search icon
என் மலர்tooltip icon
    < Back
    Kumbaari
    Kumbaari

    கும்பாரி

    இயக்குனர்: கெவின் ஜோசப்
    வெளியீட்டு தேதி:2024-01-05
    Points:549

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை128121
    Point242307
    கரு

    காதல் ஜோடிகள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கேபிள் டிவி ஆப்ரேட்டராக இருக்கிறார் நாயகன் விஜய் விஷ்வா. இவரும் மீன்பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் யூடியூப் சேனலில் வேலை பார்க்கும் நாயகி மஹானாவுக்கும் விஜய் விஷ்வாவிற்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் நாளடைவில் காதலாக மாறுகிறது.

    இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், மஹானாவுக்கு 21 வயது ஆகாததால் சிக்கல் ஏற்படுகிறது. 21 வயது ஆக 7 நாட்கள் இருக்கும் நிலையில், வீட்டை விட்டு வெளியேறிப் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

    இவர்களின் காதல் விஷயம் மஹானாவின் அண்ணன் ஜான் விஜய்க்கு தெரிய வருகிறது. இவர்கள் திருமணத்தை தடுக்க அடியாட்கள் மூலம் முயற்சி செய்கிறார். அதே சமயம் நண்பர் நலீப் ஜியா இவர்கள் திருமணத்தை நடத்த முயற்சி செய்கிறார்.

    இறுதியில் விஜய் விஷ்வா, மஹானா இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? ஜான் விஜய் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகன் விஜய் விஷ்வாவும், அவரது நண்பனாக நடித்துள்ள நலீப் ஜியாவும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். கதாநாயகியாக நடித்துள்ள மஹானா அழகுடன் அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார். இவர்களுடன் பயணித்து இருக்கும் மதுமிதா, காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் ஜான் விஜய் நடிப்பு.  பருத்திவீரன் சரவணனை ஒரு காமெடியன் ஆக்கி வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.

    இயக்கம்

    பழைய கதையை தூசி தட்டி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கெவின் ஜோசப். ஒரு காதல் கதையும் அண்ணன் தங்கை பாசக்கதையும் பின்னி பிணைந்து திரைக்கதையாக கொடுத்து இருக்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை. ஒரு பரபரப்பான காதல் கதையாக இருக்க வேண்டியதை ஆங்காங்கே அறுவை ஜோக்குகளுடன் அசட்டுத்தனமான காட்சிகளை வைத்து கடுப்பேத்தி இருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர்கள் ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி ஆகியோர் தங்கள் பங்கைக் குறையின்றிச் செய்துள்ளனர்.

    ஒளிப்பதிவு

    பிரசாத் ஆறுமுகம் செய்துள்ள ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    படத்தொகுப்பு

    டி.எஸ். ஜெய் படத்தொகுப்பு ஓகே.

    புரொடக்‌ஷன்

    ராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ‘கும்பாரி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×