search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • புது ஐபேட்கள் இருவித அளவுகளில் கிடைக்கும்.
    • இதுவே வெளியீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது.

    ஆப்பிள் நிருவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், புது ஐபேட் மாடல்களின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஆப்பிள் டேப்லெட் மாடல்கள் மே மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில், "ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது."

    "புது ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மேஜிக் கீபோர்டு, புதிய M3 சிப்செட்கள் வழங்கப்படலாம். புதிய ஐபேட் ஏர் மாடல்கள் 11.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் மாடல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புது ஐபேட் ப்ரோ மாடல்களில் உள்ள OLED டிஸ்ப்ளேவை அசெம்பில் செய்ய சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதே, வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெவலப்பர்கள் ஆப்பிள் குழுவினரை நேரில் சந்தித்து உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சந்தா முறையை எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
    • முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின.

    டுவிட்டர் தளத்தை வாங்கி அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர் எலான் மஸ்க். இதில் பிரபல சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் அடங்கும். பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.

    பிறகு, இதேபோன்ற திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். மேலும் 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இலவச பிரீமியம் சந்தா பெறுவது எப்படி?

    எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பின் படி எக்ஸ் தளத்தில் 2500 ஃபாளோவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. மாறாக 2500 ஃபாளோவர்கள் இருப்பின் அவர்கள் எக்ஸ் தளத்தின் பேசிக், பிரீமியம் அல்லது பிரீமியம் பிளஸ் சந்தாக்களில் எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இதே போன்று பிரீமியம் பிளஸ் சந்தாவை இலவசமாக பெற, குறிப்பிட்ட எக்ஸ் அக்கவுண்ட்-ஐ குறைந்தபட்சம் 5000 ஃபாளோவர்கள் இந்த சந்தாக்களில் எதையேனும் வாங்கியிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    • 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
    • யு.பி.ஐ. பேமண்ட் கடந்த 2020 ஆண்டு அறிமுகம்.

    வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களில் புது வசதி யு.பி.ஐ. செட்டிங்ஸ் (UPI Settings) பகுதியில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) ஆப்ஷனில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

    இதனை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ. பேமண்ட் வசதியை வழங்கும் போன்பே (PhonePe) மற்றும் ஜிபே (GPay) உள்ளிட்டவைகளில் இந்த வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்-இல் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. பேமண்ட் சேவை கடந்த 2020 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.

    சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.
    • 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.

    லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் முன்னதாக 2024 சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் 7.15mm அளவில், 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 11 இன்ச் 90Hz டிஸ்ப்ளே, 1920x1200 WUXGA ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டி.யு.வி. ரெயின்லாந்து மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் HD சான்று பெற்றுள்ளது. இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், மாலி G52 GPU, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

     


    லெனோவோ டேப் M11 அம்சங்கள்:

    11 இன்ச் 1920x1200 WUXGA டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்

    மாலி G52 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    13MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13

    குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி

    3.5mm ஆடியோ ஜாக், வைபை, ப்ளூடூத் 5.1

    7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    15 வாட் சார்ஜிங் வசதி

    லெனோவோ டேப் பென் மற்றும் கீபோர்டு சப்போர்ட்

    லெனோவோவின் புதிய டேப் M11 மாடல் சீஃபார்ம் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.

    • பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
    • மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலுரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பனோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.

    முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி தவுலுரி சர்பேஸ் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை அடுத்து, தவுலுரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார். இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் தவுலுரி இணைந்துள்ளார்.

    • இந்த ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    போக்கோ நிறுவனம் முற்றிலும் புதிய C61 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் 90Hz HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் G36 பிராசஸர், விர்ச்சுவல் ரேம் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரீமியம் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் போக்கோ C61 ஸ்மார்ட்போனில் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 8MP ஏ.ஐ. டூயல் கேமரா செட்டப், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     


    போக்கோ C61 அம்சங்கள்:

    6.71 இன்ச் 1650x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்

    IMG பவர் வி.ஆர். GE8320 GPU

    4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்

    64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 14

    டூயல் சிம் ஸ்லாட்

    8MP பிரைமரி கேமரா, இரண்டாவது கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    போக்கோ C61 ஸ்மா்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மார்ச் 28 ஆம் தேதி துவங்குகிறது. முதல் நாள் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த மாடல் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும்.

    • பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.
    • சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

    வாட்ஸ்அப் செயலியில் ஒரே சமயம் மூன்று குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் உரையாடல், காண்டாக்ட் அல்லது க்ரூப்-இல் ஒற்றை மெசேஜை பின் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது மார்க் ஜூக்கர்பர்க் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்டுள்ள தகவலின் படி பயனர்கள் சாட் ஒன்றில் அதிக குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.

     


    பயனர்கள் டெக்ஸ்ட் (Text), புகைப்படம் (Image) அல்லது கருத்து கணிப்பு (Polls) உள்ளிட்டவைகளை பின் செய்ய முடியும். இப்படி பின் செய்யப்படும் மெசேஜ்கள் 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை சாட்களின் மேல் பேனர் போன்று காட்சியளிக்கும். அதிக குறுந்தகவல்களை பின் செய்யும் போது, சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

    குறுந்தகவல்களை பின் செய்ய, குறிப்பிட்ட மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து "பின்" (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்து எவ்வளவு நேரம் பின் செய்யப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    ஆண்ட்ராய்டில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    ஐபோனில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    வெப் மற்றும் டெஸ்க்டாப்-இல் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ க்ளிக் செய்து மெனு ஆப்ஷனில் பின் மெசேஜ் (Pin Message) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பிறகு பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் சாட் பின் செய்யும் முறை:

    க்ரூப் சாட்களில் மெசேஜ்களை பின் செய்ய க்ரூப் அட்மின்கள் அனுமதிக்க முடியும். மெசேஜ் பின் செய்யப்படுவதை சிஸ்டம் மெசேஜ் க்ரூப் பயனர்களுக்கு தெரிவிக்கும். எனினும், மெசேஜ் பின் செய்யப்பட்ட பிறகு க்ரூப்-இல் சேர்க்கப்படுவோருக்கு இது தெரியாது.

    • சலுகைகளின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.
    • அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரை ஒட்டி சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பழைய சலுகைகள் விலை மாற்றப்பட்டு, அவற்றின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

    ஏர்டெல் ரூ. 49 மற்றும் ரூ. 99 சலுகைகளின் விலை முறையே ரூ. 39 மற்றும் ரூ. 79 என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த இரு சலுகைகளும் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடருக்காக மாற்றப்பட்டு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சலுகைகள் பயனர்களுக்கு தடையற்ற கனெக்டிவிட்டி வழங்கும்.

    ஏர்டெல் ரூ. 39 விலை சலுகையில் 20 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். ஏர்டெல் ரூ. 49 விலை சலுகையில் வின்க் பிரீமியம் சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ. 79 சலுகையில் அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தமாக 40 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    • போக்கோ C51 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • இந்த மாடலில் இரட்டை கேமராக்கள் வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் (மார்ச் 26) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இது தொடர்பான டீசர்களில் புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய போக்கோ C51 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

     


    போக்கோ C61 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசர்களின் படி புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட HD+ டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கிளாஸ் பேக் மற்றும் கேமராவை சுற்றி கோல்டன் ரிங் டிசைன் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. போக்கோ C61 ஸ்மார்ட்போன் ரெட்மி A3 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



    • 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. லாவா O2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே, யுனிசாக் T616 ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை கூடுதலாக விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். அப்டேட் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளது. லாவா O2 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.

    லாவா O2 அம்சங்கள்:

    6.5 இன்ச் 1600x720 HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    யுனிசாக் T616 ஆக்டா கோர் பிராசஸர்

    மாலி G57 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

    4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    லாவா O2 ஸ்மார்ட்போன் இம்பீரியல் கிரீன், மஜெஸ்டிக் பர்பில், ராயல் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 499 ஆகும். எனினும், ரூ. 500 கூப்பன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 7 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். லாவா O2 ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் லாவா ஆன்லைன் ஸ்டோரில் மார்ச் 27-ஆம் தேதி துவங்குகிறது.

    • ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இதுவே முதல் முறை ஆகும்.
    • திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

    நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் இதுவரை நடந்திராத முதல் முறை திட்டத்தை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த திட்டம் தொடர்பான டீசர் வெளியானது. தற்போது இந்த திட்டம் பற்றிய விவரங்களை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    அதன்படி நத்திங் நிறுவனம் "கம்யுனிட்டி எடிஷன் திட்டம்" என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் நத்திங் போன் 2a மாடலில் தாங்கள் விரும்பும் வகையில் டிசைன் செய்யலாம். இந்த திட்டத்தில் நத்திங் கம்யுனிட்டி மற்றும் நத்திங் குழு இணைந்து செயல்படும் என்று நத்திங் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார்.

     


    ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கம்யுனிட்டியை ஈடுபட வைப்பது சந்தையில் இதுவே முதல் முறை ஆகும். முதற்கட்டமாக ஸ்மார்ட்போன், அதன்பிறகு ஒ.எஸ். உள்ளிட்டவைகளை டிசைன் செய்வதிலும் கம்யுனிட்டியை ஈடுபட வைக்க நத்திங் திட்டமிட்டுள்ளது. புதிய கம்யுனிட்டி எடிஷன் திட்டத்தில் பயனர்கள் டிசைன், வால்பேப்பர் மற்றும் பேக்கேஜ் செய்வது தொடர்பான யோசனைகளை நத்திங் நிறுவனத்திடம் தெரிவிக்க முடியும்.

    இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் நத்திங் போன் 2a புதிய வேரியண்ட் தொடர்பான யோசனைகளை நத்திங் கம்யுனிட்டி தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் விசேஷ வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டம் ஆறு மாத காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். இதில் நான்கு நிலைகள் உள்ளன.

    இந்த திட்டத்தில் முதல் நிலை- ஹார்டுவேர் டிசைன் சார்ந்தது ஆகும். பயனர்கள் புதிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் தொடர்பான யோசனைகளை மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்த மே மாத வாக்கில் வால்பேப்பர் டிசைன் பற்றிய யோசனைகளையும், ஜூன் மாதத்திற்குள் பேக்கேஜ் டிசைன் தொடர்பான யோசனைகளையும், விளம்பரம் தொடர்பான யோசனைகளை ஜூலை மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும்.

     

    பயனர்கள் விரும்பும் வகையில், அவர்களது யோசனைகள் தெளிவாக புரியும்படி எந்த வடிவில் வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம் என நத்திங் தெரிவித்துள்ளது. பயனர்கள் சமர்பிக்கும் யோசனைகள் தேர்வாகும் படச்த்தில் அவை கம்யுனிட்டி எடிஷன் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

    யோசனைகளை சமர்பிப்பதற்கான அவகாசம் நிறைவு பெற்றதும், யோசனைகள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும். வாக்கெடுப்பிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சமர்பிக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும், இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக குழு மதிப்பீடு செய்து ஒவ்வொரு நிலையிலும் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவர்.

    நத்திங் கம்யுனிட்டி எடிஷன் திட்டம் ஆறு மாதங்கள் நடைபெறும். இந்த திட்டத்தில் நான்கு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு புதிய சாதனம் உருவாக்கப்பட இருக்கிறது.

    • சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

    ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், மாஸ்டர்கார்டு மற்றும் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கான்டாக்ட்லெஸ் பேமண்ட் சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோர், ஏர்டெல் தேங்ஸ் செயலியில் டிஜிட்டல் முறையில் கணக்கை துவங்க வேண்டும். பிறகு, அதே செயலியில் தங்களது கணக்கை லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதனை செய்துமுடிக்க ஒரு நிமிடமே ஆகும்.

     


    ஸ்மார்ட்வாட்ச் கனெக்ட் ஆனதும், பயனர்கள் டேப் அன்ட் பே (tap and pay) வசதி கொண்ட பாயின்ட் ஆஃப் சேல் (point of sale) மெஷின்களில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ வைத்து பேமண்ட் செய்துவிட முடியும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு ரூ. 1-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை செலுத்த முடியும்.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள என்.எஃப்.சி. (NFC) சிப் மாஸ்டர்கார்டு நெட்வொர்க்-இல் இயங்குகிறது. என்.எஃப்.சி. தொழில்நுட்பம் மூலம் பயனர்கள் கான்டாக்ட்லெஸ் பேமண்ட்களை ரிடெயில் ஸ்டோர், பி.ஒ.எஸ். (POS) டெர்மினல் மற்றும் இதர பேமண்ட் முறைகளில் மிக எளிதாக பணம் செலுத்த முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.85 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், 130 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, ஸ்டிரெஸ் மானிட்டர் அம்சம், SpO2 மானிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கிரே, புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    ×