search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மேலும் ஒரு இந்தியர் மரணம்?
    X

    ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மேலும் ஒரு இந்தியர் மரணம்?

    • குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
    • ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார்.

    ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்டு இந்திய வாலிபர்கள் சிலரை அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உதவியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள் உக்ரைனுக்கு எதிராக போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையத்து இந்தியர்கள் சிலர் தங்களை மீட்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதற்கிடையே சமீபத்தில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்பான் (30) போரில் பலியானார்.


    இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் ரஷிய படைகள் கைப்பற்றிய கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் போரில் ஏவுகணை தாக்குதலில் ஹெமில் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார். போரில் இறந்த ஹெமில் உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அவரது தந்தை அஸ்வின் இந்திய தூதரகத்துக்கு பல முறை இ.மெயில் அனுப்பியதாக தெரிவித்தார்.

    Next Story
    ×