search icon
என் மலர்tooltip icon
    < Back
    Vaa Pagandaya
    Vaa Pagandaya

    வா பகண்டையா

    இயக்குனர்: ஜெயக்குமார் பலராமன்
    இசை:எஸ்.ஏ. ராஜ்குமார்
    வெளியீட்டு தேதி:2024-04-12
    Points:204

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை188171129
    Point911094
    கரு

    மருத்துவ கல்லூரி மாணவன் தன் நண்பனுக்காக உதவி செய்ய போய் நடந்த விபரீதத்தின் பற்றிய கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    கதாநாயகன் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ஆனால் அவருக்கு மருத்துவ படிப்பில் பெரிதாக ஈடுப்பாடில்லை அவருக்கு கவனம் எல்லாம் விளையாட்டு துறையில் தான்.  ஒரு பெரிய அத்லட் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் கதாநாயகன். அதனால் ஸ்டேட் லெவல் வரை நடக்கும் போட்டியில் கலந்துக் கொண்டு வெல்கிறார்.

    கதாநாயகனுக்கு மருத்துவ கல்லூரியில் ஒரு நெருங்கிய நண்பன் இருக்கிறான். அந்த  நண்பனின் அண்ணாவும் ஒரு டாக்டர் தான். அவரைப் படிக்க வைக்க அம்மா மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு மூத்த மகனை டாக்டர் படிக்க வைக்கிறாள். ஆனால் இளைய மகனை அவரால் படிக்க வைக்க முடியவில்லை. கதாநாயகன் அவனுக்கு உதவி செய்து மருத்துவ படிப்பை படிக்க வைக்கிறான்.

    நண்பனின் அண்ணா மிகவும் மோசமாக நடந்துக் கொள்கிறார். தம்பி படிப்பிற்கு உதவாமல் தன் சொந்த அம்மாவை பிச்சை எடுக்க வைக்கிறான். இதை தட்டி கேட்ட கதாநாயகன் மீது அவனுக்கு கோபம் வருகிறது. அதற்கு அடுத்து கதாநாயகன் திடீர் என்று பைத்தியம் பிடிக்கிறது. இதற்கடுத்து என்ன ஆனது? நண்பனின் படிப்பு என்ன ஆனது? கதாநாயகன் இந்நிலைக்கு யார் காரணம்? என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்து இருக்கும் விஜய தினேஷ் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நாயகி ஆர்த்திகா அவரின் பணியை அளவான நடிப்பில் செய்திருக்கிறார்.

    இவர்களைத் தவிர நிறைய பேர்சொல்லும் நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் யாரையும் சரியாக உபயோகிக்கவில்லை இயக்குனர்.

    இயக்கம்

    ஜெயகுமார் என்ன கதை சொல்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஜாதியைப் பற்றி பேசுகிறேன் என்று ஏதேதோ கதையை சொல்லி இருக்கிறார். கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் காட்சி நடந்துக் கொண்டு இருக்கும் பொழுது டக்கென கட் செய்து அடுத்த காட்சிக்கு சென்று விடுகிறார். கதையில் கண்டின்யுவிட்டி என்றால் கிலோ என்ன விலை என கேட்பார் போல இயக்குனர் ஜெயகுமார். கதையிலும் திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

    இசை

    எஸ்.ஏ ராஜ் குமாரின் இசை கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு கை கொடுக்கவில்லை. எஸ்.பி.பி பாடிய அம்மா பாடல் மிக அழகாக படத்தில் அமைந்து இருக்கிறது.

    படத்தொகுப்பு

    சுரேஷ் செய்த படதொகுப்பு படத்தின் கூடுதல் பலம்.

    தயாரிப்பு

    ஜெயகுமார் பலராமன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×