search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • இதன் விலை ரூ. 17 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
    • தற்போது இந்த பைக்கின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளாக்ஷிப் ஸ்போர்ட் பைக் மாடலான நின்ஜா ZX-10R விலையை கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி இந்த பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் குறைந்துள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து நின்ஜா ZX-10R விலை தற்போது ரூ. 17 லட்சத்து 34 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    2025 நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 17 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பிறகு இந்த பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டு ரூ. 18 லட்சத்து 50 ஆயிரம் என மாறியது. இந்த நிலையில் தான் தற்போது நின்ஜா ZX-10R விலை குறைக்கப்பட்டுள்ளது.

     


    கவாசகி நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிளில் 998சிசி, இன்-லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 200 ஹெச்பி பவர், 114.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பை-டைரக்ஷனல் குயிக்-ஷிப்டர் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த பைக்கில் டிஎப்டி கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பல்வேறு ரைடிங் மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • வீடியோ WOKE கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் மஸ்க் கொதிப்படைந்துள்ளார்.
    • உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஏகபோக ஆதரவை பெற்ற டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்தே எலான் மஸ்க் பயங்கர குஷியில் உள்ளார். அவருக்கு டிரம்ப் அமைச்சரவையில் Department of Government Efficiency or DOGE துறை பொறுப்பு விவேக் ராமசாமியுடன் பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

    தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் படு ஆக்டிவாக போஸ்டர்களை போட்டு வரும் எலான் மஸ்க் தற்போது ஜாகுவார் கார் நிறுவனத்தை வம்புக்கு இழுத்துள்ளார். சுமார் 101 ஆண்டுகளாக கார் தயாரிப்பு தொழிலில் இருக்கும் ஜாகுவார் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது நிறுவன லோகவை புதுப்பிக்க ஜாகுவார் முடிவெடுத்துள்ளது.

    ஜாகுவார் பாய்வது போன்ற வடிவமைப்பை கொண்ட அந்நிறுவனத்தின் லோகோ பிரசித்தமாக இருந்துவரும் நிலையில் அதை புதுப்பிதுள்ளதாக வீடியோ வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வீடியோ பன்மைத்துவம் மற்றும் பாலின சமத்துவம், சமூக முன்முடிவுகளை உடைக்கும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை அடியொற்றி அமெரிக்காவில் உருவான WOKE culture கலாச்சார தோரணையில் உள்ளது பழமைவாதியான எலான் மஸ்க்கை கொதிப்படைய செய்து இது குறித்து பேச வைத்திருக்கிறது.

    ஜாகுவாரின் முடிவு குறித்து பேசியுள்ள அவர், நீங்கள் கார்களை தான் தயாரிக்கிறீர்களா, நீங்கள் உண்மையில் விற்பது கார்களை தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் கார்களை தயாரிக்க வில்லை, தவறுகளை தயாரிக்கிறார்கள் என்றும், உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    பழமைவாதியான எலான் மஸ்க் தன்னை ஒத்த பழமைவாத சிந்தனை உடையதாலேயே டிரம்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறார் என்பது ஜனநாயகவாதிகளின் வாதம். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் மக்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதே லிபரல்களின் அச்சமாக உள்ளது.

    முன்னதாக எலான் மஸ்க்கின் மகள் விவியன் வில்சன் மூன்றாம் பாலினத்தைச் சேர்த்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் உயிரோடிருக்கும் தனது மகன் சேவியர் இறந்துவிட்டாள் என்று மஸ்க் போட்டுவெளியில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • ரூ. 5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • புதிய தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம்.

    ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடல் கோடியக் வாங்குவோருக்கு குறுகிய கால சிறப்பு சலுகை அறிவித்து இறுக்கிறது. அதன்படி இன்று (நவம்பர் 19) நள்ளிரவுக்குள் புதிய ஸ்கோடா கார் வாங்குவோருக்கு ரூ. 5 லட்சம் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஸ்கோடா கோடியக் மாடல் ஒற்றை டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவை 2023 மாடலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தவிர கோடியக் எஸ்யுவி மாடலின் புதிய தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய தலைமுறை கோடியக் மாடல் தற்போதுள்ள மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பவர்டிரெயின் ஆப்ஷன்களிலேயே கிடைக்கும் என்று தெரிகிறது. எனினும், வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்படலாம்.

    • அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
    • இந்த காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர், டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது M340i செடான் மாடலை அப்டேட் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ காரின் விலை ரூ. 74.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மேம்பட்ட இன்டீரியர் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    அதன்படி புதிய பிஎம்டபிள்யூ கார்- ஆர்க்டிக் ரேஸ் புளூ, ஃபயர் ரெட், பிளாக் சஃபையர், டான்சனைட் புளூ மற்றும் டேவிட் கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. உள்புறத்தில் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏசி வென்ட்கள் ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது.

    இந்த காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர், டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 369 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். 

    • 2025 கவாசகி நின்ஜா ZX 4RR 3 நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக்கில் 399 சிசி, லிக்விட் கூல்டு, இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

    கவாசகி நிறுவனத்தின் 2025 நின்ஜா ZX 4RR மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நின்ஜா ZX 4RR மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 42 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. சமீபத்தில் இந்த பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் வெளியிடப்பட்டது.

    2025 நின்ஜா ZX 4RR மாடல்- கிரீன் / எபோனி / பிலிசர்டு வைட் என புதிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக்கின் விலை 2024 வெர்ஷனை விட ரூ. 32 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

     


    கவாசகி நின்ஜா ZX 4RR மாடலில் 399 சிசி, லிக்விட் கூல்டு, இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 77 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை கூர்மையான ஃபேரிங், டுவின் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படுகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை இந்த பைக்- ஸ்போர்ட், ரோட், ரெயின் மற்றும் கஸ்டம் என மொத்தம் நான்கு ரைட் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 2025 கவாசகி நின்ஜா ZX 4RR மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.

    • கியா நிறுவனத்தின் முதல் புதிய தலைமுறை எஸ்யுவி மாடல் ஆகும்.
    • வரும் மாதங்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும்.

    கியா இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் எஸ்யுவி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய கியா எஸ்யுவி மாடல் சைரோஸ் என அழைக்கப்படுகிறது. கியா கார்னிவல் மற்றும் கியா EV9 மாடல்களை தொடர்ந்து அசத்தலான டிசைன், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த எஸ்யுவி மாடல் கியா நிறுவனத்தின் முதல் புதிய தலைமுறை எஸ்யுவி ஆகும்.

    சைரோஸ் மாடல் கியா நிறுவனத்தின் புதுவரவு மாடலாக அமைகிறது. புதிய சைரோஸ் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கம்பீர தோற்றம், அதிநவீன அம்சங்கள் கொண்ட எஸ்யுவி மாடலாக சைரோஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இது தலைசிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று தெரிகிறது.

    அதிக இடவசதி கொண்ட இன்டீரியர், ஏராளமான கனெக்டெட் அம்சங்கள் மற்றும் அசத்தலான டிரைவிங் அனுபவத்தை சைரோஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய சைரோஸ் மாடலில் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் எஞ்சின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



    • புதிய டிசையர் மாடல் அதிக புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தது.
    • புதிய டிசையர் மாடலில் 1.2 லிட்டர் Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய டிசையர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாருதி டிசையர் விலை ரூ. 6 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் வெளியான குளோபல் என்கேப் பரிசோதனை முடிவுகளின் படி புதிய டிசையர் மாடல் அதிக புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தது.

    தோற்றத்தை பொருத்தவரை புதிய டிசையர் மாடலில் புதிய கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்புறம்-பின்புறம் புதிய பம்ப்பர்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவு வாகனங்களில் முதல்முறை எலெக்ட்ரிக் சன்ரூஃப் கொண்ட கார் என்ற பெருமையை புதிய டிசையர் மாடல் பெற்றுள்ளது.

     


    இத்துடன் டூயல் டோன் இன்டீரியர், 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டிசையர் மாடலில் 1.2 லிட்டர் Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 80 ஹெச்பி பவர், 112 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் CNG வெர்ஷன் 68 ஹெச்பி பவர், 102 நியூட்டன் மீட்டர் வெளிப்படுத்துகிறது. 

    • அதிநவீன தோற்றம் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது.
    • இந்த காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய அமேஸ் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி புதிய தலைமுறை அமேஸ் மாடல் டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது.

    வெளியீட்டுக்கு முன்னதாக புதிய தலைமுறை அமேஸ் மாடலின் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி புதிய அமேஸ் மாடல் முழுமையாக மாற்றப்பட்ட கேபின், அதிநவீன தோற்றம் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது.

     


    இதில் டூயல் டோன் டேஷ்போர்டு, ஃபிரீ-ஸ்டான்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டச் கேபாசிடிவ் பட்டன்கள், செவ்வக வடிவம் கொண்ட ஏசி வென்ட்கள், டேஷ்போர்டில் மெஷ் பேட்டன், HVAC பேனல் மற்றும் சிறிய ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கிறது. கூடவே 3-ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல் மற்றும் கண்ட்ரோல்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், பெய்க் சீட் கவர்கள் வழங்கப்படுகின்றன.

    மற்ற வசதிகளை பொருத்தவரை புதிய ஹோண்டா அமேஸ் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், டைப் சி சார்ஜிங் போர்ட்கள், வயர்லெஸ் சார்ஜர், கப் ஹோல்டர்கள், 12 வோல்ட் பவர் அவுட்லெட், ADAS சூட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     


    மெக்கானிக்கல் அடிப்படையில் இந்த கார் எவ்வித மாற்றமும் இன்றி 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல், CVT கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்திய சந்தையில் புதிய தலைமுறை அமேஸ் மாடல் முற்றிலும் புதிய மாருதி சுசுகி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • புதிய டிசையர் மாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    • முதல் மாருதி கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய டிசையர் மாடலின் விலை விவரங்கள் வருகிற 11 ஆம் தேதி தான் அறிவிக்கப்பட உள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே புதிய டிசையர் மாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    குளோபல் என்கேப் (GNCAP) கிராஷ் டெஸ்டில் பங்கேற்ற புதிய டிசையர் மாடல் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. மேலும், குளோபல் என்கேப் டெஸ்டிங்கில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்ற முதல் மாருதி கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய சப்-4 மீட்டர் செடான் மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கு 34-க்கு 31.24 புள்ளிகளை பெற்றிருக்கிறது. சிறியவர்களுக்கான பாதுகாப்பிற்கு 49-க்கு 39.20 புள்ளிகளை பெற்றுள்ளது.

    டெஸ்டிங்கில் பங்கேற்ற புதிய டிசையர் மாடல் ஆறு ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் உள்ளிட்டவைகளை ஸ்டான்டர்டு அம்சங்களாக பெற்று இருக்கிறது.

    தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டிசையர் மாடல் இதே டெஸ்டிங்கில் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த மாடலுக்கு சலுகைகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது.
    • தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் கணிசமாக குறைந்துள்ளது.

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிக பிரபலமான தார் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே அதிக தட்டுப்பாடு கொண்டிருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற மாடல்களுக்கும் அவ்வப்போது சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாடலுக்கு சலுகைகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

    இந்த நிலை தார் ராக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து சற்று மாறியிருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில், மஹிந்திரா தார் மாடலுக்கு தற்போது ரூ. 3 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா தார் எர்த் எடிஷன் மாடலுக்கு அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    சலுகைகள் தவிர மஹிந்திரா தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் கணிசமான காலம் குறைந்துள்ளது. தார் ராக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, தார் மாடல் சந்தையில் எளிதாக கிடைப்பதாக தெரிகிறது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா தார் மாடலின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 4X4 மாடலின் விலை ரூ. 17 லட்சத்து 06 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து கார் விற்பனை மந்தநிலையைக் கண்டதாகவும் அதனால் கார்களின் இருப்பு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
    • 10 முதல் 25 லட்சம் வரையிலான விலையில் கார்களின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளியை ஒட்டி கார் விற்பனை இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது, 79 ஆயிரம் கோடி ரூபாய் அளிவலான 7.90 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் ஷோ-ரூமில் தேங்கி கிடக்கின்றன.

    மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் போன்ற முன்னணி உற்பத்தியாளர்கள், நிசான் மற்றும் சிட்ரோயன் போன்ற பிற நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய டீலர்கள் விற்பனையாகாத வாகனங்களை வைத்துள்ளனர்.

    ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவுகளின்படி, குறைந்த விற்பனையின் மத்தியில் வாகன உற்பத்தியாளர்கள் கார்களை தீவிரமாக அனுப்பியதால் இது 18.81% குறைந்துள்ளது.

    இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து கார் விற்பனை மந்தநிலையைக் கண்டதாகவும் அதனால் கார்களின் இருப்பு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

    10 முதல் 25 லட்சம் வரையிலான விலையில் கார்களின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது முக்கியமானது, ஏனெனில் தொற்றுநோய்க்குப் பிறகு இந்த பிரிவு விற்பனை வளர்ச்சியின் முதன்மை இயக்கியாக இருந்தது.

    கார் வாங்க நினைப்பவர்கள் அதனை தள்ளிப்போடுவதற்கு தீவிர வானிலை முறைகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மந்தநிலைக்கு மற்றொரு காரணம், மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Tata Curvv போன்ற புதிய மாடல்களுக்கான தேவை.

    • இந்த பிரிவு சரிவை சந்தித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
    • டாப் எண்ட் மாடல்களுக்கான பிரிவு வளர்ச்சி அடைய போவதில்லை.

    இந்திய சந்தையில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் கார் மாடல்கள் விற்பனை சரிந்து வருவது குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கவலை தெரிவித்துள்ளார். நிலையற்ற எரிபொருள் விலை, என்ட்ரி லெவல் மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன்ஆர் போன்ற கார்களின் விற்பனை குறைந்து வருகிறது.

    ரூ. 10 லட்சத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் மாடல்களுக்கான சந்தை வளர்ச்சி பெறவேயில்லை. தொடர்ச்சியாக இந்த பிரிவு சரிவை சந்தித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர்.சி. பார்கவா இரண்டாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சார்ந்த கருத்தரங்கில் பேசும் போது தெரிவித்தார். இரண்டாவது காலாண்டில் மட்டும் மாருதி சுசுகியின் லாபம் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.

     


    என்ட்ரி லெவல் பிரிவு வளர்ச்சியை சந்திக்காத வரை, டாப் எண்ட் மாடல்களுக்கான பிரிவு வளர்ச்சி அடைய போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில், உள்நாட்டில் மினி கார்களின் விற்பனை 15.5 சதவீதம் சரிவடைந்து 66 ஆயிரம் யூனிட்களாக குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இதே காலக்கட்டத்தில் 78 ஆயிரத்து 170 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 சதவீத விற்பனையை ரெனால்ட் க்விட் மாடல் பிடித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்து 81 ஆயிரத்து 143 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

    ×