search icon
என் மலர்tooltip icon
    < Back
    Leo
    Leo

    லியோ

    இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்
    எடிட்டர்:பிலோமின் ராஜ்
    ஒளிப்பதிவாளர்:மனோஜ் பரமஹம்சா
    இசை:அனிருத் ரவிச்சந்தர்
    வெளியீட்டு தேதி:2023-10-19
    ஓ.டி.டி தேதி:2023-11-24
    Points:54111

    ட்ரெண்ட்

    வாரம்12345678910
    தரவரிசை1111323722
    Point126921769813573746312851002237466352
    கரு

    விஜய்க்கு தன் தோற்றத்தால் வரும் பிரச்சனை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    விஜய் (பார்த்திபன்) தன் மனைவி திரிஷா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இமாசலப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கு சாக்லேட் கடை ஒன்றையும்  நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் விலங்குகளை பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டு வருகிறார்.

    ஒருநாள் திருடர்களான மிஷ்கின் மற்றும் சாண்டி, விஜய் சாக்லேட் கடைக்கு சென்று ஊழியர்களை துப்பாக்கி முனையில் நிற்க வைத்து பணம் பறிக்க முயல்கிறார்கள். அப்போது விஜய் பிரச்சனை வேண்டாம் என்று பணத்தை கொடுத்து முடித்துவிட பார்க்கிறார். ஆனால், அவர்களின் அட்டகாசம் எல்லை மீறவே விஜய் அவர்களின் துப்பாக்கியால் அவர்களை கொன்றுவிடுகிறார்.

    இதனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. விஜய் தற்காப்புக்காக தான் இந்த கொலையை செய்தார் என்று நிரூபணமாகி அவர் விடுவிக்கப்படுகிறார். அதுவரை உலகிற்கு யார் என்று தெரியாமல் இருந்த விஜய் இந்த வழக்கு மூலம் பிரபலமாகிறார். மேலும் இவரது புகைப்படம் பத்திரிகை மற்றும் செய்திகளில் வெளியிடப்படுகிறது. இந்த புகைப்படம் சஞ்சய் தத் கையில் கிடைக்கவே லியோ தாஸ் (விஜய்) போன்று இருக்கும் விஜய்யை (பார்த்திபன்) தேடி சஞ்சய் தத் வருகிறார்.

    இறுதியில்  விஜய்யை தேடி சஞ்சய் தத் ஏன் வருகிறார்? லியோ தாஸுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    வழக்கம் போல் விஜய் இந்த படத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே வேறுபாடு காண்பித்து நியாயம் செய்துள்ளார்.  காதல், அன்பு, ஆக்‌ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். முழு படத்தையும் தன் தோளில் சுமந்துள்ளார். 

    வில்லனாக திரையை ஆக்கிரமித்துள்ள சஞ்சய் தத் தன் மிரட்டும் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  மனைவியாக வரும் திரிஷா, விஜய்க்கு உறுதுணையாக இருக்கிறார்.  மேலும் அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    லோகேஷ் படம் என்றாலே சொல்லவா வேண்டும் என்பது போல இந்த படத்தையும் இயக்கியுள்ளார். திரைப்பிரபலங்களை எல்லாம் தன் படத்தில் இறக்கி மாஸ் காட்டியுள்ளார். முதல் பாதியில் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டு இரண்டாம் பாதியில் சற்று சலிப்பை ஏற்படுத்தியுள்ள திரைக்கதை வருத்தமளிக்கிறது. திரிஷா -விஜய்யின் காட்சியை இன்னும் அழுத்தமக அமைத்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளை உலக தரத்தில் அமைத்துள்ளனர். குறிப்பாக ஹைனா வரும் காட்சிகள் நிஜமாகவே ஹனா இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இசை

    அனிருத் இசையில் மிரட்டியுள்ளார். இவர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    மனோஜ், இமாசலப்பிரதேசத்தின் அழகை தன் ஒளிப்பதிவு மூலம் கவரும் வகையில் காட்டியுள்ளார்.

    படத்தொகுப்பு

    பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.

    காஸ்டியூம்

    பல்லவி சிங், ஏகா லகானி, பிரவீன் ராஜா காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

    சவுண்ட் எபெக்ட்

    கண்ணன் கணபத் சவுண்ட் மிக்ஸிங் அருமை.

    புரொடக்‌ஷன்

    செவன் ஸ்கிரீன் நிறுவனம் ‘லியோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-05-03 10:42:45.0
    KALI RAJ

    Super 😍👍👍👍👍👍👍

    2024-04-09 05:02:07.0
    Manoj Kumar

    2024-03-16 03:49:34.0
    SRINI G

    2024-02-19 09:31:55.0
    Shiva

    2024-02-19 09:30:11.0
    Allahrakha Shaikh

    Movie is too good

    2023-12-10 07:14:00.0
    Selvarajan Rangaswamy

    Good entertainment movie

    2023-12-10 07:13:56.0
    Selvarajan Rangaswamy

    Good entertainment movie

    2023-12-08 12:13:56.0
    Arumugam

    2023-11-29 09:21:04.0
    vigneshwari kumar

    Super

    2023-11-23 12:34:15.0
    vinoth

    2023-11-23 07:00:20.0
    Baby Gillba

    nice

    2023-11-22 10:04:34.0
    Suresh K Jangir

    nice

    2023-11-22 09:55:02.0
    Suresh K Jangir

    ceate user review

    2023-11-22 09:54:34.0
    Suresh K Jangir

    nice movie

    2023-11-22 09:51:44.0
    Suresh K Jangir

    good movie

    2023-11-22 06:56:59.0
    abhishek

    2023-11-22 06:52:49.0
    abhishek

    d

    2023-11-22 06:34:11.0
    abhishek

    d

    2023-11-22 06:28:51.0
    abhishek

    d

    2023-11-22 06:25:07.0
    abhishek

    2023-11-22 04:56:52.0
    abhishek

    mjk

    2023-11-21 13:21:59.0
    abhishek

    test

    2023-11-21 13:19:11.0
    abhishek

    nice review

    2023-11-21 13:17:54.0
    abhishek

    test

    2023-11-21 12:32:15.0
    abhishek

    2023-11-21 12:31:35.0
    abhishek

    2023-11-21 06:41:43.0
    ashwani mishra

    nice

    ×