search icon
என் மலர்tooltip icon

    OTT

    • மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் பேட்டரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். படத்தில் தனது நடிப்பு ஆற்றல் மூலம் அசத்தியுள்ளார் குறிப்பாக காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தன் நினைவுகளை மறக்கும் ஒரு பெண் அவளுக்கும் காணாமல் போன பெண்களுக்கு உள்ள தொடர்பை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது.

    ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்நடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன்.
    • ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

    மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

    ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியானது.
    • சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'.

    என்னதான் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனாலும்,, அதை ஓடிடி-யில் பார்க்க என ஒரு தனி கூட்டமே உள்ளது. திரையரங்கில் வெற்றி திரைப்படமாக அமையாத பல திரைப்படங்கள் ஓடிடி வெளியீட்டின் பிறகு மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

    இப்போ அடிக்கிற மழையில் வீட்டில் அனைவரும் அமர்ந்து பிடித்த உணவை சாப்பிட்டு இந்த வார ஓடிடியில் என்ன படம் பாக்கலாம்-ன்னு பார்ப்போம்

    'ராக்கெட் டிரைவர்'

    ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கியுள்ளார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை சுனைனா, ஜெகன் நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 25-ந் தேதி வெளியானது.

    'அந்தகன்'

    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக பிரசாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது

    'தீபாவளி போனஸ்'

    நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஜெயபால் இயக்கத்தில் வெளியான படம் 'தீபாவளி போனஸ்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்துள்ளார். ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பன்னீர்செல்வம், வெங்கட்ராமன் பாலாஜி, மாலிக் ரபிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி ஆஹா தமிழ் மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.

    'லக்கி பாஸ்கர்'

    வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியாகி உள்ளது.இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படம் சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவாகி உள்ளது. இப்படம் 28-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'கா'

    சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் 'கா'. இவர்கள் இயக்கிய முதல் படம் இதுவாகும். இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகளும் நடித்தனர். ஸ்ரீசக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று இடிவி வின் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'பிளடி பெக்கர்'

    நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'. இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் கவின் 'பிச்சைக்காரன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று அமேசான் பிரைம், டென்டுகொட்டா, சன் நெக்ஸ்ட் போன்ற ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.

    'பிரதர்'

    ஜெயம் ரவி நடிப்பில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள படம் 'பிரதர்'. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரில் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'விகடகவி'

    பிரதீப் மடலி இயக்கத்தில் நரேஷ் அகஸ்தியா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தொடர் 'விகடகவி'. இந்த தொடர் பீரியட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராம் தல்லூரி இந்த தொடரை தயாரித்துள்ளார். நரேஷ் அகஸ்தியா விக்டகவியாக நடித்துள்ளார், அவர் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு துப்பறியும் நபராக நடித்துள்ளார். இந்த தொடர் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'பாராசூட்'

    இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் 'பாராசூட்'. இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக் வித் கோமாளி' கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
    • இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இருப்பவர் சார்லி. இதுவரை 800 மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சார்லி, ஜெகன் பாலாஜி, அதிதி பாலன், சரண்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லைன்மேன். இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    லைன்மேன் சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி, சூரிய ஒளி மறைந்தது தானாக தெரு விளக்கு எரிவது போலவும் ஒளி வந்ததும் தானாக அணைவது போலவும் ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கிறார். அதற்கு அரசு அங்கீகாரம் பெற எடுக்கப்படும் முயற்சி, அதனால் ஏர்படும் சிக்கல்களை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இது அமைந்துள்ளது.

    படத்தை பார்த்த பலர் இணையத்தில் பாராட்டி பதிவு செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது.
    • தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை ஜெயபால்.ஜே இயக்கியுள்ளார். படத்தின் இசையை மரியா ஜெரால்ட் மேற்கொண்டுள்ளார். தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படம் லோவர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் நிதர்சத்தையும், எதார்த்தத்தியும் பதிவு செய்துள்ள திரைப்படமாகும். மதுரை மாநகராட்சியில் உள்ள ஒரு குடும்பம் தீபாவளி போனஸை மையமாக வைத்து எடுத்துள்ள திரைப்படமாகும். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    திரைப்படத்தின் விமர்சனத்தை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    லக்கி பாஸ்கர் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், இப்படம் வரும் 28 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.இத்திரைப்படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல சர்ச்சைகளை கடந்து நயன்தாராவின் ஆவண திரைப்படம் வெளியானது
    • காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    திரையரங்கிள் சில படங்கள் வெற்றிப் பெற்றாலும், பல படங்கள் ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு தான் மக்களிடம் சென்றடைகிறது. ஓடிடி யில் திரைப்படம் வெளியானபின் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் உற்சாகமாக விமர்சனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இந்த வார ஓடிடி-யில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களைப் பற்றி பார்ப்போம்

    'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்'

    பல சர்ச்சைகளை கடந்து நயன் தாராவின் ஆவண திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் கடந்த 18 ஆம் தேதி வெளியானது. இதில் நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் அவரது முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வந்த பாதையை அதில் காட்சி படுட்தியுள்ளனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இருவருக்கும் நடந்த திருமண விழாவையும் பதிவு செய்துள்ளனர்.

    ராக்கெட் டிரைவர்

    ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கியுள்ளார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை சுனைனா, ஜெகன் நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் இக்கால சூழலில் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என கற்பனை கலந்த கதையாக அமைந்துள்ளது. இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் நேற்று வெளியாகி உள்ளது.

    கிஸ்கிந்தா காண்டம்

    திஞ்சித் அய்யாதன் இயக்கத்தில் மர்மமான திரில்லர் கதை களத்தில் உருவான மலையாள படம் 'கிஷ்கிந்தா காண்டம்'. இப்படத்தில் ஆசிப் அலி , விஜயராகவன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. நடிகர் ஆசிப் அலி முன்னணி கதாபாத்திரத்தில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகம். இப்படம் 2024 -ம் ஆண்டு அதிக வசூல் செய்த 9-வது மலையாளப் படமாகும். இப்படம் 19.11.2024 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    விவேசினி

    பவன் ராஜகோபாலன் இயக்கியுள்ள படம் 'விவேசினி'. இந்தப் படத்தில் நாசர், காவ்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிரெக்கிங் சென்றவர்களுக்குள் ஏற்படும் உணர்ச்சிகரமான மோதல்களையும், ஊர் திரும்பிய பிறகு அப்பாவுக்கும் மகளுக்கும் ஏற்படும் உணர்வு மோதல்களையும் அழகாக எடுத்துக்காட்டும் படமாக உருவாகி உள்ளது. திரில்லர் கதைக்களத்தில் இருக்கும் இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    ஏலியன் ரோமுலஸ்

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் 'ஏலியன்: ரோமுலஸ்'. இந்த படத்தினை 'ஈவில் டெட் மற்றும் டோண்ட் ப்ரீத்' படங்களை பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏலியன் சம்பந்தமாக உருவாகி அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் 21-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    மார்டின்

    கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் மார்டின் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கான திரைக்கதையை அர்ஜூன் எழுதியுள்ளார்.மேலும் கதாநாயகியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் நாளை { 22-ந் தேதி}வெளியாக உள்ளது.

    ஸ்பெல்பவுண்ட்

    அமெரிக்க அனிமேஷன் இசை சாகச கற்பனை நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த படத்தை விக்கி ஜென்சன் இயக்கியுள்ளார். லும்ப்ரியா எனப்படும் மாயாஜால உலகில் அமைக்கப்பட்ட கதை, இளவரசி எலியன் (ஜெக்லர்) தனது பெற்றோரை அரக்கர்களாக மாற்றிய மந்திரத்தை உடைத்து தனது ராஜ்யத்தை காப்பாற்றும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    ×