search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
    X

    ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    • ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

    பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும்.

    இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

    முன்னதாக, 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×