search icon
என் மலர்tooltip icon
    < Back
    Raththam
    Raththam

    ரத்தம்

    இயக்குனர்: சி.எஸ்.அமுதன்
    எடிட்டர்:டி.எஸ்.சுரேஷ்
    ஒளிப்பதிவாளர்:கோபி அமர்நாத்
    இசை:கண்ணன் நாராயணன்
    வெளியீட்டு தேதி:2023-10-06
    Points:5075

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை352837
    Point15972718760
    கரு

    செய்தி குறித்து ஆராயும் நிருபருக்கு ஏற்படும் பிரச்சனை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    பத்திரிகை நிறுவனத்தின் நிருபரான விஜய் ஆண்டனி வேலை விஷயமாக வெளியூர் செல்கிறார். அப்போது அவரது மனைவிக்கு பிரசவலி ஏற்படுகிறது. பிரசவத்தின் போது அவர் இறந்துவிடுகிறார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி குடிக்கு அடிமையாகி தன் மகளுடன் மும்பையில் தனியாக வசித்து வருகிறார்.

    ஒருநாள் விஜய் ஆண்டனிக்கு மறுபடியும் நிருபர் வேலையில் வந்து சேருமாறு அழைப்பு வருகிறது. முதலில் அந்த அழைப்பை மறுக்கும் விஜய் ஆண்டனி அதன்பின் தன் மகளுக்காக அந்த வேலையில் சேர்கிறார். அப்போது ஒரு செய்தி குறித்து விஜய் ஆண்டனி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அது ஒரு பெரிய பிரச்சனையாக முடிகிறது.

    இறுதியில் அது என்ன பிரச்சனை? அந்த பிரச்சனையில் இருந்து விஜய் ஆண்டனி எப்படி வெளிவந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    விஜய் ஆண்டனி எப்போதும் போல் தன் சாதுவான நடிப்பால் கவந்துள்ளார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ரம்யா நம்பீசன் மற்றும் நந்திதா அழகாக தோன்றி திரையை ஆக்கிரமித்துள்ளார்.

    எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகிமா நம்பியார் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். நிழல்கள் ரவி தன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    இயக்கம்

    ஒரு வித்தியாசமான கதையை இயக்கியுள்ளார் சி.எஸ்.அமுதன். இடைவேளையில் ஒரு ட்விஸ்டை வைத்து படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்துள்ளார். கதையை வலுவாக அமைத்த இயக்குனர் திரைக்கதையில் சொதப்பிவிட்டார். படத்தில் சில நம்ப முடியாத காட்சிகள் இருப்பது ஏமாற்றம். படத்தின் வேகத்தை சற்று அதிகரித்திருக்கலாம்.

    இசை

    கண்ணன் நாராயணன் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    படத்தொகுப்பு

    டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு ஓகே.

    காஸ்டியூம்

    ஷிமோனா ஸ்டாலின் காஸ்டியூம் பரவாயில்லை.

    புரொடக்‌ஷன்

    இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் ‘ரத்தம்’ படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×