search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    டாவின்சியும் மோனலிசாவும்
    X

    டாவின்சியும் மோனலிசாவும்

    • தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார்.
    • மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது.

    உலக புகழ் பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சியை ஓவியர் என்பதைவிட அறிவியல் கலைஞர் என்று சொல்வதே சாலப் பொருத்தமாக இருக்கும் !

    ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியானர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி 'ஆன்கியானோ' என்ற நகரத்தில் பிறந்தார். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார். பிற்காலத்தில் தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார்.

    இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், 'மோனாலிசா' குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது. இது உலகப் புகழ் பெற்றது.

    மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

    காலத்தை வென்று நிலைத்து நிற்கும் 'மோனலிசா' ஓவியம் இன்று மட்டுமின்றி எக்காலத்திலும் லியானர்டோ டாவின்சியின் புகழை பறைசாற்றிக்கொண்டேயிருக்கும்.

    -அருண்நாகலிங்கம்

    Next Story
    ×