search icon
என் மலர்tooltip icon
    < Back
    Odavum mudiyathu oliyavum mudiyathu
    Odavum mudiyathu oliyavum mudiyathu

    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

    இயக்குனர்: ரமேஷ் வெங்கட்
    எடிட்டர்:கணேஷ் சிவா
    ஒளிப்பதிவாளர்:ஜோஸ்வா ஜோசப் பிரேஸ்
    இசை:கெளஷிக் கிரிஷ்
    வெளியீட்டு தேதி:2023-12-29
    Points:1162

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை1118357
    Point315604243
    கரு

    அமானுஷ்யங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    யாஷிகா ஆனந்த் மற்றும் ஹரிஜா ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். அப்போது நண்பர்கள் வட்டாரத்தில் ஆபாச படத்தை பெண்களால் திரையரங்கில் பார்க்க முடியாது என விவாதம் எழுகிறது. இதனை சவாலாக எடுத்துக் கொண்ட யாஷிகா ஆனந்தும், ஹரிஜாவும் நாங்கள் ஆபாச படம் பார்த்துக் காட்டுகிறோம் என்று இரவு படம் பார்க்க திரையரங்கிற்கு செல்கிறார்கள்.

    மற்றொருபுறம் சத்யமூர்த்தி, விஜய், கோபி, சுதாகர் மற்றும் நண்பர்கள் ஊருக்கு செல்வதற்காக புறப்படுகிறார்கள். அந்த நேரத்தில் போராட்டம் நடைபெறுவதால் இரவு ஆபாச படம் பார்ப்பதற்காக அதே திரையரங்கிற்கு செல்கிறார்கள். இவர்களுடன் பள்ளி மாணவர்கள், காதலர்கள் என பலர் அந்த திரையரங்கிற்கு படம் பார்ப்பதற்கு செல்கிறார்.

    திரையரங்கில் படம் தொடங்கும் போதே அமானுஷ்யமும் தொடங்குகிறது. திரையரங்கிற்குள் சென்றவர்களால் அதைவிட்டு வெளியேற முடியவில்லை. இறுதியில் அந்த திரையரங்கில் இருந்த அமானுஷ்யம் என்ன? உள்ளே சென்றவர்களின் நிலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சைத்ரா படத்திற்கு பிறகு யாஷிகா ஆனந்த் நடித்துள்ள பேய் படம் இது. வழக்கம் போல் தனது கவர்ச்சியான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். யூ டியூப் பிரபலங்களான சத்யமூர்த்தி, விஜய், கோபி, சுதாகர் என ஒரு பட்டாளமே படத்தில் உள்ளது. இவர்கள் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    அமானுஷ்ய கதையை காமெடியாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் வெங்கடேஷ். நடிகர்களை கதைக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளார். திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

    இசை

    கெளஷிக் கிரிஷ் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ஜோஸ்வா பிரேஸ் ஒளிப்பதிவு ரசிக்க வைத்துள்ளது.

    படத்தொகுப்பு

    கணேஷ் சிவா படத்தொகுப்பு ஓகே.

    காஸ்டியூம்

    ரவீந்திரன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    அக்‌ஷயா பிக்சர்ஸ் நிறுவனம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-01-27 03:02:21.0
    Puvi

    ×