என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- விவோ நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது.
- புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவோ X ஃபோல்டு 2 எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய ஸ்மார்ட்போன் விவோ X ஃபோல்டு 2 பெயரில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் சீன வெளியீட்டை விவோ உறுதிப்படுத்தி இருக்கிறது. வெய்போ பதிவில் இதுபற்றிய தகவலுடன் விவோ X ஃபோல்டு 2 டீசரையும் விவோ வெளியிட்டு இருக்கிறது.
தற்போதைய டீசரின் படி விவோ X ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அம்சங்கள் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம்.

புதிய விவோ X ஃபோல்டு 2 மாடலில் இதுவரை விவோ உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்படும் என விவோ தெரிவித்து இருக்கிறது. டிசைனை பொருத்தவரை இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மிகவும் மெல்லியதாகவும், குறைந்த எடை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
விவோ X ஃபோல்டு 2 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
விவோ X ஃபோல்டு 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 13, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 4800 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
- ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தனது GT3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
- நத்திங் நிறுவனம் தனது போன் (2) மாடலை அமெரிக்க சந்தையிலும் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவதை பிஐஎஸ் வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும். புதிய ஸ்மார்ட்போன்கள் ஏதும் பிஐஎஸ் சான்று பெற்றுவிட்டால், இவை இந்திய வெளியீட்டு தயாராகி இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம். அந்த வகையில், ரியல்மி மற்றும் நத்திங் என இரு நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் பிஐஎஸ் சான்று பெற்றுள்ளன.
ரியல்மி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்த ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் தற்போது பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. பிஐஎஸ் தளத்தில் ரிய்லமி GT3 ஸ்மார்ட்போனஅ RMX3709 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பொதுவாக பிஐஎஸ் தளத்தில் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் தவிர இதர விவரங்கள் எதுவும் இடம்பெற்று இருக்காது. எனினும், ரியல்மி GT3 ஏற்கனவே சர்வதேச சந்தையில் கிடைப்பதால் இதன் அம்சங்கள் அனைவரும் அறிந்ததே.

ரியல்மி தவிர நத்திங் நிறுவனத்தின் புதிய போன் (2) மாடல் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதன் மூலம் நத்திங் போன் (2) மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் போதே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய நத்திங் போன் (2) AIN065 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. நத்திங் போன் (2) மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழஹ்கப்பட இருக்கிறது.
நத்திங் போன் (2) எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
நத்திங் போன் (2) மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யுஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, OIS சப்போர்ட், போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சர்வதேச சந்தையில் கிடைக்கும் ரியல்மி GT3 மாடலில் 6.74 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மைக்ரோஸ்கோபிக் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 கொண்டிருக்கும் ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
- ஆப்பிள் நிறுவனம் யுஎஸ்பி சி போர்ட் கொண்ட ஏர்பாட்ஸ் ப்ரோ 2 உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலின் உற்பத்தி குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 பற்றிய தகவல்களை பிரபல வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டுள்ளார்.
முன்னதாக ஐஒஎஸ் 16.4 பீட்டா வெர்ஷனில் இதுபற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக வல்லுனர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த இயர்பட்ஸ்-இன் உற்பத்தி இந்த ஆண்டின் இரண்டு அல்லது மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.

ஏர்பாட்ஸ் 2 மற்றும் ஏர்பாட்ஸ் 3 மாடல்களில் யுஎஸ்பி டைப் சி வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்படாது. லைட்னிங் போர்ட்-இல் இருந்து யுஎஸ்பி சி போர்ட்-க்கு மாறும் ஆப்பிள் நிறுவனத்தின் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த புதிய விதிமுறைகள் காரணமாக அமைந்துள்ளன.
சர்வதேச சந்தையில் அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட் மற்றும் இதர மின்சாதனங்களில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட மேக் மற்றும் ஐபேட் சாதனங்களை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் ஏர்பாட்ஸ் மற்றும் ஐபோன் மாடல்களில் லைட்னிங் கனெக்டரே வழங்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் வெளியான ஐஒஎஸ் 16.4 பீட்டா வெர்ஷனில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- புதிய பேஸ் சலுகைகள் பயனர்களுக்கு ட்ரூ5ஜி டேட்டா மற்றும் இலவசமாக கூடுதல் டேட்டா வழங்குகின்றன.
2023 ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரம் துவங்க இருக்கின்றன. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளை பயனர்கள் ஜியோ சினிமா செயலியில் இலவசமாக கண்டுகளிக்க முடியும். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ மூன்று பிரீபெயிட் சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய ஜியோ பிரீபெயிட் சலுகைகள் அதிகபட்சமாக தினமும் 3 ஜிபி டேட்டா, அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி, கூடுதலாக இலவச டேட்டா வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 999 விலைகளில் மொத்தம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

இவற்றின் வேலிடிட்டி முறையே 14 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகும். இத்துடன் ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய சலுகைகளில் அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகளுடன் கூடுதல் டேட்டா வழங்கும் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 219 சலுகையுடன் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 25 வவுச்சர், ரூ. 399 சலுகையுடன் 6 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கும் ரூ. 61 வவுச்சர், ரூ. 999 சலுகையுடன் 40 ஜிபி வரையிலான டேட்டா வழங்கும் ரூ. 241 வவுச்சர் வழங்கப்படுகிறது.
இந்த டேட்டா போதாது என்பவர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளை கிரிக்கெட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. இவற்றை நேரலையில் போட்டிகளை ஸ்டிரீம் செய்ய விரும்பும் பயனர்கள் ஆர்வமுடன் பயன்படுத்தலாம். கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 222, ரூ. 444 மற்றும் ரூ. 667 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இதில் ரூ. 222 சலுகையின் வேலிடிட்டி பயனர்கள் பயன்படுத்தும் பேஸ் சலுகை முடியும் வரை வழங்கப்படுகிறது. ரூ. 444 மற்றும் ரூ. 667 விலை சலுகைகள் முறையே 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. டேட்டாவை பொருத்தவரை ரூ. 222 சலுகை 50 ஜிபி, ரூ. 444 மற்றும் ரூ. 667 சலுகைகள் முறையே 100 ஜிபி மற்றும் 150 ஜிபி டேட்டா வழங்குகின்றன.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
- புதிய நார்ட் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய நார்ட் பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் CE 3 லைட் 5ஜி மற்றும் நார்ட் பட்ஸ் 2 மாடல்களின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு சாதனங்களும் இந்தியாவில் ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நார்ட் CE 2 லைட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிவேக மற்றும் சீரான அனுபவத்தை வழங்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதன் டிசைன் மற்ற மாடல்களில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. நார்ட் CE 3 லைட் 5ஜி மாடல் புதிதாக பேஸ்டல் லைம் நிறத்தில் கிடைக்கும் என உறுதியாகி இருக்கிறது.

ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் உடனடி எக்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.7 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
6 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதன் உள்புறம் மட்டும் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஸ்பெக்லெட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
இரு சாதனங்களை அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் நிகழ்வு 'Larger than life – A OnePlus Nord Launch Event' எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. அறிமுக நிகழ்வு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
- முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோட் 12 சீரிஸ் மாடல்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளன. தற்போது ரெட்மி நோட் 12 சீரிசில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி புதிய ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. மேலும் இது ரெட்மி நோட் 12 என்றே அழைக்கப்படுகிறது. புதிய 4ஜி வேரியண்ட் மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் அங்கமாக அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்களில் இதுவும் ஒன்று ஆகும்.

புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் பக்கத்தில் அதன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் தோற்றத்தில் அதன் 5ஜி வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் அம்சங்கள் ரெட்மி நோட் 11 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. இதில் 6.67 இன்ச் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யுஷன் வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி C55 ஸ்மார்ட்போன் சன்ஷவர் மற்றும் ரெயினி நைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரியல்மி C55 ஸ்மார்ட்போன் 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் பட்ஜெட் மிட்-ரேஞ்ச் பிரிவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரியல்மி C55 ஸ்மார்ட்போனில் மினி கேப்ஸ்யுல் எனும் அம்சம் உள்ளது. இது ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.52 இன்ச் LCD டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர் கொண்டிருக்கும் ரியல்மி C55 ஸ்மார்ட்போன் மாலி G52 கிராஃபிக்ஸ் யூனிட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 கொண்டுள்ளது. இதில் உள்ள மினி கேப்ஸ்யுல் சார்ஜிங், பேட்டரி நிலவரம் போன்ற விவரங்களை காண்பிக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ரியல்மி C55 ஸ்மார்ட்போன் சன்ஷவர் மற்றும் ரெயினி நைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி C55 அம்சங்கள்:
6.52 இன்ச் LCD டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்
மாலி G52
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0
64MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா, எல்இடி ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
கைரேகை சென்சார்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி C55 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ரியல்மி C55 ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஸ்டோரில் மார்ச் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு இன்று (மார்ச் 21) மாலை 6.30 மணிக்கு துவங்குகிறது.
- விவோ நிறுவனம் உருவாக்கி வரும் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவோ X ஃப்ளிப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைத்தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் விவோ X ஃப்ளிப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் V2256A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் இடம்பெற்று இருப்பதை அடுத்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய விவோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், சோனி IMX866 50MP பிரைமரி கேமரா, 6.8 இன்ச் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் சிறிய இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

கீக்பென்ச் டெஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 1695 புள்ளிகளையும், மல்டி கோரில் 4338 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டுள்ளது.
விவோ X ஃப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட FHD+ டிஸ்ப்ளே, HD ரெசல்யுஷன் கொண்ட இரண்டாவது டிஸ்ப்ளே, 50MP சோனி IMX866 பிரைமரி கேமரா, 12MP IMX663 அல்ட்ரா வைடு கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், பன்ச் ஹோல் ஸ்கிரீனில் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4400 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: whatsdevice
- போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 தர ஸ்வெட் ரெசிஸ்டணட் வசதி உள்ளது.
- இதில் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் லீப் கால் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாசட்ச் குறைந்த விலையில், அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய போட் வேவ் லீப் கால் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.83 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், IP68 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறம் கரவுன் போன்ற பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
உடல்நல அம்சங்களை பொருத்தவரை போட் வேவ் லீப் கால் மாடலில் ஹார்ட் ரேட் மாணிட்டர், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் தினசரி ஆக்டிவிட்டி டிராக்கர், சுவாச பயிற்சி போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

போட் வேவ் லீப் கால் மாடலில் பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதி உள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 10 காண்டாக்ட்களை சேமிக்க முடியும். இத்துடன் டயல் பேட் உள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், சிரி போன்ற அம்சங்களும் உள்ளன. இவைதவிர மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், வானிலை அப்டேட்கள், ஃபைண்ட் மை போன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. இது 60 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை வழங்குகிறது.
புதிய போட் வேவ் லீப் கால் மாடல் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மார்ச் 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F14 ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் புதிய கேலக்ஸி A சீரிஸ் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போனிற்காக பிரத்யேக வலைப்பக்கத்தை ப்ளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி மதியம் 12 மணி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்மார்ட்போனிற்கான டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

டிசைனை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி F14 மாடலில் ஃபிளாட் பேக், வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இதன் டூயல் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. பவர் மற்றும் வால்யும் ராக்கர் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்திலும், இடதுபுறத்தில் சிம் டிரே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 13 5ஜி பேண்ட்களை கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 ஒஎஸ் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி F14 5ஜி மாடலில் இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், நான்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது. போஸ்டரில் இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1330 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும், இது 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி F14 5ஜி மாடலில் 6.6 இன்ச் LCD ஸ்கிரீன், FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 13MP செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், ஒன் யுஐ கோர் 5 ஒஎஸ், ஆண்ட்ராய்டு 13, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.