என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
- சாட்களை சீக்ரெட் கோட் மூலம் மறைத்து கொள்ளலாம்.
- அஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
வாட்ஸ்அப் செயலியில் உள்ள லாக்டு சாட் (Locked Chat) அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக அறிவிக்கப்பட்ட சாட் லாக் அம்சம் தற்போது நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்யும் போது, நீங்கள் உங்களது போனினை மற்றவர்களிடம் கொடுக்கும் போது, அவர்கள் உங்களது மிகமுக்கிய உரையாடல்களை பார்த்து விடுவார்களா என்ன அஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நீங்கள் உங்களது சாட்களுக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். பாஸ்வேர்டுக்கு மாற்றாக கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம்.

அந்த வரிசையில், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் லாக் அம்சத்தில் சீக்ரெட் கோட் வசதி வழங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறார். இதை கொண்டு சாட்களை பிரத்யேக பாஸ்வேர்டு மூலம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைக்கப்படும் சாட்கள் அனைத்தும் மெயின் சாட் லிஸ்ட்-இல் காண்பிக்கப்படாது.
மேலும் செயலியில் பயனர் செட் செய்த சீக்ரெட் கோட்-ஐ பதிவிட்டால் மட்டுமே இயக்க முடியும். இந்த அம்சத்தினை இயக்க செயலியின் சாட் -- லாக் செட்டிங்ஸ் -- ஹைடு லாக்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி சீக்ரெட் கோட்-ஐ செட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, நீங்கள் தேர்வு செய்த சாட் மெயின் சாட் லிஸ்ட்-இல் இடம்பெறாது.

தற்போது லாக்டு சாட் அம்சத்தை இயக்குவதற்கான ஷாட்கட்- சாட் ஸ்கிரீனில் இருந்து கீழ்புறம் நோக்கி ஸ்வைப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, கைரேகை சென்சார் அல்லது ஃபேஸ் ஐடி மூலம் சாட்களை இயக்கலாம். சாட்களில் சீக்ரெட் கோட் செட் செய்த பிறகு, செயலியில் உள்ள லாக்டு சாட்ஸ்-ஐ இயக்க வாட்ஸ்அப் சர்ச் பாரில் சீக்ரெட் கோட்-ஐ பதிவிட வேண்டியது அவசியம் ஆகும்.
- புதிய நத்திங் ஸ்மார்ட்போன் இந்த பெயரில் அறிமுகமாகலாம்.
- இந்த ஸ்மார்ட்போன் இதுபோன்ற தோற்றம் கொண்டிருக்கலாம்.
நத்திங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் போன் 2 என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது நத்திங் நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1 தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதன் விலை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி நத்திங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 3 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படாது என டிப்ஸ்டர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

நத்திங் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2a என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் AIN142 ஆக இருக்கிறது. இதுவே இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2a பெயரில் அறிமுகமாகும் என்பதை உணர்த்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் மற்றும் க்ளிம்ஃப் இண்டர்ஃபேஸ் நத்திங் போன் 1 மாடலில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட்டில் செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் இதுவரை வெளியான ரெண்டர்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும்.
- ஏற்க மறுத்தால் ரூ. 10 லட்சம் வரை அபராதம்.
இந்தியாவில் நாளை (டிசம்பர் 1) முதல் சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என மாற்றப்பட்டது.
புதிய விதிமுறைகள் இந்தியாவில் நடைபெற்று வரும் சைபர் குற்றங்களை பெருமளவுக்கு குறைக்கவோ அல்லது குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. புதிய விதிமுறைகள் குடிமக்கள் பாதுகாப்பு கருதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சிம் கார்டுகளை அதிகளவில் விற்பனை செய்வது, யார் விற்பனை செய்ய முடியும் என்பது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன.

விதிமுறை விவரங்கள்:
இந்த விதிமுறைகளின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
ஏற்கனவே உள்ள நம்பர்களுக்கு சிம் கார்டுகளை வாங்கும் போது, உங்களின் ஆதார் மற்றும் அடையாள விவரங்களை சமர்பிக்க வேண்டும். இதேபோன்று சிம் கார்டை விற்பனை செய்வோரும் வெரிஃபிகேஷனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிம் டீலர்கள் விற்பனை செய்யும் சிம் கார்டுகளை ரெஜிஸ்டர் செய்வதோடு, அவர்களையும் வெரிஃபை செய்ய வேண்டும்.
புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்தால், அரசாங்கம் சார்பில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும். ஒரு நபர் அதிக சிம் கார்டுகளை வாங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன் படி தனிநபர் பயன்பாட்டுக்கு ஒருவர் தனது அடையாள சான்றினை பயன்படுத்தி அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்க முடியும்.
ஒருவரின் சிம் கார்டு செயலிழந்து போனால், அந்த நம்பர் அடுத்த 90 நாட்கள் வரை வேறு யாருக்கும் நிர்ணயம் செய்யப்படாது. இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் அந்த நம்பருடன் ஒருங்கிணைந்த தகவல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இன்றுக்குள் (நவம்பர் 30) சிம் விற்பனையாளர்கள் பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் BOE வழங்கிய ஸ்கிரீனை பயன்படுத்துகிறது.
- இதில் உள்ள ஸ்கிரீன் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும்.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ரியல்மி GT 5 ப்ரோ மாடல் டிசம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ரியல்மி GT 5 ப்ரோ மாடலின் பேஸ் வேரியண்ட் அம்சங்கள் மற்றும் டிஸ்ப்ளே பற்றிய விவரங்களை ரியல்மி நிறுவனத்தின் மூத்த விளம்பர அதிகாரியான சு குயி வெளியிட்டு உள்ளார். அதன்படி ரியல்மி GT 5 ப்ரோ பேஸ் வேரியண்டில் அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

முன்னதாக TENAA வலைதளத்தில் வெளியான தகவல்களில் ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் OLED கர்வ்டு-எட்ஜ் டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 2780x1264 பிக்சல்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது ரியல்மி நிறுவன மூத்த அதிகாரி வெளியிட்டுள்ள போஸ்டரில் GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் BOE வழங்கிய ஸ்கிரீனை பயன்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் உள்ள TUV சான்று பெற்ற டிஸ்ப்ளேவில் 8T LTPO தொழில்நுட்பம், 0.5Hz முதல் 144Hz வரையிலான அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், ப்ரோ XDR HDR தொழில்நுட்பம், அதிகபட்சம் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும். இத்துடன் 2160Hz PWM டிம்மிங், 2160Hz டச் சாம்ப்ளிங் ரேட், டி.சி. டிம்மிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை தலைசிறந்த டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்கும்.
புதிய GT 5 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 24 ஜி.பி. வரையிலான LPDDR5x ரேம், 1 டி.பி. வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் சென்சார் வழங்கப்படுகிறது.
- டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்தது.
- ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் முழுமையாக கையகப்படுத்தி, ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. முன்னதாக டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொடுத்தது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்தை அதிகளவு நம்புவதாக தெரிகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் யூனிட்கள் சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதில் 15 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
முதற்கட்டமாக ஐபோன்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ஓசூர் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் 28 ஆயிரம் பேர் வரை பணியாற்ற முடியும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்திற்கு இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் இடம்பெற்று இருக்கிறது.
- முதல் ரெட்மி C சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 12C மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் டிசம்பர் 6-ம் தேதி அறிமுகமாக இருக்கும் ரெட்மி 13C அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக அமேசான் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கும் மைக்ரோசைட்டில் ஸ்மார்ட்போனின் விவரங்களும் தெரியவந்துள்ளது.
அதன்படி ரெட்மி 13C ஸ்மார்ட்போனுடன் அதன் 5ஜி வெர்ஷனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், 5ஜி கனெக்விட்டியுடன் அறிமுகமாகும் முதல் ரெட்மி C சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று தெரிகிறது.

அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C மாடல் ஸ்டார்டஸ்ட் பிளாக் மற்றும் ஸ்டார் ஷைன் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் ஏ.ஐ. வசதி கொண்ட 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதன் தோற்றம் நைஜீரிய மாடலை போன்ற காட்சியளிக்கிறது. அமேசான் தவிர Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படலாம்.

ரெட்மி 13C அம்சங்கள்:
6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
மாலி G52 GPU
4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 14
50MP பிரைமரி கேமரா
2MP மேக்ரோ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
4ஜி, டூயல் சிம் ஸ்லாட், வைபை
ப்ளூடூத் 5.3
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- சாம்சங்கின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
- சாம்சங் போனிற்கு 4 ஆண்டுகள் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A05 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்கள், 2 ஒ.எஸ். அப்கிரேடுகள் வழங்கப்படுகின்றன.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் எதுவும் வழங்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி A05 அம்சங்கள்:
6.7 இன்ச் 720x1600 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM மாலி G52 GPU
4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்
64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யு.ஐ.
டூயல் சிம்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி A05 ஸ்மார்ட்போன் லைட் கிரீன், சில்வர் மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- அமேசான் வலைதளத்தில் லேப்டாப் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
- மேக்புக் ஏர் M1 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆண்டில் மேக்புக் ஏர் M1 மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 99 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு தற்போது அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அமேசான் வலைதளத்தில் இந்த லேப்டாப் விலை பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது.
அமேசான் வலைதள விவரங்களின் படி ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேக்புக் ஏர் M1 விலை ரூ. 99 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 990 என்று மாறி விடும். இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி முழு தொகை செலுத்தி வாங்குவோருக்கும், மாத தவணையில் வாங்குவோருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது மேக்புக் ஏர் M1 விலை ரூ. 79 ஆயிரத்து 990 என்று மாறிவிடும். மேக்புக் ஏர் M1 மாடல் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

மேக்புக் ஏர் M1 அம்சங்கள்:
13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளே, 400 நிட்ஸ் பிரைட்னஸ்
M1 சிப்செட்
8 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. மெமரி
தண்டர்போல்ட் 3
யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1, டிஸ்ப்ளே போர்ட்
3.5mm ஹெட்போன் ஜாக்
பேக்லிட் மேஜிக் கீபோர்டு
டச் ஐடி சென்சார்
வைபை, ப்ளூடூத், ஹெச்.டி. கேமரா
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
15 மணி நேர பேக்கப்
30 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டர்
- ஃபன்டச் ஒ.எஸ். 14 சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
- இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐகூ நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐகூ 12 பெயரில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இத்துடன் ஐகூ 12 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகும் நிலையில், இந்த மாடலில் புளோட்வேர் எனப்படும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் எதுவும் இடம்பெற்றிருக்காது என தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மர்யா தெரிவித்து இருக்கிறார். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஃபன்டச் ஒ.எஸ். 14 சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போனுக்கு மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். கொண்ட பிக்சல் அல்லாத முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இத்துடன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் இது ஆகும்.

ஐகூ 12 அம்சங்கள்:
6.78 இன்ச் 1.5K LTPO OLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டராகன் 8 ஜென் 3 பிராசஸர்
அட்ரினோ GPU
அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம்
1 டி.பி. வரையிலான மெமரி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4
இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா
50MP பிரைமரி கேமரா, OIS
50MP அல்ட்ரா வைடு லென்ஸ்
64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
120வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்