search icon
என் மலர்tooltip icon

    பைக்

    • ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது.
    • புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை எக்ஸ் ஷோரூமில் ரூ.2.39 லட்சத்தில் தொடங்குகிறது.

    தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 இன் வடிவமைப்பு அதிநவீன ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட டியர்டிராப் வடிவ பெட்ரோல் டேங்க் உள்ளது. இத்துடன் மெலிதான டெயில் பகுதி பெற்றுள்ளது.

    சிங்கிள் பீஸ் இருக்கை மற்றும் பில்லியனுக்கு ட்யூபுலர் கிராப் ஹேண்டில் உள்ளது. மொத்தத்தில் கெரில்லா 450 அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த பைக்: ஃப்ளாஷ், டாஷ் மற்றும் அனலாக் ஆகிய மூன்றுவகை வண்ணங்களாக பிரிக்கப்படுகின்றன.

    ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது. டாஷ் வேரியண்ட் கோல்ட் டிப் மற்றும் பிளேயா பிளாக் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதே நேரத்தில் அனலாக் கீழ் ஸ்மோக் மற்றும் பிளேயா பிளாக் கொண்டுள்ளது.


    இந்த பைக்கில் 452சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 8,000ஆர்பிஎம்மில் 39.50 ஹெச்பியையும், 5,500ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    பிரேக்கிங் வேலைகளை இரட்டை பிஸ்டன் காலிபருடன் முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் கவனித்துக்கொள்கிறது. பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் 270 மிமீ டிஸ்க் உள்ளது. இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கெரில்லா 450 ஆனது 1440 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது, அதே சமயம் கிரவுண்ட் கிளியரன்ஸ் 169 மிமீ ஆகும். இதன் எடை 185 கிலோ ஆகும்.

    அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் எல்இடி விளக்குகள் உள்ளன. புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்த பைக்கின் அனலாக் வேரியண்ட் விலை ரூ.2.39 லட்சம், மிட்-ஸ்பெக், டாஷ் வேரியன்டின் விலை ரூ.2.49 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் கிடைக்கிறது. ஃப்ளாஷ் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூமில் ரூ.2.54 லட்சத்தில் கிடைக்கும்.

    இந்திய சந்தையில் இந்த பைக் டிரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ரூ. 5 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
    • இந்த மாடல் அதிகபட்சம் 150 கி.மீ. ரேஞ்ச் வழங்குகிறது.

    எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரான்ட், ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு புதிய நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி பயனர்கள் எவ்வித முன்பணமும் செலுத்தாமல் தனது RV400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வாங்க முடியும். இதற்கான மாத தவணை ரூ. 4 ஆயிரத்து 444 ஆகும்.

    வாடிக்கையாளர்கள் தங்களது வருமான சான்று, ஸ்டாம்ப் டியூட்டி அல்லது பிராசஸிங் கட்டணம் என எதுவும் செலுத்தாமல், டிஜிட்டல் முறையில் இந்த சலுகையை பெற முடியும். இதுபற்றிய முழு விவரங்கள் அந்நிறுவன விற்பனை மையங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று ரெவோல்ட் தெரிவித்துள்ளது.

    இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதன் மூலம் ரெவோல்ட் நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கிறது. முன்னதாக இதேபோன்ற அறிவிப்பில் அந்நிறுவனம் தனது RV400 ஸ்டான்டர்டு மற்றும் BRZ மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ரெவோல்ட் RV400 ஸ்டான்டர்டு மற்றும் BRZ மால்களில் 3 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் அதிகபட்சம் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த பைக்கில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, மூன்று ரைட் மோட்கள், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளன.

    • 160 சிசி-யில் கிடைக்கும் மாடலில் மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன.
    • TVS Apache RTR 160 ரேசிங் பதிப்பு அதன் பிரிவில் புதிய தரநிலைகளை அமைக்க தயாராக உள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் TVS Apache RTR 160 Racing Edition-ஐ அறிமுகம் செய்தது.

    புதிய RTR 160 ரேசிங் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பல அம்சங்களைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் பிரத்யேக மேட் பிளாக் கலர், சிவப்பு அலாய் வீல்கள், விளையாட்டு, நகர்ப்புற மற்றும் மழை, டிஜிட்டல் லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே (எல்சிடி) கிளஸ்டர் மற்றும் எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள் போன்ற 3 ரைடிங் முறைகளுடன் வருகிறது.

    இதுதொடர்பாக, டிவிஎஸ் நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் விமல் சும்ப்லி கூறுகையில், TVS Apache தொடர் புதுமைகளில் தொடர்ந்து வழிவகுத்தது. அதிநவீன தொழில்நுட்பத்தை ஆர்வலர்களுக்குக் கொண்டு வருகிறது.

    உலகளவில் 5.5 மில்லியன் TVS Apache ரைடர்களைக் கொண்ட வலுவான சமூகத்துடன் டிவிஎஸ் மோட்டாரின் பந்தய பாரம்பரியம் மற்றும் பொறியியல் சிறப்பைப் பிரதிபலிக்கும் ஆர்வமுள்ள தயாரிப்புகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த அறிமுகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    அனைத்து புதிய 2024 TVS Apache RTR 160 ரேசிங் பதிப்பு, அதன் பிரிவில் புதிய தரநிலைகளை அமைக்க தயாராக உள்ளது.

    ஒப்பிடமுடியாத செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தனித்துவமான ரேஸ் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பை வழங்குகிறது என தெரிவித்தார்.

    • இந்த பைக் ரூ.16.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
    • இந்த பைக் தொடக்கத்தில் கிளாசிக் சிவப்பு நிறத்தில் கிடைக்கும்.

    உலகின் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிலான டுகாட்டி 698 மோனோ பைக்கை டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த பைக் ரூ.16.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்கனவே தெடங்கிய நிலையில், இம்மாத இறுதியில் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் தொடக்கத்தில் கிளாசிக் சிவப்பு நிறத்தில் கிடைக்கும். டுகாட்டி 698 மோனோ பைக் மாடலில் 659சிசி, லிக்யூட் கூல்ட் சூப்பர் குவாட்ரோ மோனோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 77.5 ஹெச்பி பவர், 63 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    தேவைப்பட்டால் இந்த என்ஜினை 84.5 ஹெச்பி பவர், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வரை அதிகரித்து கொள்ளலாம்.

    இந்த பைக் தான் உலகின் சக்திவாய்ந்த ஒற்றை சிலிண்டர் என்ஜின் ஆகும். இந்த பைக்கின் முன்பக்கத்தில் 330 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. 

    • எலெக்ட்ரிக் பைக்கின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
    • இது ரியர் வீல் பெல்ட் மூலம் இயக்கப்படும் என தகவல்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த பைக் பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகாமல் இருந்தது. தற்போது உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயாரான நிலையில் காட்சியளிக்கும் ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக்கின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

    புகைப்படத்தின் படி புதிய எலெக்ட்ரிக் பைக் ரெட்ரோ லுக்கில் காட்சியளிக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் கிளாசிக் சீரிஸ் மாடலை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சேசிஸ்-இல் மிகப்பெரி பேட்டரி பேக் பொருத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த பைக் நீண்ட தூரம் பயணிக்கும் அளவிலான ரேஞ்ச் வழங்கும் என்று தெரிகிறது.

     


    இதில் வழங்கப்பட இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், இது ரியர் வீல் பெல்ட் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பைக் எந்த பெயரில் அழைக்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ராயல் என்பீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த எலெக்ட்ரிக் பைக் 2026 வாக்கில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வரும் நவம்பர் மாதம் இத்தாலி நாட்டில் மிலனில் நடைபெறும் EICMA 2024 கண்காட்சியில் புதிய மோட்டார்சைக்கிளை கேடிஎம் அறிமுகப்படுத்தக்கூடும்.
    • வரவிருக்கும் மாடல் தோற்றம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டிலும் விரிவான மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய 390 அட்வென்சர் மாடலை ஒன்றை உருவாக்கி வருகிறது கேடிஎம். தற்போது விற்பனையில் இருக்கும் 390 அட்வென்சர் மாடலானது 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தற்போது அப்டேட் செய்கிறது கேடிஎம். வரவிருக்கும் 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் அதன் உற்பத்திக்கு தயாரான நிலையில் பலமுறை சோதனை செய்யப்பட்டது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச சந்தையில் கேடிஎம் 390 அட்வென்சரை அறிமுகம் செய்வதற்காக இந்த மாடலின் இறுதிக் கட்ட சோதனையை கேடிஎம் தீவிரப்படுத்தி உள்ளது.

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பைக் விற்பனையில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, கேடிஎம் இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் புதிய 390 அட்வென்சரை உலகளவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர், வரும் நவம்பர் மாதம் இத்தாலி நாட்டில் மிலனில் நடைபெறும் EICMA 2024 கண்காட்சியில் புதிய மோட்டார்சைக்கிளை கேடிஎம் அறிமுகப்படுத்தக்கூடும். வரவிருக்கும் மாடல் தோற்றம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டிலும் விரிவான மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    புது பைக்கின் முன்புறம் டூயல் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் கூடிய செங்குத்தான ஹெட்லேம்ப் கிளஸ்டர் மற்றும் ஒரு உயரமான விண்ட்ஸ்கிரீன், கேடிஎம்-இன் ராலி மாடல்களை நினைவூட்டுகிறது. கூடுதலாக, புதிய பாடி பேனல்கள் ஒரு நேர்த்தியான மற்றும் அதிக ஆற்றல்மிக்க நிலைப்பாட்டிற்கு பங்களிக்கின்றன.

    2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் சமீபத்திய 390 டியூக்கைப் போலவே வண்ண TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுடன் வரும். இது மாறுபாட்டைப் பொறுத்து 21- அல்லது 19-இன்ச் முன் மற்றும் 17-இன்ச் பின் வயர்-ஸ்போக் சக்கரங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். சஸ்பென்ஷன் அமைப்பானது நீண்டதூர பயணத்திற்கு ஏற்ப அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகளைக் கொண்டிருக்கும், அவை முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஃப்செட் மோனோஷாக் ரியர் யூனிட் வழங்கப்படுகிறது.

    வரவிருக்கும் மோட்டார்சைக்கிளில் 390 டியூக்கிலிருந்து பெறப்பட்ட 399 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு ஃப்யூவல்-இன்ஜெக்ட் செய்யப்பட்ட DOHC எஞ்சின் வழங்கப்படும். இது 45.3 பிஎச்பி பவர் மற்றும் 39 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும், இத்துடன் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.

    புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர், டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் முன் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக்குகள், தடையற்ற கியர் மாற்றங்களுக்கான இருதரப்பு குயிக் ஷிஃப்டர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • பஜாஜ் CNG பைக் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக்கின் விலை ரூ. 95000 முதல் துவங்குகிறது.

    பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CNG பைக்- பஜாஜ் பிரீடம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் துவக்க விலை ரூ. 95 ஆயிரம் ஆகும். இந்த பைக்- பிரீடம் 125 டிஸ்க் எல்இடி, பிரீடம் 125 டிரம் எல்இடி மற்றும் பிரீடம் 125 டிரம் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இதில் முதல் இரு வேரிண்ட்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    பஜாஜ் பிரீடம் பைக்கில் 2 கிலோ CNG டேன்க் உள்ளது. இது பைக்கின் மத்தியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கின் எடையை சமமாக வைத்துக் கொள்கிறது. இதன் மேல் 2 லிட்டர் பெட்ரோல் டேன்க் உள்ளது.

    அந்த வகையில், இந்த பைக்கின் CNG மற்றும் பெட்ரோல் டேன்க்-ஐ நிரப்பினால் 330 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த பைக்கை ஓட்டுபவர் ஸ்விட்ச் மூலம் பெட்ரோல் மற்றும் CNG என எரிபொருள் தேர்வை மேற்கொள்ளலாம்.

    இந்த பைக்கில் 125சிசி, ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9.5 ஹெச்.பி. பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • சிவப்பு, நீலம் உள்ளிட்ட 4 வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
    • இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் முதல் சி.என்.ஜி. பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை-05) அறிமுகம் செய்கிறது

    பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. ஆட்டோக்கள் அமோகமாக விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த பைக்கை சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம். சிவப்பு, நீலம் உள்ளிட்ட 4 வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

    இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கியர்களை கொண்ட இந்த பைக், சந்தையில் விற்பனையாகும் இதே போன்ற பெட்ரோல் பைக்குகளை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஷோ ரூம் விலையாக இந்த பைக் 90,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த பைக்கின் விலை 9 லட்சத்தில் இருந்து 10 லட்சத்திற்குள் இருக்கும்.
    • டேடோனா 660 பைக் 660cc மூன்று சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டேடோனா 660 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 25000 பணம் செலுத்தி இந்த பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த பைக்கின் விலை 9 லட்சத்தில் இருந்து 10 லட்சத்திற்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    டேடோனா 660 பைக் 660cc மூன்று சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது.

    இந்த பைக்கின் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன.

    • இந்த பைக் சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் என அழைக்கப்படுகிறது.
    • ஏலம் விடுவதன் வாயிலாக இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் பிரபல பைக் மாடலான கரிஷ்மா (Karizma XMR) மோட்டார்சைக்கிளின் புதிய எடிசனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்நிறுவனத்தை உருவாக்கிய பிரிஜ்மோகன் லால் முஞ்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் 101 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் (Centennial Collector's Edition Motorcycle) என குறிப்பிட்டு இருக்கின்றது. சுருக்கமாக மோட்டார்சைக்கிள் 'சிஇ001' (CE001) எனும் பெயரில் இது அழைக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு பதிப்பை அது வெறும் 100 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்கு தயார் செய்திருக்கின்றது.

    ஏலம் விடுவதன் வாயிலாக இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஏல பணிகளே தற்போது தொடங்கி இருப்பதாகவும் இந்த பைக்கை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக ஏலம் விடப்படும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் (Karizma XMR) உடன் ஒப்பிடுகையில், சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் 5 கிலோ எடை குறைவாக 158 கிலோவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.
    • பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது.

    இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் 17-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இந்த கொரில்லா மாடல் முதற்கட்டமாக ஸ்பெயினில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் லால் மற்றும் சிஇஓ கோவிந்தராஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    பல பாகங்கள் ஹிமாலயனுடன் பகிரப்பட்டாலும், ராயல் என்ஃபீல்டு முதன்மையாக கெரில்லா 450 மாடலை ஆன்-ரோடு பயன்பாட்டிற்காக மாற்றியமைத்ததாகத் தெரிகிறது.

    மேலும் இது ADV வெர்ஷனில் இருப்பதை போன்றில்லாமல் என்டரி லெவல் ஹார்ட்வேர் பெற வாய்ப்புள்ளது. புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.

    புதிய பைக்கில் சிங்கிள்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வட்ட வடிவத்தில் எல்இடி ஹெட்லைட், கணிசமான எரிபொருள் டேங்க் மற்றும் ஒற்றை இருக்கை போன்ற அம்சங்களை கொரில்லா கொண்டுள்ளது.

    சிங்கிள்-பாட் கன்சோல், ஹிமாலயனில் கிடைக்கும் TFT டிஸ்ப்ளே போன்றே இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது. ஹிமாலயன் மாடலில் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் டயர்கள் உள்ளது. ஆனால் புதிய பைக்கில் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும், இதில் USD ஃபோர்க்கிற்குப் பதிலாக டெலஸ்கோபிக் ஃபோர்க்கைக் கொண்டுள்ளது. கெரில்லா 450 இன் எஞ்சின் டியூனிங் உறுதி செய்யப்பட உள்ளது. ஹிமாலயன் மாடலில் உள்ள 452சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 40எச்பி மற்றும் 40என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

    • இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,19,555 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • குருகிராம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனம் இதுவாகும்.

    ஜிடி டெக்ஸா (GT Texa) என்கிற பெயரில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,19,555 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குருகிராம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனம் இதுவாகும்.

    இந்த எலெக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

    இந்த பைக்கின் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்கும் 3.5kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 120 - 130 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் எனவும் ஜிடி ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை வெறும் 4- 5 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்து விடலாம்.

    இந்த எலெக்ட்ரிக் பைக்கின் எடை வெறும் 120 கிலோ மட்டுமே ஆகும். ஆனால் இந்த பைக்கினால் 180 கிலோ எடை வரை சுமக்க முடியும்.

    ×