search icon
என் மலர்tooltip icon
    < Back
    Never Escape
    Never Escape

    நெவர் எஸ்கேப்

    இயக்குனர்: டிஸ்ரி அரவிந்த் தேவராஜ்
    இசை:எஸ் சரண் குமார்
    வெளியீட்டு தேதி:2024-04-20
    Points:247

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை189150
    Point89158
    கரு

    அமானுஷ்ய சக்தி கொண்ட தியேட்டருக்குள் யூடியூப்பர்களும் குற்றவாளிகளும் சிக்கிக் கொண்டு தவிக்கும் கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    ஒரு தியேட்டரில் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக ஊர் மக்கள் அந்த பக்கமே போவதற்கு பயப்படுகிறார்கள். மக்களின் இத்தகைய பயத்தை போக்கி, திரையரங்கிற்குள் நடப்பதாக சொல்லப்படும் அமானுஷ்ய விஷயங்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதற்காக யூடியூப் சேனல் குழுவினர் அந்த திரையரங்கிற்குள் நுழைகிறார்கள்.

    அதே சமயம், போலீசிடம் இருந்து தப்பித்து வரும் சிலர் பதுங்குவதற்காக அந்த திரையரங்கிற்குள் நுழைகிறார்கள். இவர்களுக்கு திரையரங்க உரிமையாளரான ராபர்ட் டிக்கெட் கிழித்து கொடுத்து உள்ளே அனுப்புகிறார். திரையரங்கிற்குள் சென்றவர்கள் சில நிமிடங்களில் அங்கு ஏதோ அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதை உணர்கிறார்கள். உடனே அங்கிருந்து அவர்கள் தப்பிக்க முயற்சிக்க, அது முடியாமல் போகிறது. இறுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? இல்லையா? திரையரங்கிற்குள் இருக்கும் அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து, தனது ஒவ்வொரு அசைவுகளிலும் சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார். மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் புதுமுகங்கள் என்பதால் நடிப்பு அதிகம் எதிர்பார்க்க முடியவில்லை.

    இயக்கம்

    பேய் படங்களுக்கு உண்டான பழைய காலத்து பாணியை பின்பற்றி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த் தேவராஜ். கதை மற்றும் திகில் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் போன்றவற்றின் மூலம் படம் வெகுவாக கவர்ந்தாலும், கதை ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பதோடு, ஒரே விஷயம் திரும்ப திரும்ப வருவதுபோல் அமைக்கப்பட்ட திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சாஸ்தி, நிழல் மற்றும் நிஜத்தை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் சரண்குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பயம்படும் அளவிற்கு கொடுத்து இருக்கிறார்.

    தயாரிப்பு

    நான்சி ப்லோரா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×