என் மலர்
தமிழ்நாடு
நாளை பந்தல் கால் நடும் விழா- நில உரிமையாளர்களுக்கு புஸ்சி ஆனந்த் அழைப்பு
- கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டுக்கான ஆயத்த பணியை தொடங்க உள்ளனர்.
- 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை மாநாட்டில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விக்கிரவாண்டி:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இம்மாநாடு நடைபெற விதிக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை மாநாட்டில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறி காவல்துறை அனுமதி அளித்தது.
இதையடுத்து மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டுக்கான ஆயத்த பணியை தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் கட்சியின் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று இரவு மாநாட்டிற்கு இடம் வழங்கிய நில உரிமையாளர்கள் 25 பேரை நேரில் சந்தித்து பூமி பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதில் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, மாவட்ட தலைவர் குஷி மோகன், துணைத்தலைவர் வடிவேல், வக்கீல் அரவிந்த், இளைஞரணி தலைவர் மோகன், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.