search icon
என் மலர்tooltip icon
    < Back
    no6 vaathiyaar kaalpandhatta kuzhu
    no6 vaathiyaar kaalpandhatta kuzhu

    எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு

    இயக்குனர்: ஹரி உத்ரா
    எடிட்டர்:கிஷோர் எம்
    ஒளிப்பதிவாளர்:டி வினோத் ராஜா
    இசை:அஜ் அலிமிர்சாக்
    வெளியீட்டு தேதி:2023-09-15
    Points:250

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை176156124
    Point1081384
    கரு

    கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலி தொழிலாளர்களின் திறமை ஒதுக்கப்படுவது குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    பெரிய கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தக்‌ஷிணா மூர்த்திக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு ஒழுக்காக நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இவர் குப்பத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு கோச்சிங் கொடுத்து முன்னேற்றி வருகிறார். இதில் ஒருவரான நாயகன் சரத், நாயகி அய்ராவை காதலிக்கிறார். இதனால் அவர் கால்பந்தாட்டத்தில் ஒழுங்காக கவனம் இல்லாமல் இருக்கிறார்.

    ஒரு கட்டத்தில் மதன் தக்‌ஷிணா மூர்த்தியின் கோச்சிங்கில் இளைஞர்கள் கவனத்திற்குள்ளான ஆட்களாக மாறுகிறார்கள். இதைத்தொடர்ந்து கால்பந்து கமிட்டியில் இவர்களில் சிலரை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்போது வில்லன் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் எப்படி மேல் மட்டத்திற்கு வரலாம் என்ற ஈகோவில் அந்த இளைஞர்களை தேர்ந்தெடுக்கவிடாமல் தடுத்துவிடுகிறார்.

    இதனால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இறுதியில் இந்த இளைஞர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகன் சரத் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். காதல், கோபம் என அனைத்திற்கும் ஒரே முகபாவனையை கொடுத்து சலிக்க வைத்துள்ளார். நாயகி அய்ரா தன் வேலையை சிறப்பாக செய்துள்ளார். மதன் தக்‌ஷிணா மூர்த்தி மற்றும் கஞ்சா கருப்பு கொடுத்த வேலையை செய்துள்ளனர். அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரின் நடிப்பும் கவனத்தை ஈர்க்கவில்லை.

    இயக்கம்

    கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலி தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் எஸ்.ஹரி உத்ரா. சமூகத்திற்கு தேவையான கதையை எடுத்த இயக்குனருக்கு அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. படத்தில் பல லாஜிக் ஓட்டைகள் இருக்கிறது.

    இசை

    அலிம்மிஸ்ராக் இசையில் பாடல்கள் எடுபடவில்லை.

    ஒளிப்பதிவு

    வினோத் ராஜா படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

    படத்தொகுப்பு

    கிஷோர் படத்தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    சவுண்ட் எபெக்ட்

    நிஷோக், சண்முகம் சவுண்ட் மிக்ஸிங் பரவாயில்லை.

    புரொடக்‌ஷன்

    உத்ரா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பி.எஸ்.எஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து 'எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×