search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார்.
    • வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார்.

    வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார்.

    அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது.

    பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார்.

    பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடைபடும்.

    ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார்.

    விநாயகர்தான் அதற்கு ஏற்றவர் என்று முடிவு செய்தார்.

    விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார்.

    வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார்.

    அதற்கு சம்மதித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன்.

    நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா என்றார்.

    வியாசர் அதுகேட்டு திகைத்தார். ஆகட்டும். நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன்.

    ஆனால் பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்றார்.

    பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது.

    விநாயகர் சரி என்றார். வியாசர் பாட தொடங்கினார்.

    விநாயகர் தமது கொம்பினால் மேரு மலையில் எழுதலானார்.

    60 லட்சம் கிரந்தங்கள் பாடினார்.

    இதில் விநாயகருடைய எழுதும் வேகத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுக் கடினமான பதங்களை அமைத்து இடையே 8800 சுலோகங்கள் பாடினார்.

    இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சிறித சிந்திக்கும் பொழுது பலப் பல சுலோகங்களை வியாசர் மனதில் ஆயத்தம் செய்து கொண்டார்.

    இவ்வாறு வியாசர் பாடிய அறுபது லட்சம் கிரந்தங்களில் 30 லட்சம் தேவருலகில் நின்றது.

    15 லட்சம் அசுரவுலகில் நின்றது. 14 லட்சம் யட்சவுலகில் நின்றது. ஒரு லட்சம் மட்டுமே பூவுலகில் நின்றது.

    • பெரும்பாலன ஆலயங்களில் விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கிறார்கள்.என்றாலும் இது தவறாகும்.
    • பொதுவாக சிவபெருமானின் பூஜைக்கு உகந்த எல்லா மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு ஏற்றவைதான்.

    விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யும் போது அருகம்புல்லும், வன்னி இலைகளும், மந்தாரைப் பூவும் அவசியம் இருக்க வேண்டும்.

    பொதுவாக சிவபெருமானின் பூஜைக்கு உகந்த எல்லா மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு ஏற்றவைதான்.

    ஆனால் தாழம்பூ, துளசி ஆகியவை மட்டுமே கண்டிப்பாகக்கூடாது.

    பெரும்பாலன ஆலயங்களில் விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கிறார்கள்.

    என்றாலும் இது தவறாகும்.

    விநாயகருக்கு நைவேத்தியம் செய்ய பின் வருவனவற்றைப் படைக்கலாம்.

    அப்பம், அவல், அமுது, அவரை, இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கல்கண்டு, வள்ளிக்கிழக்கு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், தேன், தினைமாவு, நெய், பச்சரிசி, பால், பாகு வெல்லம், பணியாரம், கொழுக்கட்டை, பிட்டு, லட்டு, வடை, வெண்ணெய், விளாம்பழம், நாவல்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆகியவை.

    விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, ரசபஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், கருப்பஞ்சாறு, இளநீர், சந்தனம், பழ ரசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

    • இவரே சகோதரத்துவத்தின் மகிமையை எடுத்துரைக்கும் சகோதர விநாயகராகவும் அருள்பாலிக்கிறார்.
    • தன் தம்பி முருகன் வள்ளி திருமணத்திற்கு மிகவும் உதவினார்.

    சிறு வயதாக இருக்கும் போது தனது சகோதரன், சகோதரி மீது இருக்கும் பாசம், பெரியவர்களான பிறகு மாறிவிடுகிறது.

    நாரதர் கொடுத்த பழத்திற்காக, உலகைச் சுற்றி வரக் கூறிய போது, பெற்றோரை சுற்றி வந்து அவர்கள் தான் உலகம் என்பதை உணர்த்தியவர் விநாயகர்.

    இவரே சகோதரத்துவத்தின் மகிமையை எடுத்துரைக்கும் சகோதர விநாயகராகவும் அருள்பாலிக்கிறார்.

    தன் தம்பி முருகன் வள்ளி திருமணத்திற்கு மிகவும் உதவினார்.

    இந்த ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிந்திருக்கும் சகோதரர்கள் விநாயகரை வணங்கினால் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.

    • இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது.
    • தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.

    வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டவராக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார்.

    மற்ற விநாயகரின் உருவத்தில் இருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர்.

    குடை வரைக் கோவிலாக உள்ள இக்கோவிலில் புடைப்பு சிற்பமாக விநாயகர் வடிவம் அமைந்துள்ளது.

    இரு கைகளுடன், பாச அங்குசம் போன்ற படைக்கலன்களின்றி காணப்படுகிறார்.

    கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில், கையில் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டு வீற்றிருக்கிறார்.

    உலக நன்மைக்காக சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

    கிரீடம் இல்லாமல் சடை முடி தாங்கி எளிமையானவராக உள்ளார்.

    இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது.

    தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியன்று முக்குருணி அளவில் (சுமார் 24 கிலோ அரிசியால் செய்த கொழுக்கட்டை) ஒரே மோதகத்தைப் படைக்கின்றனர்.

    • நாயுருவி கொண்டு கணபதி ஹோமம் செய்ய, கிரகங்களின் தீய தாக்கங்கள் விலகும்.
    • செந்தாமரையால் ஹோமம் செய்ய, பெரும் பொருள் சேரும்.

    வெள்ளிக்கிழமை அருகம்புல், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு கணபதி ஹோமம் செய்தால் பெருஞ்செல்வமும் நீண்ட ஆயுளும் வாய்க்கும்.

    நாயுருவி கொண்டு கணபதி ஹோமம் செய்ய, கிரகங்களின் தீய தாக்கங்கள் விலகும்.

    செந்தாமரையால் ஹோமம் செய்ய, பெரும் பொருள் சேரும்.

    வெண்ணிற நீர்நெர்ச்சி கொண்டு ஹோமம் செய்ய, உயர்வை பெறலாம்.

    கெட்டி பதம் தயிரால் ஹோமம் செய்ய, வளம் பெருகும்.

    நீலோற்பவ மலரால் ஹோமம் செய்ய, அனைத்து மக்களும் வசியமாவர்.

    வெல்லம், வாழைப்பழம், பாயசம், நெய் கலந்த தேங்காய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் எண்ணியவை திண்ணமாக நிறைவேறும்.

    விநாயகரை செவ்வாய்க்கிழமைகளிலும் சண்டியை வெள்ளியிலும் வழிபட்டால் ராகு, கேது ஆகிய கிரகத்தின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

    • அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்கு சென்று அலங்காரம் செய்விப்பதுடன்
    • வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.

    அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்கு சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

    கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம்.

    அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம்.

    கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம். 

    • நிலம் (பூமி) & விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்.
    • நீர் & சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

    அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.

    நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.

    இந்த பஞ்சபூதங்களை நம்முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

    அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:

    நிலம் (பூமி) & விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்.

    நீர் & சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    நெருப்பு & அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்

    காற்று & இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்.

    ஆகாயம் & இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

    • சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
    • நடராஜர் கோவில் இருந்தபோது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர்.

    சிதம்பரம் நகரின் தெற்குத் தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பால விநாயகர் உள்ளார்.

    சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    நடராஜர் கோவில் இருந்தபோது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர்.

    குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அதிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார்.

    மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு அருளும் விநாயகர் இவர்.

    • விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.
    • தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார்

    விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.

    தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.

    தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர்.

    அந்த பண்புகளையே தன் இரு மனைவியராக கொண்டு சித்தி புத்தி விநாயகராக வீற்றிருக்கின்றார்.

    • சதுர்த்தசி : விஜய கணபதி
    • பவுர்ணமி : நிருத்ய கணபதி

    அமாவாசை : நிருத கணபதி

    பிரதமை : பால கணபதி

    த்விதியை : தருண கணபதி

    திருதியை : பக்தி கணபதி

    சதுர்த்தி: வீர கணபதி

    பஞ்சமி: சக்தி கணபதி

    சஷ்டி : த்விஜ கணபதி

    சப்தமி : சித்தி கணபதி

    அஷ்டமி : உச்சிஷ்ட கணபதி

    நவமி : விக்ன கணபதி

    தசமி : க்ஷிப்ர கணபதி

    ஏகாதசி : ஹேரம்ப கணபதி

    துவாதசி : லசுட்மி கணபதி

    திரையோதசி : மகா கணபதி

    சதுர்த்தசி : விஜய கணபதி

    பவுர்ணமி : நிருத்ய கணபதி

    • சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வருகிற 23-ந்தேதி முதல் மே மாதம் 2-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

    10 நாட்கள் இவ்விழாவை நடத்த கோவில் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்து உள்ளது. 22-ந்தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை துலா லக்னம் அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி காலை 8 மணி முதல் 8.45 மணிக்குள் சுவாமிக்கு ரிஷப லக்னத்தில் துவஜா ரோகனம் நடக்கிறது.

    அதிகாலை 5.30 மணிக்கு தர்மாதி பீடம் இரவு 7.45 மணிக்கு புன்னைமர வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம் இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகன ஊர்வலம் நடக்கிறது.

    25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சாமி கருட சேவை-கோபுர வாசல் தரிசனமும் பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவையும் இரவு 7.45 மணிக்கு அம்ச வாகன ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 6.15 மணிக்கு சூரிய பிரவை வாகனம், இரவு 8 மணிக்கு சந்திர பிரவை வாகனம்.

    27-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு ஊர்வலம், இரவு 8.15 மணிக்கு அனுமந்த வாகனம் 28-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம், காலை 6.15 மணிக்கு ஆனந்த விமானம் இரவு 8 மணிக்கு யானை வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்கு கும்ப லக்னத்தில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் இரவு 9 மணிக்கு தோட்டத்திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    30-ந் தேதி காலை 6.15 மணிக்கு பல்லக்கு வெண்ணெய் தாழி, கண்ணன் திருக்கோலம், இரவு 8.15 மணிக்கு குதிரை வாகன ஊர்வலம் நடக்கிறது.

    மே 1-ந் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரி, இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு 10-ம் நாள் மே 2-ம் தேதி சப்தவர்ணம்- சிறிய திருத்தேர் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    3-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இது தவிர தினமும் மாலை 5.30 மணிக்கு பக்தி உலாத்தல் நடக்கிறது. மே 1-ந்தேதி சாமி புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளின் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்தசாரதி கோவிலின் துணை ஆணையர் நித்யா செய்து வருகிறார்.

    • காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
    • பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய சந்திர மண்டல காட்சிகள், பூதவாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், புஷ்ப விமானம் கைலாச வாகன காட்சிகள் நடந்தன.

    நேற்று இரவு 10 மணியளவில் பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.

    அப்போது வானவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகண பூத வாத்திய இசைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்குரத வீதி, வடக்கு வீதி கிழக்கு ரத வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமி திரு வீதி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் காட்சிகள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது.

    21-ந் தேதி காலை 9 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சிறிது தொலைவு சென்றவுடன் நிறுத்தப்படுகிறது.

    22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. 24-ந் தேதி அன்று மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும், 25-ந் தேதிதெப்ப தேர் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந் தேதி மகா தரிசனம், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×