search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
    X

    ஜோதி அள்ளி கிரமத்தில் தயார் நிலையில் உள்ள வாக்குசாவடி மையம்.

    ரெயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

    • கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
    • வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    பாலக்கோடு:

    தருமபுரி பாராளுமன்ற தொகுதி பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதி அள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரெயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை கூட நடத்தவராததால் திட்டமிட்டபடி ஒட்டுமொத்த கிராம மக்களும் இன்று பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

    வெறிச்சோடி காணப்படும் வாக்குசாவடி மையம்.

    இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆண் வாக்காளர்கள் 768 பேரும், பெண் வாக்காளர்கள் 668 பேரும் என மொத்தம் ஆயிரத்து 436 வாக்குகள் உள்ள நிலையில் இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகாதது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை எந்த ஒரு தேர்தல் அதிகாரியும் கிராமத்துக்கு வரவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    Next Story
    ×