுமானின் சக்தி கிடைத்த இளைஞன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    பெற்றோரை இழந்து சகோதரி வரலட்சுமி சரத்குமார் அரவணைப்பில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் நாயகன் தேஜா சஜ்ஜா. சிறிய சிறிய திருட்டு தொழிலை செய்து கொண்டு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் தேஜாவுக்கு திடீரென ஹனுமானின் சக்தி கிடைக்கிறது.

    இதைத்தொடர்ந்து பல அற்புத நிகழ்ச்சிகள் அவரை அறியாமலேயே நடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க சின்ன வயதிலேயே சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் தன் பெற்றோரையே தீ வைத்து கொலை செய்துவிடும் வினய்ராய் பல அறிவியல் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் தேஜா சஜ்ஜாவுக்கு சக்தி கிடைத்தது பற்றி கேள்விப்பட்டு அந்த சக்தியை பெற கிராமத்துக்கு வந்து பல்வேறு சதி செயல்களில் வினய் ஈடுபடுகிறார். தேஜா மீது அபாண்ட பழி சுமத்தி ஊர் மக்களுக்கு அவர் மீது வெறுப்பை உருவாக்குகிறார்.

    இறுதியில் இந்தப் பழியில் இருந்து தேஜா சஜ்ஜா எப்படி மீண்டார்? தேஜாவின் அதிர்ஷ்ட சக்தியை வினய் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் கதை.

    நடிகர்கள்

    சுட்டித்தனமாக கிராமத்தில் வளர்ந்து வரும் தேஜா அனுமானின் சக்தி கிடைத்ததும் ஆக்ரோசமும் ஆக்‌ஷனும் கலந்து நடித்து மிரள வைக்கிறார். தம்பி தாக்கப்படுவதை கண்டு ஆக்ரோசமாக பொங்கி எழுந்து தேங்காயால் எதிரிகளை பந்தாடுவதிலும் பாசம் உள்ள அக்காவாகவும் வரலட்சுமி சரத்குமார் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம்.

    காதலியாகவும் தவறை தட்டி கேட்கும் இடத்திலும் அமிர்தா ஐயர் வருகிறார். வினய் ராயின் அறிவியல் வில்லத்தனம், ரவி தேஜா குரலில் பேசும் குரங்கு, கெட்டப் ஸ்ரீனு, வெண்ணிலா கிஷோர் காமெடி ஆகியவை ரசிக்க வைக்கிறது.

    இயக்கம்

    சூப்பர் ஹீரோ மற்றும் தெய்வீக தன்மையுடன் பொழுதுபோக்கு, சுவாரசியங்களுடன் பிரமாண்ட கதையாக ஹனுமான் படத்தை பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் சிலை, மலைகள், பள்ளத்தாக்கு, அருவிகள் என இயற்கை அழகை கொண்டு வந்து ரம்மியமாக கதையை சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் கதை நீட்டிப்பும் நம்ப முடியாத காட்சிகளும் படத்திற்கு பலவீனம்.

    இசை

    அனுதீப் தேவ், கௌரஹரி, கிருஷ்ணா சௌரப் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    தசரதி ஒளிப்பதிவு சிறப்பு.

    படத்தொகுப்பு

    சாய் பாபு தாலாரி படத்தொகுப்பு சிறப்பு.

    காஸ்டியூம்

    லங்கா சந்தோஷினி கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘ஹனுமான்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-01-15 07:57:46.0
    Saravanan

    ×