search icon
என் மலர்tooltip icon
    < Back
    Madame Web
    Madame Web

    மேடம் வெப்

    இயக்குனர்: எஸ். ஜே. கிளார்க்சன்
    எடிட்டர்:லே ஃபோல்சம் பாய்ட்
    ஒளிப்பதிவாளர்:மௌரோ ஃபியோர்
    இசை:ஜோஹன் சோடெர்க்விஸ்ட்
    வெளியீட்டு தேதி:2024-02-14
    Points:1039

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை7690
    Point525514
    கரு

    ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகளை பெற்ற ஒரு பெண்ணின் சாகச கதையிது.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    அமேசான் காடுகளில் உள்ள விசித்திர சிலந்தியை தேடி, ஒரு கர்ப்பிணி பெண் பயணிக்கிறார். நீண்ட தேடுதலுக்கு பின் அந்த சிலந்தியை பிடிக்கும் பெண்ணை, அவருக்கு பாதுகாவலராக இருந்த நபரே துப்பாக்கியால் சுட்டு விட்டு சிலந்தியுடன் தப்பிக்கிறார்.

    படுகாயமடைந்த பெண் அங்கிருந்த காட்டுவாசிகளால் மீட்கப்பட்டாலும், குழந்தையை பெற்றவுடன் இறந்துவிடுகிறார். பிறந்த குழந்தை வளர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். ஒரு விபத்தில் அவருக்கு எதிர்காலத்தை பார்க்கும் சக்தி கிடைக்கிறது. இதன் மூலம்,  தனது தாயை கொன்ற நபரே மேலும் 3 இளம் பெண்களை கொலை செய்ய வருவதை அறிந்து கொள்கிறார். அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

    இறுதியில் 3 பெண்கள் காப்பாற்றப்பட்டார்களா? எதற்காக அந்த நபர் கொலை செய்ய முயற்சி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தின் மிக முக்கிய பிளஸ் மேடம் வெப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள டகோடா ஜான்சன் தான். தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உழைப்பை முடிந்த வரை வெளிப்படுத்தியுள்ளார். 3 பெண்களை காப்பாற்ற இவர் எடுக்கும் முயற்சி ரசிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    பெரிய அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாதது வருத்தம். இயல்பான கதைக்களத்தை அமைத்து சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் கிளார்க் சன் தன்னால் முடிந்த அளவிற்கு இயக்கி இருக்கிறார். ஆனால், மார்வல் படங்களுக்கு உண்டான பிரம்மாண்டம் இப்படத்தில் இல்லை.

    பெரும்பாலான முக்கிய அம்சங்களை, வெறும் வசனங்கள் மூலம் கடத்த முற்பட்டு இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஸ்பைடர் மேனின் சக்திகளை கொண்டிருக்கும் வில்லனின் பின்புலம் என்ன? அவர் நோக்கம் என்ன? என்பதில் எந்த தெளிவும் இல்லை. சாதாரணமாக வந்து சென்றிருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    மௌரோ ஃபியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    இசை

    ஜோஹன் சோடெர்க்விஸ்ட் பின்னணி இசை மிரட்டல். திரைக்கதைக்கு ஏற்றவாறு இவரது இசை அமைந்துள்ளது.

    படத்தொகுப்பு

    லே ஃபோல்சம் பாய்ட் படத்தொகுப்பு சிறப்பு.

     

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×