search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    வெட்டிவேர் மருத்துவம்
    X

    வெட்டிவேர் மருத்துவம்

    • மண்பானைத் தண்ணீருடன் வெட்டிவேர் சேர்த்தால் கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும்.
    • பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது.

    வெட்டிவேர், மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும். மேலும் பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது. இது குளிர்ச்சி தருவதுடன் நறுமணம் வீசி உடலுக்கு உற்சாகத்தைத் தரக்கூடியது. இதிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது.

    இதனை மணமூட்டுவதற்காகத் தைலங்கள், குளியல் சோப்புகளில் பயன்படுத்துகிறார்கள். வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.

    இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் புத்துணர்வை உண்டாக்கும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

    வெட்டிவேரை நன்றாக உலர்த்திப் பொடி செய்து 200 மில்லி கிராம் முதல் 400 மில்லி கிராம் அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு, அந்த நீரை 30 மில்லி முதல் 65 மில்லி வீதம் குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.

    மண்பானைத் தண்ணீருடன் வெட்டிவேர் சேர்த்தால் கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். மேலும் நறுமணம் வீசும் இந்த நீரை குடிப்பதால் உடல்சூடு குறையும்.

    -மரிய பெல்சின்

    Next Story
    ×