search icon
என் மலர்tooltip icon
    < Back
    Parking
    Parking

    பார்க்கிங்

    இயக்குனர்: ராம்குமார் பாலகிருஷ்ணன்
    எடிட்டர்:பிலோமின் ராஜ்
    ஒளிப்பதிவாளர்:ஜிஜு சன்னி
    இசை:சாம் சி.எஸ்
    வெளியீட்டு தேதி:2023-12-01
    Points:6412

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை282730333518
    Point2165271810823036777
    கரு

    பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சனை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    ஐ.டி.யில் வேலை பார்த்து வரும் நாயகன் ஹரிஷ் கல்யாண், மனைவி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பிணியாக இருக்கும் இந்துஜாவுடன் மாடி வீட்டிற்கு வாடகைக்கு செல்கிறார். கீழ் வீட்டில் அரசு வேலை பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் மனைவி மக்களுடன் வாழ்ந்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர் மிகவும் நேர்மையாகவும், சிக்கனமாகவும் வாழ்கிறார்.

    இரண்டு குடும்பமும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் புதிய கார் ஒன்றை வாங்குகிறார். இதை தன் வீட்டின் கீழ் நிறுத்த, எம்.எஸ்.பாஸ்கரின் பைக் விடுவதற்கு அது சிரமமாக மாறுகிறது. ஒருநாள் எம்.எஸ்.பாஸ்கர் தன் பைக் எடுக்கும் போது தவறுதலாக காரில் கோடு விழுந்து விடுகிறது. இதனால் இரண்டு பேருக்கும் சண்டை ஆரம்பமாகிறது.

    இதில் வீம்புக்காக எம்.எஸ்.பாஸ்கர் புதிய கார் ஒன்றை வாங்குகிறார். இதிலிருந்து யார் காரை வீட்டில் பார்க்கிங் செய்வது என்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் இவர்களின் கார் பார்க்கிங் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், துறுதுறு இளைஞனாக நடித்து இருக்கிறார். நல்ல கணவனாக இந்துஜா மீது பாசம் காட்டும் போதும், எம்.எஸ்.பாஸ்கர் மீது கோபப்படும் போதும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்து இருக்கும் இந்துஜா அழகாக வந்து அளவான, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கணவருக்காக மன்னிப்பு கேட்கும் காட்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

    வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அமைதி, வெறுப்பு, நேர்மை, பரிதவிப்பு, கோபம், சண்டை என நடிப்பில் பளிச்சிடுகிறார். முழு கதையையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இவரது மனைவியாக வரும் ரமா ராஜேந்திரா, மகளாக வரும் பிராத்தனா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    கார் பார்க்கிங்கால் ஒரு வீட்டில் இருக்கும் பிரச்சனையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஈகோவால் ஒருவர் எந்த எல்லைக்கும் போவார் என்பதை சொல்லி இருக்கிறார். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ போரை முதல் பாதியில் விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் யதார்த்த மீரல்களாக  காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

    இசை

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கிறது. பின்னணி இசை அவரது வழக்கம் போல் உள்ள ஸ்டைலில் இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    ஜிஜு சன்னி ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக அமைந்து இருக்கிறது.

    படத்தொகுப்பு

    பிலோமின் ராஜ் படத்தொகுப்பு அருமை.

    காஸ்டிட்யூம்

    ஷேர் அலி காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

    புரொடக்‌ஷன்

    சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து ’பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-02-14 07:18:18.0
    Edwin Joel

    Good

    2023-12-20 11:29:37.0
    Baby Gillba

    ×