search icon
என் மலர்tooltip icon
    < Back
    Va Varalam Va
    Va Varalam Va

    வா வரலாம் வா

    இயக்குனர்: சுரேஷ் பாபு ஆர்
    ஒளிப்பதிவாளர்:கார்த்திக் ராஜா
    இசை:தேவா
    வெளியீட்டு தேதி:2023-12-01
    Points:295

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை117
    Point295
    கரு

    காதலியுடன் இணைய போராடும் இரண்டு இளைஞர்கள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கொய்யா பழத்திற்காக சிறு வயதிலேயே கொலை செய்துவிட்டு சிறை செல்லும் பாலாஜி முருகதாஸும் ரெடின் கிங்ஸ்லியும் பதின் பருவத்தில் சிறையிலிருந்து வெளியே வருகிறார்கள். வெளியே வந்ததும் வேலை தேடி அலைகிறார்கள். ஆனால் யாரும் வேலை கொடுக்கவில்லை.

    இதனால் திருட்டு தொழில் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாலாஜியும் ரெடின் கிங்ஸ்லியும் பெரிய திருடனான மைம் கோபியுடன் கைக்கோர்த்து திருட்டு தொழில் செய்கிறார். அப்போது ஒரு பஸ்ஸை பாலாஜியும் ரெடின் கிங்ஸ்லியும் கடத்துகிறார்கள். அதில், கதாநாயகிகளான மஹானா சஞ்சீவையும் காயத்ரியும் பார்த்தவுடன் இருவரும் காதலில் விழுகிறார்கள்.

    இதனால் இருவரும் மைம் கோபியை தவிர்த்து விட்டு அவர்கள் காதல் வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அப்போது மைம் கோபிக்கு கதாநாயகிகள் இருவரும் பணக்கார வீட்டு பெண்கள் என்று தெரிய வருகிறது. இதனால் மைம் கோபி கதாநாயகிகளை கடத்தி செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்.

    இறுதியில் மைம் கோபி திட்டம் என்ன ஆனது? பாலாஜியும் ரெடின் கிங்ஸ்லியும் தன் காதலிகளுடன் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    பாலாஜி முருகதாஸ் நடிப்பு அவருக்கு நடிக்க தெரியுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் மட்டும் பாராட்டும் விதமாக நடித்துள்ளார். கதாநாயகிகளான மஹானா சஞ்சீவ் மற்றும் காயத்ரி ரெமா தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். ரெடின் கிங்ஸ்லி தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

    இயக்கம்

    திருட்டை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுரேஷ் பாபு. படத்தின் திரைக்கதை குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை இன்னும் வேலை வாங்கியிருக்கலாம்.

    இசை

    தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    படத்தொகுப்பு

    ராஜா முகமத் படத்தொகுப்பு ரசிக்கும் படியாக இல்லை.

    காஸ்டியூம்

    காசி காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

    புரொடக்‌ஷன்

    எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா நிறுவனம் ‘வா வரலாம் வா’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×