search icon
என் மலர்tooltip icon

  சினிமா செய்திகள்

  • புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
  • வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

  நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

  வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.

  இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
  • குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அவரது இல்லத்தில் ஏற்பாடு.

  தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அமலாபால். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

  கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

  கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெற்றது.

  தொடர்ந்து, தனது 9வது மாதத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

  இந்நிலையில், அமலாபால் கடந்த 11ம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

  தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அமலா பால் மற்றும் குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  இதுதொடர்பான வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தான், ""It's a boy" !! Meet our little miracle, "ILAI" ?? born on 11.06.2024" என பதிவிட்டுள்ளார்.

  இந்த நற்செய்தியை அறிந்த ரசிகர்கள் அமலா பால் தம்பதிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

  • வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி உத்தரவு.

  நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது.

  இந்நிலையில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதரிாக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  சம்பள பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தயாரிப்பாளர் வழங்கவில்லை என அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார்.

  சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  • விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
  • குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

  நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

  விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனியும் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகின்றனர்.

  பிசியாக படங்களில் நடித்து வரும் அஜித் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

  இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • டாடா, அருவி உள்ளிட்ட படங்களில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்
  • தனது நீண்ட நாள் காதலியை அவர் விரைவில் கரம்பிடிக்க போகிறார்.

  பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார். சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

  இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் அப்போது ட்ரெண்டானது. அந்த சமயத்தில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் பிரதீப்புக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

  இந்நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது நீண்ட நாள் காதலியை அவர் விரைவில் கரம்பிடிக்க போகிறார்.

  டாடா, அருவி உள்ளிட்ட படங்களில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.
  • இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார்.

  ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக "ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

  அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

  இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர். 

  தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். ஒலி கலைவையை அரவிந்த் மேனனும், விளம்பர வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ ஹரி சரண் மேற்கொள்கிறார்கள்.

  அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

  • விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
  • இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

  அனிருத் இசையமைக்கும் இந்த படம் தொடர்பாக டைட்டில் லுக் தவிர வேறு எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.

  இந்த நிலையில், விடாமுயற்சி படம் தொடர்பான புது அப்டேட்-ஐ நடிகர் அர்ஜூன் கொடுத்துள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இன்னும் 20-இல் இருந்து 30 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் இம்மாதம் துவங்க இருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு பணிகள் முழுமை பெற்றுவிடும் என்று தெரிவித்தார். விரைவில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

  • எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது.
  • வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன்.

  தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

  இந்த நிலையில் தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், ''எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது. இந்த வாழ்க்கையை அனுபவிக்கிறேன். குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க ஒவ்வொரு நாளையும் ஜாக்கிரதையாக கழிக்கிறேன்.

  முன்பு எடை கூடாமல் இருக்க விரும்பிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தேன். ஆனால் இப்போது விரும்பிய எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறேன். நான் அதிகம் சாப்பிட்டால் என் குழந்தைக்கு நல்லது என்று டாக்டர் தெரிவித்தார்.

  ஆனாலும் வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன். என் பெற்றோர் அடிக்கடி வந்து பார்த்து செல்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை கழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

  பிரசவம் செப்டம்பரில் இருக்கும் என்று டாக்டர் தெரிவித்து இருக்கிறார். பிரசவத்தை நினைத்து கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது'' என்றார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.
  • அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால் தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும்.

  நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

  68-வது படமான 'கோட்' படத்துக்கு பிறகு இன்னொரு படத்தில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்குவேன் என்றும் தெரிவித்தார்.

  எனவே விஜய்யின் கடைசி படமான 69-வது படத்தை இயக்குவது யார் அதில் யாரெல்லாம் நடிப்பார்கள். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

  69-வது படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 69-வது படத்தை கைவிட விஜய் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. விஜய் 69-வது படத்தில் நடிக்க தொடங்கினால் அது முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதனால் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படும்.

  இப்போதே சுற்றுப்பயணம், மாநாடு, மாவட்டம் தோறும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும் என்று நெருக்கமானவர்கள் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

  இதனாலேயே 69-வது படத்தில் விஜய் நடிக்க மாட்டார் என்று பேசப்படுகிறது. ஆனாலும் விஜய் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
  • அப்பா விஜய் சேதுபதிக்கு மகன் சூர்யா பொன்னாடை போர்த்தி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்தார்.

  விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

  விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

  விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

  இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

  பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், அப்பா விஜய் சேதுபதிக்கு மகன் சூர்யா பொன்னாடை போர்த்தி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்தார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.