என் மலர்
இது புதுசு
- மாருதி சுசுகி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
- அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காம்பேக்ட் ஹேச்பேக் மற்றும் டிசையர் காம்பேக்ட் செடான் மாடல்களை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரிவுகளில் அதிக வரவேற்பை பெறுவதோடு விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த வரிசையில், இவற்றின் ஹைப்ரிட் வெர்ஷன் அதிக பிரபலம் அடையும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் ஆகும்.

இத்துடன் வரும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இதே யூனிட் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் லிட்டருக்கு 35 முதல் 40 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இரு கார்களும் அளவில் சிறியது என்பதால், இந்த மைலேஜ் கிடைக்கும் என்றே தெரிகிறது. பாகங்கள் பெரும்பாலும் உள்நாட்டில் இருந்தே பயன்படுத்தும் பட்சத்தில், இவற்றின் விலை ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது.
- கியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஏற்கனவே அறிமுகமான EV9 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
- கியா EV5 கான்செப்ட் மாடலில் சூரிய தகடுகளாக செயல்படும் ஃபுல் லென்த் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.
கியா EV9 கான்செப்ட்-ஐ தொடர்ந்து கியா நிறுவனம் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கியா EV5 என அழைக்கப்படும் புதிய கான்செப்ட் மாடல் ஃபிளாக்ஷிப் EV9 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய EV5 மாடலும் EV9 போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய EV5 கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது சீனாவில் இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்றும் சர்வதேச சந்தையில் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. EV5 மாடல் டிஜிட்டல் டைகர் ஃபேஸ் மற்றும் க்ளோஸ்டு-ஆஃப் முன்புறம், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப் கொண்டிருக்கிறது.

பக்கவாட்டில் EV5 மாடலில் 21 இன்ச் ஏரோடைனமிக் வீல்கள், ஃபிளஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், தடிமனான பிளாஸ்டிக் கிலாடிங், கிரீஸ்களை கொண்டுள்ளது. பின்புறம் இந்த கார் EV9-ஐ விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. EV5 மாடலில் லோ-செட் எல்இடி டெயில் லேம்ப்கள், பம்ப்பரில் பெரிய ஸ்கிட் பிளேட் மற்றும் ஸ்பாயிலர் இடம்பெற்று இருக்கிறது.
உள்புறம் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. கியா EV5 மாடலில் சுழலும் வகையான இருக்கைகள், ரியர் ஹிஞ்ச் டோர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள ஃபுல் லென்த் பானரோமிக் சன்ரூஃப் சூரிய தகடு போன்று செயல்படுகிறது.
இந்திய சந்தையில் கியா நிறுவனம் EV6 மாடலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் EV5 மற்றும் EV9 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- ஆடி நிறுவனத்தின் புதிய Q6 எலெக்ட்ரிக் கார் ரேஞ்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
- புதிய ஆடி Q6 இ டிரான் மாடல் 2024 வாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஆடி நிறுவனம் 2024 வாக்கில் Q6 இ டிரான் மாடலை அறிமுகம் செய்யும் என சமீபத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் முழு சார்ஜ் செய்தால் 600கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. 2025 வாக்கில் ஆடி அறிமுகம் செய்ய இருக்கும் 20 புதிய மாடல்களில் ஒன்றாக Q6 இ டிரான் இருக்கிறது.
புதிய ஆடி Q6 இ டிரான் மாடல் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சரை (PPE) தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாட்ஃபார்ம் போர்ஷே நிறுவனத்துடன் இணைந்து ஆடி உருவாக்கி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் மக்கன் EV மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாட்ஃபார்மில் அதிகபட்சம் 270 கிலோவாட் சார்ஜிங் ரேட் வழங்கப்படுகிறது.

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q6 இ டிரான் கான்செப்ட் மாடல் 469 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. மக்கன் EV மாடலில் உள்ள மோட்டார் 611 ஹெச்பி பவர், 953 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசியை வெளிப்படுத்துகிறது.
Q6 இ டிரான் எஸ்யுவி-யை தொடர்ந்து கூப் எஸ்யுவி அல்லது ஸ்போர்ட்பேக் மாடலை அறிமுகம் செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. முந்தைய தகவல்களின் படி ஆடி Q6 இ டிரான் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த மாடல் 2024 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.
- லம்போர்கினி நிறுவனத்தின் முற்றிலும் புதிய உருஸ் எண்ட்ரி லெவல் மாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- புதிய உருஸ் மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் உருஸ் எஸ்யுவி-க்கு மாற்றாக இருக்கும் என தெரிகிறது.
ஆடம்பர கார் உற்பத்தியாளரான லம்போர்கினி தனது எண்ட்ரி லெவல் உருஸ் S மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் உருஸ் எஸ்யுவி-க்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய மாடல் உருஸ் பெர்ஃபோர்மண்ட் எஸ்யுவி-யின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக லம்போர்கினி உருஸ் நீடிக்கிறது. கடந்த ஆண்டு லம்போர்கினி விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உருஸ் எஸ்யுவி யூனிட்கள் இருந்தன. கடந்த ஆண்டு மட்டும் லம்போர்கினி நிறுவனம் 200-க்கும் அதிக உருஸ் மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது.

சர்வதேச சந்தையில் லம்போர்கினி உருஸ் S மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய உருஸ் S மாடல் உருஸ் பெர்ஃபார்மண்ட் எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் குவாட் எக்சாஸ்ட் அவுட்லெட்கள், வெண்டெட் பொனெட் மற்றும் கார்பன் ஃபைபர் ரூஃப் உள்ளன.
இந்த எஸ்யுவி மாடலில் டூயல் டோன் இண்டீரியர் தீம், செயற்கைக்கோள் சார்ந்த நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டிஜிட்டல் கார் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
லம்போர்கினி உருஸ் S மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் பிரெஸ்ஸா மாடலை மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்கிறது.
- புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் பிரெஸ்ஸா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதய மாருதி சுசுகி பிரெஸ்ஸா விலை ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த எஸ்யுவி மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிரெஸ்ஸா CNG மாடல்- LXi, VXi, ZXi மற்றும் ZXi டூயல் டோன் என நான்குவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒட்டுமொத்த தோற்றத்தில் புதிய பிரெஸ்ஸா CNG மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. காரின் வெளிப்புறத்திலும் CNG பேட்ஜ் எதுவும் இடம்பெறவில்லை.

பவர்டிரெயினை பொருத்தவரை பிரெஸ்ஸா CNG மாடல் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதே என்ஜின் எர்டிகா மற்றும் XL6 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 25.51 கிமீ வரையிலான மைலேஜ் வழங்குகிறது.
புதிய விலை விவரங்கள்:
மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG LXi ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம்
மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG VXi ரூ. 10 லட்சத்து 49 ஆயிரம்
மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG ZXi ரூ. 11 லட்சத்து 89 ஆயிரம்
மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG ZXi டூயல் டோன் ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 450கிமீ ரேஞ்ச் வழங்குகிறது.
- புதிய ஃபோக்ஸ்வேகன் சிறிய எலெக்ட்ரிக் கார் அதன் கான்செப்ட் வடிவிலேயே இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது சிறிய எலெக்ட்ரிக் கார் ID.2all மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது. தற்போது கான்செப்ட் வடிவில் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் விற்பனை 2026 ஆண்டு துவங்குகிறது.
முற்றிலும் புதிய ID.3, நீண்ட வீல்பேஸ் கொண்ட ID.Buzz மற்றும் ID.7 மாடல்கள் வரிசையில் ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக ID.2all மாடல் இணைய இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் ID.2all பேஸ் வேரியண்ட் விலை 25 ஆயிரம் யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

தற்போது கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஃபோக்ஸ்வேகன் ID.2all, கடந்த 2021 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ID.Life மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த மாடல் எதிர்கால டிசைன் கொண்டிருப்பதோடு, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது.
ஃபோக்ஸ்வேகன் ID.2all மாடலில் 222 ஹெச்பி பவர் வழங்கும் மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேத்தை 7 நொடிகளுக்குள் எட்டிவிடும். இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும் என தெரிகிறது.
இதில் வழங்கப்படும் பேட்டரி விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த காரின் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் பேட்டரியை 10 முதல் 80 வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே போதும். இத்துடன் வீட்டிலேயே காரை சார்ஜ் செய்துகொள்ள 11 கிலோவாட் சார்ஜர் வசதியும் வழங்கப்படுகிறது.
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
- புதிய டஸ்டர் மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. 2013 வாக்கில் முதல் தலைமுறை டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்திய சந்தையில் இதன் இரண்டாவது தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. அந்த வகையில், மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் 2025 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஸ்பை படங்களின் படி மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் தோற்றத்தில் டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட் எஸ்யுவி போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இதில் மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், சதுரங்க வடிவிலான ஃபிளாட் பொனெட் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

பக்கவாட்டு பகுதிகளில் டஸ்டர் மாடலில் புல்-டைப் டோர் ஹேண்டில்களை கொண்டிருக்கிறது. இதன் ரியர் டோன் ஹேண்டில்கள் சி பில்லரில் இண்டகிரேட் செய்யப்பட்டு உள்ளது. மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடலில் தொடர்ந்து சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்களே வழங்கப்பட்டு இருக்கின்றன.பின்புறம் பூமராங் வடிவம் கொண்ட டெயில் லேம்ப், டுவின் பாட் ஸ்பாயிலர் உள்ளது.
புதிய ரெனால்ட் டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் அதிகளவு உள்நாட்டிற்கு ஏற்ற மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த கார் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் ஐந்து இருக்கைகள் வழங்கப்பட உள்ளன. இதே காரின் 7 சீட்டர் வெர்ஷனும் உருவாக்கப்படுகின்றன.
Photo Courtesy: cochespias
- பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய NS160, NS200 மாடல்களில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளை கொண்டுள்ளன.
- இரு மாடல்களிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது NS160 மற்றும் NS200 மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் பல்சர் NS160 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என்றும் NS200 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இரு மாடல்களின் முந்தைய விலைகளை விட முறையே ரூ. 10 ஆயிரம், ரூ. 7 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2012 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட NS200 மாடல் இதுவரை சிறு அப்டேட்களையே பெற்று வந்தது. இந்த நிலையில், 2023 பஜாஜ் பல்சர் NS160 மற்றும் NS200 மாடல்கள் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகளையும், டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாற்றங்கள் தவிர இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் பல்சர் NS160 மாடலில் ஆயில் கூல்டு 160.3சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 17.2 ஹெச்பி பவர், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பல்சர் NS200 மாடலில் லிக்விட் கூல்டு 199.5சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.5 ஹெச்பி பவர், 18.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இருவித என்ஜின்கள் தவிர, இரு மாடல்களும் ஒரேமாதிரியாகவே காட்சியளிக்கிறது. NS200 மாடலில் சற்றே அகலமான டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவா பெயரிலேயே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
- புதிய ஸ்கூட்டர்கள் மாற்றக்கூடிய பேட்டரி செட்டப், அளவில் சிறியதாகவும் குறைந்த எடை கொண்டிருக்கலாம்.
ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் டிவிஎஸ் ஐகியூப், ஏத்தர் 450x மற்றும் ஒலா S1 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.
புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவா பெயரிலேயே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று இல்லாமல் புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும்.

இத்துடன் புதிய ஹோண்டா ஸ்கூட்டரில் பாதுகாப்பு காரணங்களுக்காக Fixed பேட்டரி செட்டப் வழங்கப்பட இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. தோற்றத்தில் இந்த ஸ்கூட்டரின் ஸ்டைலிங் ஹோண்டா ஆக்டிவா போன்றே காட்சியளிக்கிறது.
ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பின், ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை முற்றிலும் புதிய born-electric பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படலாம். புதிய ஸ்கூட்டர்கள் மாற்றக்கூடிய பேட்டரி செட்டப், அளவில் சிறியதாகவும் குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- மினி நிறுவனத்தின் கூப்பர் EV மாடல் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.
- முற்றிலும் புதிய மினி எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மினி நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஆல்-எலெக்ட்ரிக் கூப்பர் EV மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மாடலில் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற பிஎம்டபிள்யூ திட்டமிட்டு வரும் நிலையில், புதிய மினி கூப்பர் மாடல் புரட்சியை ஏற்படுத்த அடித்தளமாக இருக்கும் என தெரிகிறது.
அடுத்த தலைமுறை மினி கூப்பர் EV மாடல் 2024 மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை மாத வாக்கில் இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

"புதிய தோற்றம், பெயருடன் மீண்டும் அதன் வேர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய கார் கூப்பர் ஹேச்பேக் பெயருக்கு மாற்றாக கூப்பர் என்றே அழைக்கப்படும்" என மினி பிராண்டு தலைவர் ஸ்டெஃபைன் உஸ்ட் தெரிவித்து இருக்கிறார்.
தற்போதைய மினி ஹேச்பேக் மாடலில் இருப்பதை விட அகலமான டிராக், சிறிய முன்புற ஒவர்ஹேங், பெரிய வீல்கள் மற்றும் நீண்ட வீல்பேஸ் உள்ளிட்டவை சிறப்பானதாக இருக்கும் என தெரிகிறது. புதிய கூப்பர் மாடல் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் ஐந்து கதவுகள் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய மினி கூப்பர் EV மாடல் 40 கிலோவாட் ஹவர் அல்லது 54 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை அதிகபட்சம் 386 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்த கார் 2-வீல் டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.
Source: Autocar