என் மலர்
தமிழ்நாடு
அரக்கோணம்-சென்னை வழித்தடத்தில் நிற்காமல் சென்ற மின்சார ரெயில்: டிரைவரிடம் விசாரணை
- மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
- ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.40 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அரக்கோணத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் புளியமங்கலம், மோசூர் ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில் நிற்காமல் சென்றது. ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.
இதுகுறித்து பயணிகள் ரெயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் ரெயில் திருவள்ளூர் சென்றவுடன் ரெயில்வே அதிகாரிகள் டிரைவரை மாற்றி வேறு ஒரு டிரைவரை மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இது சம்பந்தமாக ரெயில்வே துறை அதிகாரிகள் டிரைவரிடம் தூக்க கலக்கத்தில் ரெயிலை இயக்கினாரா? அல்லது கவனக்குறைவால் நடந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.