search icon
என் மலர்tooltip icon
    < Back
    Kung Fu Panda 4
    Kung Fu Panda 4

    குங் ஃபூ பாண்டா 4

    இயக்குனர்: மைக் மிச்சேல்
    எடிட்டர்:கிறிஸ்டோபர் ஜோசப்
    இசை:ஹான்ஸ் சிம்மர்
    வெளியீட்டு தேதி:2024-03-15
    Points:2819

    ட்ரெண்ட்

    வாரம்1234567891011
    தரவரிசை1005442412922136332
    Point3751262694147106545454352216
    கரு

    டிராகன் வாரியர் என அழைக்கப்படும் பாண்டா கரடி தனக்கு அடுத்தபடியான சிஷியனை எப்படி தேர்ந்தெடுத்தது.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    வழக்கம்போல டிராகன் வாரியராக இருந்து ஊர் மக்களுக்கு உதவி செய்து வருகிறார் பாண்டா கரடி ‘போ’ (ஜாக் பிளாக்). மக்களின் அன்பை பெற்றவராக திகழும் பாண்டாவிடம் அவரின் குருவான மாஸ்டர் ஷிஃபு (டஸ்டின் ஹாஃப்மேன்), புதிய டிராகன் வாரியரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக சொல்கிறார்.

    மாஸ்டரின் முடிவில் விருப்பமில்லாத பாண்டா, முதல் பாகத்தின் வில்லனான டை-லங் மீண்டும் ஒரு கிராமத்தில் அட்டகாசம் செய்வதாக கேள்விப்பட்டு அங்கு செல்ல விரும்புகிறார். இந்த சூழலில், பாண்டாவுக்கு அறிமுகமாகும் ஷென் (ஆக்வாஃபினா) என்னும் நரி ஒன்று, டை-லங் ரூபத்தில் வந்திருப்பது, கமீலியன் என்னும் உருமாறும் சக்தி கொண்ட பச்சோந்தி என்றும், அதனை தடுக்க வேண்டிய அவசியத்தையும் கூறுகிறது. ஷென்னை அழைத்துக் கொண்டு பயணம் மேற்கொள்ளும் பாண்டா, கமீலியனை தடுத்தாரா என்பதுதான் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஜோ பிளாக் பாண்டா கரடிக்கு குரல் கொடுத்திருப்பவர். மற்ற 3 பாங்களில் எப்படி அவர் வேலையை சிறப்பாக செய்தாரோ இந்த பாகத்திலும் திறம் பட செய்துள்ளார். போ கதாப்பாத்திரத்தில் வரும் நகைச்சுவை டயாலாகை மிகவும் அழகாக கையாண்டு இருக்கிறார்.

    ஷென் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்வாஃபினா ‘குங்ஃபூ பாண்டா’ உலகத்துக்கு புதுவரவு.

    அனிமேஷன்

    அனிமேஷன் - களில் பிசிர் தட்டாமல் செய்திருக்கின்றனர். படத்தின் க்லைமாக்ஸில் பச்சோந்திக்கும் பாண்டா கரடிக்கும் சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் செல்லும் நகர்புற காட்சிகள் மிக நேர்த்தியாக செய்திருந்தனர்.

    இயக்கம்

    குங்ஃபூ பாண்டா படத்தில் நாம் முதலில் எதிர்பார்ப்பது நகைச்சுவை. இத்திரைப்படத்திலும் இயக்குனர் மைக் மிச்சல் மிக அழகாக நகைச்சுவையை கையாண்டு இருக்கிறார். பல நகைசுவைகள் வாய் விட்டு சிரிக்கும் படி அமைந்துள்ளன. பாகம் மூன்றை விட இந்த பாகம் நன்றாகவுள்ளது.

    இசை

    ஹான்ஸ் சிம்மர் இசையை திறம்பட செய்துள்ளார். கதையை விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறது.

    ஒளிப்பதிவு

    ஜோஷ்வா கந்தர் மிக அழகாக படத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார், க்ளைமாக்ஸ் காட்சிகளும், பாண்டா கரடி நகரபுறத்தில் சுற்றும் காட்சிகளை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.

    தயாரிப்பு

    ட்ரீம் வொர்க்ஸ் அனிமேஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×