search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தம்பிடி
    X

    தம்பிடி

    • என்னிடம் ஒரு தம்பிடி கூட இல்லை என்பார்கள்.
    • தம்பிடி மட்டுமல்ல, அது குறிக்கிற அரை பைசா கணக்கு கூட கேள்விப்படல்லை

    தம்பிடி...

    இந்தச் சொல்லை அந்தக் காலத்தில் பெரியவர்கள் கூறுவதைக் கேட்டிருப்போம்.

    எப்பா அவ்வளவு செலவுக்கு நான் எங்க போக?

    என்னிடம் ஒரு தம்பிடி கூட இல்லை என்பார்கள்.

    தம்பிடினா இன்றைய மதிப்பில் எவ்வளவு காசு?

    இன்னைக்கு தம்பிடியைக் கொண்டு யாரிடமாவது கொடுத்தா.. அவ்வளவு தான்.. தூக்கி மூஞ்சியிலேயே எறிஞ்சுடுவான்.

    எம்பூட்டு தம்பிடினா?

    அரை பைசா..பைசாவிலே பாதி.

    தம்பிடி மட்டுமல்ல, அது குறிக்கிற அரை பைசா கணக்கு கூட கேள்விப்படல்லை இதுகாறும்.

    ஒரு அணா.. 6 பைசா..

    தம்பிடி- அரை பைசா ..

    12 தம்பிடி ஒரு அணா..

    நாலணா கணக்குப்படி 24 பைசா

    (புழக்கத்தில் 25 பைசா)

    எட்டணா கணக்குப்படி 48 பைசா

    புழக்கத்தில் 50 பைசா

    16 அணா..ஒரு ரூபாய். ..96 பைசா

    192 தம்பிடி..

    ஒரு ரூபாயை பையிலே வச்சிக்கிட்டு இட்லிக்கடைக்கு சாப்பிடப் போயிருக்கேளா? அதுவும் இரண்டு பேரு.

    நாங்க போனது நினைவு இருக்கு.

    இந்தக் கால பிள்ளைகளுக்கு வியப்பளிக்கக் கூடும்.

    -மு.சோமசுந்தரம்

    Next Story
    ×