search icon
என் மலர்tooltip icon
    < Back
    Jigiri dosthu
    Jigiri dosthu

    ஜிகிரி தோஸ்து

    இயக்குனர்: அரண் வெற்றிசெல்வக்குமார்
    எடிட்டர்:அருள் மொழி வர்மன்
    ஒளிப்பதிவாளர்:ஆர் வி சரண்
    இசை:அஸ்வின் விநாயகமூர்த்தி
    வெளியீட்டு தேதி:2023-12-22
    Points:208

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை175179126
    Point108964
    கரு

    கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற போராடும் இளைஞர்கள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம் 

    ஷாரிக், அரண், ஆஷிக் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். தொழில்நுட்பத்தை புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வம் கொண்ட அறன் பேராசிரியரால் அவமானப் படுத்தப்படுகிறார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அரணை நண்பர்கள் ஷாரிக், ஆஷிக் இருவரும் காரில் வெளியே அழைத்து செல்கிறார்கள்.

    அப்போது பவித்ரா லட்சுமியை காரில் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். அவரை காப்பாற்றும் முயற்சியில் நண்பர்கள் மூவரும் ஈடுபடுகின்றனர். குற்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் இருப்பிடத்தை கண்டறியும் அரணின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.

    இறுதியில் பவித்ரா லட்சுமியை நண்பர்கள் காப்பாற்றினார்களா? பவித்ரா லட்சுமியை கடத்த காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    இயக்குனர் அரண் சிறப்பாக நடித்துள்ளார். அவருடன் நண்பர்களாக ஷாரிக், ஆஷிக் ஆகியோர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. 

    ஷாரிக்கின் காதலியாக வரும் அம்மு அபிராமி சில காட்சிகளே வந்தாலும் கண்களுக்கு விருந்தாக உள்ளார். ஆரம்பம் முதல் கடைசி வரை கடத்தப்பட்டு சித்ரவதைக்குள்ளாகும் பவித்ரா லட்சுமி பரிதாபத்தை வரவழைக்கிறார். வில்லனாக வரும் சிவனின் நடிப்பு பாராட்டி பெற்றிருக்கிறது.

    இயக்கம்

    வித்தியாசமான கதையை சுவாரஸ்யத்துடன் ஜிகிரி தோஸ்த் படத்தின் மூலம் சொல்லி உள்ளார் இயக்குனர் அரண்.

    முதல் படம் என்றாலும் இயக்கத்திலும், நடிப்பிலும் பாராட்ட வைக்கிறார். நண்பர்கள் அனைவருக்கும் சமமான காட்சிகள் வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

    இசை

    அஸ்வின் விநாயக மூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    சரண்ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக அமைந்து இருக்கிறது.

    படத்தொகுப்பு

    அருள் மொழி வர்மன் படத்தொகுப்பு அருமை.

    புரொடக்ஷன்

    லார்ட்ஸ் பி இன்டர்நேஷனல் மற்றும் விவிகே என்டர்டெயி்ன்மென்ட் நிறுவனம் ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×