என் மலர்
தமிழ்நாடு
தருமபுரியில் பெய்த கனமழையால் ராமக்காள் ஏரி நிரம்பி வழிந்து உபரிநீர் வெளியேற்றம்
- ஃபெஞ்சல் புயல் மழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது.
- ராமக்காள் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறுகிறது.
தருமபுரி:
தருமபுரி நகர எல்லையில் கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 265 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது.
இங்கிருந்து வெளியேறும் உபரிநீர், சனத்குமார நதியின் கால்வாயில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சேரும். தற்போது ஃபெஞ்சல் புயல் மழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது.
இந்த மழையால் தருமபுரியை சுற்றியுள்ள இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி உள்ளிட்ட ஏரிகள் நிறைந்து வெளியேறும் உபரி நீர் அருகே உள்ள ராமக்காள் ஏரிக்கு செல்வதால் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறுகிறது.
இந்த உபரிநீரில் ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் வெளியேறுவதால் அப்பகுதியில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை வலைகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர்.